கல்வி உரிமை சட்டம், 2013ம் ஆண்டில் , முழுவதும் அமலாகும் என மத்திய மனித
வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார். ஆந்திர
மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வந்திருந்த எம்.எம்.பல்லம் ராஜூ,
செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசு கடந்த 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தினை கொண்டு வந்தது. மேலும்
கல்வித்துறை , தகவல் தொழிலநுட்ப கொள்கையை மேம்படுத்துவற்கான திட்டவரைவினை
தயார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் 2013-ம் ஆண்டிற்குள் கல்வி உரிமை
சட்டம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary Examination - Oct 2012 - Candidates C.V Query
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Tamil Nadu Teacher
Eligibility Test Supplementary 2012
Paper 2 : 8793
Candidates
Paper 1 : 10187
Candidates
Certificate Verification done in : 32
Districts
Certificate Verification Date:
Paper 2 C.V
06.11.2012 and 07.11.2012, Timing: 10.00 a.m
Paper 1 C.V
08.11.2012 and 09.11.2012 , Timing: 10.00 a.m
|
|
Dated:
03-11-2012
|
Chairman
|
>>>Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary Examination - Oct 2012 - Results - Candidates Individual Query
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Tamil Nadu Teacher
Eligibility Supplementary Test – 2012
02.11.2012
|
|
Dated:
02-11-2012
|
Chairman
|
>>>Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary Examination - Oct 2012 - Results - Candidates Individual Query
>>>நவம்பர் 04 [November 04]....
- பனாமா கொடி நாள்
- இத்தாலி ராணுவ படை தினம்
- வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)
- ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
- அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)
>>>டி.இ.டி., மறுதேர்வு முடிவு வெளியீடு:இந்த முறை 3 சதவீதம் பேர் தேர்ச்சி
டி.இ.டி., மறுதேர்வு முடிவை, டி.ஆர்.பி., நேற்று மாலை வெளியிட்டது.
ஜூலையில் நடந்த தேர்வில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி
பெற்ற நிலையில், தற்போதைய தேர்வில், 3 சதவீதம் பேர் தேர்ச்சி
பெற்றனர்.ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வை, 6.67 லட்சம் பேர்
எழுதினர். இதில், வெறும், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
முதல் தாள் தேர்வில் (இடைநிலை ஆசிரியர்), 1,735 பேரும், இரண்டாம் தாள்
தேர்வில் (பட்டதாரி ஆசிரியர்), 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பல
தரப்பில் இருந்தும், விமர்சனம் எழுந்ததால், அக்டோபர், 14ல் நடந்த
டி.இ.டி., மறுதேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கியதுடன், கேள்வித்தாள் மிகக்
கடினமாக இல்லாத வகையிலும், டி.ஆர்.பி., பார்த்துக் கொண்டது. இதன் காரணமாக,
தேர்ச்சி சதவீதம், ஓரளவுக்கு நன்றாக இருக்கும் என, டி.ஆர்.பி.,
எதிர்பார்த்தது.
தேர்ச்சி பெற்றோர்: நேற்று மாலை வெளியான தேர்வு
முடிவில், 3 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. முதல் தாள்
தேர்வில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 8,849 பேரும்
தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இந்த, 19 ஆயிரத்து
246 பேரும், நிர்ணயிக்கப்பட்ட, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான
மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 6ம் தேதி, 32 மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதங்களை, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. வீட்டு முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட மாட்டாது.தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சுய கையொப்பம் இட்ட இரண்டு செட் நகல் சான்றிதழ்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கூடுதலாக, சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அட்டையை, எடுத்துச்செல்ல வேண்டும்.
இணையத்தில் வெளியீடு: தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டன. தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்தால், மதிப்பெண்களுடன் கூடிய, தேர்வு முடிவுகளை அறியலாம்.
