கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

>>>25 ஆண்டுகாலம் பணிமுடித்த அரசு ஊழியர்களுக்கு ரூ.2000/- ஊக்கத்தொகையுடன் சான்றிதழ் - அரசாணை வெளியீடு

>>>உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை அருகாமையிலுள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>C.S.S.E.-I (Group-II) Answer Keys (Date of Examination: 04-11-2012)

Tentative Answer Keys

 Sl.No.
Post & Subject Name
(Posts included in Combined Subordinate Services Examinations - I
 (Date of Examination:04.11.2012 FN & AN)
 
1
2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 14th November 2012 will receive no attention.

>>>குரூப்-2 தேர்வுக்கு"கீ-ஆன்சர்' வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், குரூப்-2 தேர்வு, "கீ-ஆன்சர்' நேற்று வெளியிடப்பட்டது.தேர்வாணையம், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 3,687 இடங்களை நிரப்ப, 4ம் தேதி, போட்டித் தேர்வை நடத்தியது. 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 3.8 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். 2.7 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஒரு பதவிக்கு, 103 பேர் போட்டி, என்ற நிலை உள்ளது.இந்நிலையில், தேர்வின் உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்), தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபணைகளை, 14ம் தேதிக்குள், தேர்வர்கள் தெரிவித்த பின், நிபுணர்களின் ஆய்வுக்குப் பின், இறுதி விடைகள் வெளியிடப்படும்.

>>>ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.கடந்த, 2010-11ம் ஆண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வானவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. மேலும், தேர்வானவர்கள், உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

>>>"கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே' - அரசு ஊழியர்கள் புலம்பல்

தீபாவளி அட்வான்ஸ் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தும், "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாததாக' உள்ளது என ஊழியர்கள் புலம்புகின்றனர்.தீபாவளி அட்வான்ஸ் ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி தர ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அரசும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது. இதற்கான உத்தரவு(எண்- 388, நாள்: 6.11.2012) 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில் நவ., 6ம் தேதிக்கு பின்பு அட்வான்ஸ் பெறுவோருக்கே ரூ. 5 ஆயிரம் வழங்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகைக்கு, ஒரு மாதத்திற்கு முன் அட்வான்ஸ் தொகை வழங்கப்படும். தீபாவளிக்காக 75 சதவீத ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள பழைய அட்வான்ஸ் ரூ. 2 ஆயிரத்தை பெற்றனர். முதல்வரின் அறிவிப்புக்கு மாறாக, நவ.,6ல் அரசாணை வெளியாகி, அதற்குபின்னர் கேட்பவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் என்று கூறியதால், பலர் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளனர். அட்வான்ஸ் வாங்கிய தொகையை இன்னும் பிடித்தம் செய்ய துவங்காததால், தங்களுக்கும் இந்த அரசாணை பயன்படும் வகையில், உத்தரவு பிறப்பித்தால் நல்லது என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...