ரேஷன் கார்டுக்கு பதில், பயோமெட்ரிக் கார்டு, 2013ம் ஆண்டில்
பயன்பாட்டுக்கு வர சாத்தியமில்லை என, அதிகாரிகள் கருதுகின்றனர்.தமிழகம்
முழுவதுமாக, 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன; போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, முழு தணிக்கை செய்து,
பல லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. தேவையான
ஆவணங்களை வழங்கினால், ஒரு மாத காலத்தில், ஆய்வுக்கு பின், புதிய ரேஷன்
கார்டு வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. பத்து மாதத்தில், எட்டு மாவட்டங்களில், புதிய ரேஷன் கார்டு கேட்டு
விண்ணப்பித்தோருக்கு, புதிய கார்டு வழங்கப்பட்டது. இதுபற்றி
சந்தேகம் எழுந்தது. மீண்டும் போலி கார்டுகளை கண்டறிய இரண்டாம் கட்ட தணிக்கை
நடக்கிறது.இதுபற்றி வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில்,
முதியோர் உதவித் தொகை,1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ரேஷன்
கார்டிலிருந்து, பெற்றோரை பிரித்து, தனி கார்டு வாங்கி, தவறான
முறையில், முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு
வெளியானது. மாவட்டந்தோறும், 1,000 புதிய ரேஷன்கார்டுகள், முதியோர் உதவித்
தொகை பெறுவதற்காகவே வாங்கியுள்ளனர். எட்டு மாவட்டங்களிலும், போலியாக
வாங்கிய ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டது. கடந்த,
எட்டு மாதங்களாக, இப்பணி நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்துடன், புதிய
கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு, ஏற்கனவே விண்ணப்பித்து, தகுதி
உடையவர்களுக்கு மட்டும், புதிய கார்டுகள் வழங்கப்படுகின்றன. தணிக்கை
முடிந்த பின், பயோ மெட்ரிக் கார்டுகளுக்கு, போட்டோ எடுத்தல், பத்து
வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்தல், ரேஷன்
ஊழியர்களின், கைரேகை பதிவு செய்தல், கடைகளுக்கான கணினி மற்றும் ரேகை பதிவு
இயந்திரம் வாங்கி, தனி சாப்ட்வேர் மூலமாக,இணைத்து, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இப்பணிகள்
நடைபெற ஓராண்டுக்கும் மேலாகும். தமிழகம் முழுவதுமாக தற்போது, 10 சதவீதம்
தான் பணி நடந்துள்ளது. அதுவும், வனம் மற்றும் கிராமப்புற பகுதிகளில்
முதற்கட்டமாக இப்பணி நடந்துள்ளது. எனவே, 2013ம் ஆண்டு பயன்பாட்டுக்கு
வழக்கம் போல, கூடுதல் இணைப்புத் தாள் இணைக்கப்படும். பயோமெட்ரிக் கார்டு
வழங்கும் திட்டம், 2013ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர சாத்தியமில்லை.என
அதிகாரிகள் கூறினர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>நவம்பர் 17 [November 17]....
நிகழ்வுகள்
- 1292 - ஜோன் பலியல் ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
- 1511 - ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
- 1558 - இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
- 1796 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
- 1820 - கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
- 1831 - எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
- 1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
- 1873 - பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
- 1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
- 1903 - ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
- 1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
- 1922 - முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
- 1939 - செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1950 - 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
- 1968 - அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 1970 - வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
- 1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
- 1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
- 1989 - பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
- 2003 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.
பிறப்புக்கள்
- 1904 - இசாமு நொகுச்சி சிற்பக் கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ. 1988)
- 1909 - சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
- 1920 - ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)
- 1927 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
இறப்புகள்
- 1558 - இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)
சிறப்பு நாள்
- அனைத்துலக மாணவர் நாள்
>>>உலகின் ‘ஏழ்மை’யான அதிபர்!
ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள் வருணிக்கின்றன.
உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை இழந்த நாயைப் பராமரிக்கிறார். அவருக்கு இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே காவல்.
தனது மாதச் சம்பளமான 12,000 டாலர்களில் 90 சதவீதத்தை தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்குச் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010-ல் இவரது சொத்து மதிப்பு 1,800 டாலர்கள். இந்த ஆண்டு, தனது மனைவியின் சொத்தில் பாதியைத் தன்னுடையச் சொத்துடன் சேர்த்துள்ளார். இதனால், சுமார் 2 லட்சம் டாலர்களாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால், இந்தச் சொத்து மதிப்பு, துணை அதிபரின் சொத்து மதிப்பைவிட மிகவும் குறைவுதான்.