தேர்வு முடிவு-முழு விவரம்
முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்)
எழுதியோர்-2,78,725
தேர்ச்சி பெற்றோர்-10,397
சதவீதம்-3.73
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்)
எழுதியோர்-3,77,973
தேர்ச்சி பெற்றோர்-8,849
சதவீதம்-2.34
மொத்தம்
எழுதியோர்-6,56,698
தேர்ச்சி பெற்றோர்-19,246
சதவீதம்-2.93
ஜூலை தேர்வை எழுதியோர்-6,67,483
தேர்ச்சி பெற்றோர்-2,448
சதவீதம்-0.33

>>>கணினி வழி தேர்வு புரட்சி: டி.என்.பி.எஸ்.சி., அறிமுகம்: எளிமையாக இருக்க வழிமுறைகள்
டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்துவரும் சீர்திருத்த திட்டங்களின் வரிசையில்,
அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வு முறை திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிச., 9ம் தேதி நடக்கும் தோட்டக் கலை அலுவலர்
உள்ளிட்ட, நான்கு பதவிகளுக்கான தேர்வுகள், இந்த முறையில் நடக்கும் என,
தேர்வாணைய செயலர் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு:தேர்வுக்கான ஆண்டு திட்டம், இணையவழி விண்ணப்பம், இணையவழி நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு மையங்களில் வீடியோ பதிவு கண்காணிப்பு முறை, "கீ-ஆன்சர்' வெளியிடுதல், இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு, பதவி ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு என, பல்வேறு சீர்திருத்தங்கள், போட்டித் தேர்வு முறைகளில் செய்யப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக, கணினி வழி தேர்வுகளை நடத்த, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, தோட்டக் கலை அலுவலர் - 94 பணியிடங்கள், உதவிப் பொறியாளர் - தானியங்கி ஊர்திகள் - 1 பணியிடம், முதுநிலை ஆசிரியர் - 3 பணியிடங்கள், பள்ளி உதவி ஆசிரியர் - 3 பணியிடங்கள் ஆகிய பதவிகளுக்கு, டிச., 9ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. கணினி வழி தேர்வு, தற்போது நடைமுறையில் உள்ள, "ஓ.எம்.ஆர்.,' விடைத்தாளில் விடை அளிக்கும் கொள்குறி வகை தேர்வு போன்றது. தேர்வர்கள், குறித்த நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்ததும், திரையில் கேள்விகளும், பதில்களும் தோன்றும். கேள்விகளை படித்து, நான்கு விடைகளில், சரியான ஒரு விடையை தேர்வு செய்து, "மவுஸ்' மூலம், "கிளிக்' செய்ய வேண்டும்; அவ்வளவு தான்.விடைகளை மறு ஆய்வு செய்யவும், மாற்றவும், ஒரு கேள்வியை விடுத்து, அடுத்த கேள்விக்குச் செல்லவும், வழி வகை செய்யப்பட்டுள்ளது. கேள்விகளும், விடைகளும் வரிசை முறையின்றி கலந்து, தேர்வர்களுக்கு, கணினி திரையில் தோன்றச் செய்வதால், ஒரு தேர்வர், அருகில் இருக்கும் மற்றொரு தேர்வரை பார்த்து, விடை அளிக்க முடியாது. மேலும், தேர்வர்களின் நடவடிக்கைகள், கேமரா வழியாக கண்காணிக்கப்படுவதால், இந்த தேர்வு முறை மிகவும் நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
* இந்த வகை தேர்வுகளில், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்ய வேண்டிய வேலை இல்லை. அதனால், தேர்வு முடிவுகள், விரைவில் வெளியாகும்.
* இந்த தேர்வை எழுத, அதிகமான கணினி அறிவு தேவையில்லை. "மவுசை' பயன்படுத்தி, விடைகளை, "கிளிக்' செய்ய தெரிந்திருந்தால் போதும்.
* தேர்வு முடிந்ததும், தேர்வர்கள், தாங்கள் சமர்பித்த விடைகளின் விவரங்களை, "பிரின்ட்' செய்து கொள்ளலாம்.* இந்த வகை தேர்வுக்கு, தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக, தேர்வாணைய இணையதளத்தில், மாதிரி தேர்வு பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, தேர்வர்கள் தயாராகலாம்.
* டிச., 9ல் நடக்கும் தேர்வுக்கு, 23ம் தேதி வரை, இணையதளம் (www.tnpsc.tn.nic.in) வழியாக விண்ணப்பிக்கலாம்.

