கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அண்ணாமலை பல்கலை நிதி நெருக்கடி குறித்து விசாரணை : அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலையில், நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய, பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்த வேண்டும், என அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறினார். அவர் கூறியதாவது: அண்ணாமலை பல்கலை ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, 50 சதவீதம் ஊதியம் என்றும், 50 சதவீதம் ஆட்குறைப்பு செய்யவும் முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேவையற்ற பணி நியமனங்களை செய்துவிட்டு, நிதி நெருக்கடி என காரணம் காட்டி, 13 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் முடிவெடுத்திருப்பது, பல்கலையின் மாண்பிற்கு ஏற்றதல்ல. நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்தவேண்டும். ஆசிரியர், அலுவலர் பணி நியமனம் குறித்த விதிகளை, அண்ணாமலை பல்கலையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு, குழு அமைத்து சிறந்த கல்வியாளர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு, பாதி சம்பள அறிவிப்பை, திரும்ப பெறவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும், என்றார்.

>>>14 புதிய சார் கருவூலங்கள் அமைக்க உத்தரவு

தமிழகம் முழுவதும், 14 வருவாய் வட்டங்களில், புதிய சார் கருவூலங்கள் அமைக்கவும், ஏற்கனவே வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் கருவூலங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த நிதியாண்டில் புதியதாக, அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், நாகை, பெரம்பலூர், நீலகிரி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில், தலா ஒன்றும்; சேலத்தில், இரண்டு இடங்களிலுமாக, மொத்தம், 14 சார் கருவூலங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கருவூலத்திலும் பணியாற்ற, புதிதாக, ஆறு பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும். மொத்தமுள்ள, 206 சார் கருவூலங்களில், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும், 54 கருவூலங்களில், 14 கருவூலங்களுக்கு, 7.70 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடங்கள் கட்டவும், தூத்துக்குடி மாவட்ட கருவூலத்திற்கு, 1.37 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

>>>இன சுழற்சி வாரியாக தேர்ச்சி பட்டியல் வெளியிட கோரிக்கை

"டி.இ.டி., மறுதேர்வு தேர்ச்சி விவரங்களை, இன சுழற்சி வாரியாக வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள், இன சுழற்சி வாரியாக, விவரமாக, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆனால், அக்., 14ல் நடந்த மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை, இன சுழற்சி வாரியாக, எந்த விவரங்களையும், டி.ஆர்.பி., வெளியிடவில்லை. மறுதேர்வில் தேர்ச்சி பெற்ற, 19 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இன சுழற்சி வாரியான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். டி.இ.டி., தேர்வு வழியாக, தேர்வு செய்யப்பட உள்ள, 22 ஆயிரம் ஆசிரியர்களையும், இன சுழற்சி வாரியாக பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன், இன சுழற்சி பட்டியலை வெளியிட்டால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிட்ட பின், இன சுழற்சி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவை தெரிவித்தன."டி.இ.டி., மறுதேர்வு தேர்ச்சி விவரங்களை, இன சுழற்சி வாரியாக வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள், இன சுழற்சி வாரியாக, விவரமாக, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆனால், அக்., 14ல் நடந்த மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை, இன சுழற்சி வாரியாக, எந்த விவரங்களையும், டி.ஆர்.பி., வெளியிடவில்லை. மறுதேர்வில் தேர்ச்சி பெற்ற, 19 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இன சுழற்சி வாரியான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். டி.இ.டி., தேர்வு வழியாக, தேர்வு செய்யப்பட உள்ள, 22 ஆயிரம் ஆசிரியர்களையும், இன சுழற்சி வாரியாக பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன், இன சுழற்சி பட்டியலை வெளியிட்டால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிட்ட பின், இன சுழற்சி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவை தெரிவித்தன.

>>>தலைமை செயலக ஊழியர்களின் "டென்ஷனை' குறைக்க யோகா பயிற்சி

தலைமைச் செயலக ஊழியர்கள் நலனுக்காக, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா பயிற்சி மையம் ஆகியவை விரைவில் அமைய உள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில், சட்டசபை, நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவற்றில், தமிழக அரசின் அனைத்து துறைகளின் நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை, 8,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலத்தைப் பேணவும், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைக்க வேண்டும் என்று, தலைமைச் செயலக சங்கத்தினர், அரசிற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், எம்.எல்.ஏ., விடுதியில், பெண் எம்.எல்.ஏ.,க்களுக்கு உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையத்திற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. முதல் கட்டமாக, தலைமைச் செயலக வளாகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள, தேசிய தகவல் மையத்தின் பின்புறம், இந்த உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையத்திற்கான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, செயலர் விஜயகுமார் கூறியதாவது: இட நெருக்கடி மிக்க, தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது தலைமைச் செயலக ஊழியர்களுக்கான, உடற்பயிற்சிக் கூடத்திற்கு இடத்தை முதல்வர் ஒதுக்கித் தந்துள்ளார். ஊழியர்களின், மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. யோகா மையத்தில், காலை, மதிய இடைவேளை, மாலை நேரங்களிலும், உடற்பயிற்சிக் கூடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களிலும், ஊழியர்கள் பயிற்சி பெறலாம். இதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகாவிற்கு விளையாட்டுத் துறை மூலம் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

>>>அரசுபள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு

அரசு பள்ளிகளில், 5,000 ஆய்வக உதவியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 1980ல், 400 ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடங்களும், '81ல், 500 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், இப்பணியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பின், தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனங்கள் நடந்தன. தற்போது, அனைத்து வகை பணி நியமனங்களும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே நடந்து வருகின்றன. இதனால், ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா என, கேள்வி எழுந்தது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரம் கூறியதாவது: அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே, இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் தான் நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில், கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும். மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

>>>கண் மருத்துவ பட்டய படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

கண் மருத்துவ பட்டய படிப்பு மற்றும் மருத்துவம் சார் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகிறது. மருத்துவ பதிவேடு அறிவியல், பல்வேறு மருத்துவம் சார் சான்றிதழ் படிப்புகள், செவிலியர் உதவியாளர் பட்டய படிப்பு மற்றும் கண் மருத்துவ பட்டய படிப்பு ஆகியவற்றில் சேர, இன்று முதல், இம்மாதம், 24ம் தேதி வரை, சென்னை மருத்துவக் கல்லூரியில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்ப கட்டணம், 200 ரூபாயை, ஏதேனும் ஒரு தேசியமய வங்கியில், சென்னையில் மாற்றத்தக்க வகையில், " The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 10' என்ற பெயரில், டி.டி.,யாக எடுக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>டி.என்.பி.எஸ்.சி., செயலர் பொறுப்பேற்பு

டி.என்.பி.எஸ்.சி., செயலராக நியமிக்கப்பட்ட விஜயகுமார், நேற்று பொறுப்பேற்றார். தேர்வாணையத்தின் செயலராக இருந்த உதயசந்திரன், அக்., 22ம் தேதி, குன்னூர் தேயிலை தோட்டக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் - செயலரான விஜயகுமார், தேர்வாணையத்தின் புதிய செயலராக அறிவிக்கப்பட்டிருந்தார். அரசின் உத்தரவு வந்ததும், உடனடியாக செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகவில்லை. தேர்வாணையத்தில், அவரை தக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி, செயலர் பதவியில் இருந்து, உதயசந்திரன் விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின் புதிய செயலராக, விஜயகுமார், நேற்று காலை பொறுப்பேற்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...