‘‘என்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு என்னால் வாழ முடிகிறது’’ என்று சாதாரணமாகச் சொல்லும் இவர், கடந்த 2009-ல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உருகுவே ஜனநாயக நாடாவதற்கு முன்பு ஆறு முறை சுடப்பட்டிருக்கிறார்; 14 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கை முறையையை நிர்ணயித்தது சிறை வாழ்க்கைதான் என்று அவர் நினைவுகூர்கிறார்.
‘‘என்னை ஏழை அதிபர் என்கிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மேலும் மேலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என பாடுபடுகிறார்களே அவர்கள்தான் ஏழைகள்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் இந்த அதிபர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ரியோ+20 மாநாட்டில் இவர் நிகழ்த்திய உரையின் சிறுபகுதி இது:
‘‘இந்த மதிய வேளை முழுவதும் நாம் நீடித்த மேம்பாடு பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். வறுமை நிலையைப் போக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், நாம் என்ன நினைக்கிறோம்? வளர்ந்த நாடுகளைப் போலவே மேம்பாடும் நுகர்வும் நமக்கு வேண்டுமா? உங்களை ஒன்று கேட்கிறேன்... ஜெர்மனியில் வீட்டுக்கு ஒரு கார் இருப்பது போலவே இந்தியாவிலும் வீட்டுக்கு ஒரு கார் இருந்தால் என்ன ஆகும்? நமக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் மிச்சம் இருக்குமா?
சரி, 700 கோடி கார்களால் ஏற்படும் கழிவுகளை இந்தப் பூமிதான் தாங்குமா? இதுபோன்ற நுகர்வு கலாசாரம் நம் கிரகத்தையை அழித்துவிடாதா?’’
உலகத் தலைவர்கள் பலரும் நுகர்வுடன் கூடிய வளர்ச்சியை எட்டும் விஷயத்தில் கண்மூடித்தனமாக யோசிப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் அதிபர் ஜோஸ் முஜிக்கா.
எளிமையான வாழ்க்கை முறையால் மக்களை வசீகரித்திருந்தாலும், அண்மைக்காலமாக சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார முன்னேற்றங்கள் ஏதும் நாட்டில் இல்லை என்பது இவர் மீதான விமர்சனப் பார்வை.
எனினும், ஒரு நாட்டின் அதிபராக இருந்துகொண்டு எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து, சமகால தலைவர்களுக்கு பாடம் புகட்டுகிறார் என்பதை மட்டும் மறுக்க முடியாது.

>>>அண்ணாமலை பல்கலை நிதி நெருக்கடி குறித்து விசாரணை : அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலையில், நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை
கண்டறிய, பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்த வேண்டும், என
அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன்
கூறினார். அவர் கூறியதாவது: அண்ணாமலை பல்கலை ஆசிரியர் மற்றும்
அலுவலர்களுக்கு, 50 சதவீதம் ஊதியம் என்றும், 50 சதவீதம் ஆட்குறைப்பு
செய்யவும் முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேவையற்ற பணி
நியமனங்களை செய்துவிட்டு, நிதி நெருக்கடி என காரணம் காட்டி, 13 ஆயிரம்
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில்
முடிவெடுத்திருப்பது, பல்கலையின் மாண்பிற்கு ஏற்றதல்ல. நிதி நெருக்கடிக்கு
உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு
விசாரணை நடத்தவேண்டும். ஆசிரியர், அலுவலர் பணி நியமனம் குறித்த விதிகளை,
அண்ணாமலை பல்கலையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு,
குழு அமைத்து சிறந்த கல்வியாளர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்குறைப்பு, பாதி சம்பள அறிவிப்பை, திரும்ப பெறவில்லை எனில், போராட்டங்கள்
நடத்தப்படும், என்றார்.