>>>குரூப் 2 தேர்வு வெற்றி ரகசியங்கள்
நாளை குரூப்-2 தேர்வு நடக்கிறது. அன்று மதியம், இந்து அறநிலையத்துறையின்
கீழ்வரும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கான குரூப்-7 "பி' தேர்வும்
நடக்கிறது. இத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய ஆலோசனைகள்:
சமீபத்தில்
நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட்டு,
சிந்தனைத் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனப்பாடம் செய்து
எழுதியவர்கள், இனி சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி எப்போது நடந்தது என்ற தகவலை மட்டும் தெரிந்து கொள்ளாமல், அது நடந்ததற்கான காரணங்களை அறிய வேண்டும். முந்தைய
வினா தாள்களில் பொதுத் தமிழ் எளிமையாக இருந்தது. பெரும்பாலான மாணவர்கள்,
90 சதவீத மதிப்பெண்களை பெறுவது சாத்தியமாக இருந்தது. மாற்றியமைக்கப்பட்ட
வினாத்தாளில் 80 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே சவாலான விஷயம். தமிழில்
அதிகபட்ச மதிப்பெண்களை பெறுபவர்களால் தான், தேர்வில் சாதிக்க முடியும். சொற்களை ஒழுங்குபடுத்தி, சரியான சொற்றொடர் அமைக்கும் பகுதியில் புகழ்பெற்ற செய்யுள் வரிகளே வினாக்களாக தரப்படுகின்றன. "பொருள் தருக'
பகுதி வினாக்கள், பொருத்துக வடிவில் கேட்கப்படுகின்றன. ஆழமான பொருள் கொண்ட
இவ்வகை வினாக்களுக்கு விடையளிக்க, பிளஸ் 1, பிளஸ் 2 தமிழ்ப் புத்தகத்தில்
செய்யுள் பகுதிளை படிக்க வேண்டும். பகுபத உறுப்பு இலக்கணம்,
சீர்பிரித்தல், அசைபிரித்தல், எதுகை, மோனை, அளபெடைகள், யாப்பு, ஆகு
பெயர்கள் ஆகியவை வினாத்தாளில் புதிய அம்சங்கள். இவற்றுக்கு சரியாக
விடையெழுத நல்ல பயிற்சியும், பரிச்சயமும் அவசியம். இவை ஒன்பதாம், பத்தாம்
வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்படுகின்றன. விடைக்கேற்ற வினாவை
தேர்வு செய்யும் பகுதியில், செய்யுள் வடிவத்திலேயே வினாக்கள் இடம் பெறும்.
பொதுவாக திருக்குறள், செய்யுள், பழமொழிகளிலிருந்தே கேள்விகள்
தரப்படுகின்றன. இதற்கு விடையளிக்க, ஆறிலிருந்து பிளஸ் 2 வரை உள்ள
திருக்குறள், செய்யுளை படித்தால் போதும். இலக்கணக் குறிப்பு,
வாக்கிய வகைகளை தேர்வு செய்தல் ஆகியவற்றுக்கு உதாரணம் கேட்பதை விட,
அவற்றுக்கு வரையறைகள் கேட்கப்படுகின்றன. இந்த வினாக்கள் எளிமையாக
தோன்றினாலும், நுட்பமான வேறுபாடுகள் கொண்டவை. கவனமாக பதிலளிக்க வேண்டும். நூல்
மற்றும் நூலாசிரியர்கள் குறித்த வினாக்களில் நவீன எழுத்தாளர்கள்
பற்றியும், நூல்கள் பற்றியும் விவரங்களை தொகுத்து வைத்துக் கொள்வது நல்லது.
சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள், பரிசு பெற்ற நூல்கள், ஞான பீட பரிசு
பெற்றவர்கள் ஆகியோரையும் அறிந்து கொள்ள வேண்டும். வரலாறு பாடத்துக்கு,
6,7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களே போதுமானவை. இப்பாடங்களில் உள்ள
தலைப்புகளை ஒட்டி, மேலும் சில தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டால் நல்ல
மதிப்பெண் பெறலாம். புவியியல் பாடத்துக்கு 7,8ம் வகுப்பு பாடப் புத்தகங்களும், பொருளியலுக்கு 9,10, பிளஸ் 1 பாடப்புத்தகங்களும் போதுமானவை. அறிவியல்
பாடத்துக்கு, 6-10 வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல் பாடங்களும், 6ம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உயிரியல் பாடங்களும் அவசியம். புத்தகத்தில்
உள்ள பயிற்சி வினாக்களையும், விளக்கப் படங்களையும் படிக்க வேண்டும். நடப்பு
நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க, தினசரி
செய்தித்தாள்கள் படித்து வருவது தான் ஒரே வழி. சமீபத்திய நிகழ்வுகள்
அடங்கிய புத்தகங்கள் ஓரளவு பயன் தரும். எல்லாவற்றையும் விட, தேர்வு
எழுதும் மூன்று மணி நேரமும் நேரத்தை சரியாக பயன்படுத்தி, விரைவாக அனைத்து
வினாக்களுக்கும் விடையளிப்பது அவசியம்.
தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்கள் வசம்.
தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், வெற்றி உங்கள் வசம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...