கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி. தேர்வு முடிவுகள் ஒரு வாரம் தள்ளிவைப்பு

சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த,14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, நேற்று(அக்., 29) துவங்கிய சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>நவம்பர் 02 [November 02]....

  • பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)
  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)
  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)
  • தமிழறிஞர் பரிதிமாற் கடலைஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் இறந்த தினம்(1903)
  • நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)

>>>நவம்பர் 1 - கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த நாள்!

 
கன்னியாகுமரி மாவட்டம் 1956க்கு முன்னர் கேரளாவுடன் இணைந்திருந்தது. தமிழகத்துடன் இணைக்க போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது..

>>>நவம்பர் 01 [November 01]....

  • கேரளா, மைசூரு, ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் முறைப்படி பிரிக்கப்பட்டன (1956)
  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது (1956)
  • மைசூரு மாநிலம் கர்நாடகா எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது (1971)
  • ஐஸ்வர்யாராய் பிறந்ததினம் (1973)
  • வி.வி.எஸ். லக்ஸ்மன் பிறந்ததினம் (1974)

>>>இன்று - அக்.31: 'இந்தியாவின் இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்.

சர்தார் வல்லபாய் படேலை ஒரு ஆங்கிலேயர் நையாண்டித்தனமாக ''உம்முடைய கல்ச்சர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு சர்தார் படேல், ''என்னுடைய கல்ச்சர்... அக்ரிக்கல்ச்சர் (விவசாயம்)'' என்றார். அந்த வெள்ளைக்காரர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
இன்று-அக்.31:'இந்தியாவின் இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்.

>>>அக்.31 - இந்திரா காந்தி நினைவு தினம்.

 
இந்திரா ப்ரியதர்ஷனி 1917 நவம்பர் 19-ல் ஜவஹர்லால் நேரு-கமலா அம்மையாருக்கு மகளாகப் பிறந்து அரசியல் பின்புலம் கொண்ட தன் குடும்பச் சூழலைச் சாதுர்யமாகப் பயன்படுத்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார். இந்திரா காந்தியின் ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறின. வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். மன்னர் மானியங்களை ஒழித்தார். பாகிஸ்தானுடன் போரிட்டு, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்தார். தான் நினைத்தைச் செய்து முடிக்கும் ஆற்றல் நிறைந்தவராக அவர் விளங்கினார். இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் உரிய இந்திரா, தன்னுடைய பிரதமர் பதவிக்கு ஆபத்து வந்தபோது, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இது அவருடைய அரசியல் வாழ்வில் பெரும் விமர்சனத்தைத் தேடித் தந்தது.  அவர் தனது இறப்புக்கு முந்தைய நாள் 1984 அக்டோபர் 30 அன்று, ஒரிசாவில் (இன்றைய ஒடிசா) இவ்வாறு பேசினார்... ''நான் இன்று உள்ளேன், நாளை நான் இல்லாமலும் போகலாம். என் இறுதி மூச்சு வரை என் நாட்டுக்கான சேவையைச் செய்வேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும்." இன்று - அக்.31 - இந்திரா காந்தி நினைவு தினம்.

>>>அக்டோபர் 31 [October 31]....

  • வல்லபாய் படேல் பிறந்ததினம் (1875)
  • சுவாமி தயானந்த சரஸ்வதி இறந்ததினம் (1883)
  • முன்னாள் இந்திய பிரமதர் இந்திராகாந்தி நினைவுதினம் (1984)
  • மகாதீர் பின் முகமது 22ஆண்டு கால மலேசிய பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.(2003)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...