கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>C.S.S.E.-I (Group-II) Answer Keys (Date of Examination: 04-11-2012)
Tentative Answer Keys
Sl.No.
|
Post & Subject Name
|
(Posts included in Combined Subordinate Services Examinations - I
(Date of Examination:04.11.2012 FN & AN)
|
|
1
|
|
2
|
|
Note: Right
Answer has been tick marked in the respective choices for each question.
Representations if any shall be sent so as to reach the Commission's Office
within 7 days. Representations received after 14th November 2012 will receive no
attention.
|
>>>குரூப்-2 தேர்வுக்கு"கீ-ஆன்சர்' வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், குரூப்-2 தேர்வு, "கீ-ஆன்சர்' நேற்று
வெளியிடப்பட்டது.தேர்வாணையம், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட
பதவிகளில், காலியாக உள்ள, 3,687 இடங்களை நிரப்ப, 4ம் தேதி, போட்டித் தேர்வை
நடத்தியது. 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 3.8 லட்சம் பேர்
மட்டுமே பங்கேற்றனர். 2.7 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கவில்லை. தற்போதைய
நிலவரப்படி, ஒரு பதவிக்கு, 103 பேர் போட்டி, என்ற நிலை உள்ளது.இந்நிலையில்,
தேர்வின் உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்), தேர்வாணைய
இணையதளத்தில் நேற்று
வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபணைகளை, 14ம் தேதிக்குள்,
தேர்வர்கள் தெரிவித்த பின், நிபுணர்களின் ஆய்வுக்குப் பின், இறுதி விடைகள்
வெளியிடப்படும்.
>>>ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் கலந்தாய்வு
ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின்
மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னையில்
கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.கடந்த, 2010-11ம் ஆண்டில், ஆதிதிராவிடர் நலப்
பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு,
ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில்,
தேர்வானவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள
ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடக்கும் என,
அரசு அறிவித்துள்ளது. மேலும், தேர்வானவர்கள், உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
>>>"கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே' - அரசு ஊழியர்கள் புலம்பல்
தீபாவளி
அட்வான்ஸ் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தும், "கைக்கு எட்டியும்
வாய்க்கு எட்டாததாக' உள்ளது என ஊழியர்கள் புலம்புகின்றனர்.தீபாவளி
அட்வான்ஸ் ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி தர ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள்
கோரிக்கை விடுத்தன. அரசும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது. இதற்கான
உத்தரவு(எண்- 388, நாள்: 6.11.2012) 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில்
நவ., 6ம் தேதிக்கு பின்பு அட்வான்ஸ் பெறுவோருக்கே ரூ. 5 ஆயிரம்
வழங்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகைக்கு, ஒரு மாதத்திற்கு
முன் அட்வான்ஸ் தொகை வழங்கப்படும். தீபாவளிக்காக 75 சதவீத ஊழியர்கள்,
ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள பழைய அட்வான்ஸ் ரூ. 2 ஆயிரத்தை பெற்றனர்.
முதல்வரின் அறிவிப்புக்கு மாறாக, நவ.,6ல் அரசாணை வெளியாகி, அதற்குபின்னர்
கேட்பவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் என்று கூறியதால், பலர் கைக்கு எட்டியும்
வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளனர். அட்வான்ஸ் வாங்கிய தொகையை இன்னும்
பிடித்தம் செய்ய துவங்காததால், தங்களுக்கும் இந்த அரசாணை பயன்படும்
வகையில், உத்தரவு பிறப்பித்தால் நல்லது என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
>>>கல்வி அறிவே வன்முறையை தீர்க்க மிகச்சிறந்த மருந்து : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு
"கல்வி அறிவே வன்முறைக்கு மிகச்சிறந்த மாற்று மருந்து,'' என, ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி கூறினார். சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூரில், மாணவர்
விடுதி அடிக்கல் நாட்டு விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின், 150வது ஆண்டு
விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
பேசியதாவது: அமைதி, சகிப்புத் தன்மை மற்றும் மனிதாபிமானம் அதிகரிக்க,
கல்வியே காரணமாக உள்ளது. இந்த சமுதாயத்தில் காணப்படும், வன்முறை, சகிப்புத்
தன்மையின்மை, மக்களிடையே காணப்படும் பிரிவினை போன்றவற்றை தீர்க்க,
மிகச்சிறந்த மாற்று மருந்து கல்வியே. கல்வி கற்பதன் மூலம், இந்தப்
பிரச்னைகளை தீர்க்கலாம். எனவே, இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும்
வாய்ப்புகளை, நல்ல முறையில் பயன்படுத்தி, தங்களையும், இந்த நாட்டையும்
முன்னேற்ற வேண்டும். நம் நாட்டில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள்
உள்ளன. கிட்டத்தட்ட மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர், கிராமங்களில்
வசிக்கின்றனர். என்ன தான், மருத்துவமனைகள், கட்டமைப்பு வசதிகள்
இருந்தாலும், அங்கு சென்று பணியாற்ற மருத்துவர்கள் தயாராக இல்லை. இந்த
சமுதாய நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாத வரை,
இப்பிரச்னைக்கு விமோசனமே இல்லை. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை,
இளைஞர்கள் உள்வாங்கிக் கொண்டு அதை, இந்நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த
வேண்டும். நாம் முக்கியமானவராக இருப்பது நல்லதே, அதே நேரத்தில், நல்லவராக
இருப்பது அதை விட நல்லது. இவ்வாறு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...