>>>14 புதிய சார் கருவூலங்கள் அமைக்க உத்தரவு
தமிழகம் முழுவதும், 14 வருவாய் வட்டங்களில், புதிய சார் கருவூலங்கள்
அமைக்கவும், ஏற்கனவே வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார்
கருவூலங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த நிதியாண்டில் புதியதாக, அரியலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், நாகை, பெரம்பலூர், நீலகிரி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில், தலா ஒன்றும்; சேலத்தில், இரண்டு இடங்களிலுமாக, மொத்தம், 14 சார் கருவூலங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கருவூலத்திலும் பணியாற்ற, புதிதாக, ஆறு பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும். மொத்தமுள்ள, 206 சார் கருவூலங்களில், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும், 54 கருவூலங்களில், 14 கருவூலங்களுக்கு, 7.70 கோடி ரூபாய் செலவில், சொந்த கட்டடங்கள் கட்டவும், தூத்துக்குடி மாவட்ட கருவூலத்திற்கு, 1.37 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

>>>இன சுழற்சி வாரியாக தேர்ச்சி பட்டியல் வெளியிட கோரிக்கை
"டி.இ.டி., மறுதேர்வு தேர்ச்சி விவரங்களை, இன சுழற்சி வாரியாக வெளியிட
வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின்
விவரங்கள், இன சுழற்சி வாரியாக, விவரமாக, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆனால்,
அக்., 14ல் நடந்த மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை, இன
சுழற்சி வாரியாக, எந்த விவரங்களையும், டி.ஆர்.பி., வெளியிடவில்லை.
மறுதேர்வில் தேர்ச்சி பெற்ற, 19 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்து விட்டது. இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து
வருகின்றன. எனவே, இன சுழற்சி வாரியான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும்
என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சிவக்குமார்
வலியுறுத்தியுள்ளார். டி.இ.டி., தேர்வு வழியாக, தேர்வு செய்யப்பட உள்ள, 22
ஆயிரம் ஆசிரியர்களையும், இன சுழற்சி வாரியாக பட்டியலை தயாரித்து வெளியிட
வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து,
டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது: இறுதி தேர்வுப் பட்டியல்
வெளியிடுவதற்கு முன், இன சுழற்சி பட்டியலை வெளியிட்டால், தேவையற்ற
குழப்பங்கள் ஏற்படும். எனவே, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிட்ட பின், இன
சுழற்சி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவை
தெரிவித்தன."டி.இ.டி., மறுதேர்வு தேர்ச்சி விவரங்களை, இன சுழற்சி வாரியாக வெளியிட

தெரிவித்தன.
>>>தலைமை செயலக ஊழியர்களின் "டென்ஷனை' குறைக்க யோகா பயிற்சி
தலைமைச் செயலக ஊழியர்கள் நலனுக்காக, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா
பயிற்சி மையம் ஆகியவை விரைவில் அமைய உள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில்,
சட்டசபை, நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவற்றில், தமிழக அரசின் அனைத்து
துறைகளின் நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில், உயர்
அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை, 8,000க்கும் மேற்பட்டோர்
பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை
போக்கவும், உடல் நலத்தைப் பேணவும், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம்
அமைக்க வேண்டும் என்று, தலைமைச் செயலக சங்கத்தினர், அரசிற்கு பல ஆண்டுகளாக
கோரிக்கை விடுத்திருந்தனர். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும்,
எம்.எல்.ஏ., விடுதியில், பெண் எம்.எல்.ஏ.,க்களுக்கு உடற்பயிற்சிக் கூடத்தை
திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்களுக்கும்
உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையத்திற்கான அனுமதி தற்போது
கிடைத்துள்ளது. முதல் கட்டமாக, தலைமைச் செயலக வளாகத்தில், நாமக்கல் கவிஞர்
மாளிகையில் அமைந்துள்ள, தேசிய தகவல் மையத்தின் பின்புறம், இந்த
உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையத்திற்கான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, செயலர் விஜயகுமார் கூறியதாவது: இட நெருக்கடி மிக்க, தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது தலைமைச் செயலக ஊழியர்களுக்கான, உடற்பயிற்சிக் கூடத்திற்கு இடத்தை முதல்வர் ஒதுக்கித் தந்துள்ளார். ஊழியர்களின், மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. யோகா மையத்தில், காலை, மதிய இடைவேளை, மாலை நேரங்களிலும், உடற்பயிற்சிக் கூடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களிலும், ஊழியர்கள் பயிற்சி பெறலாம். இதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகாவிற்கு விளையாட்டுத் துறை மூலம் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
No Work No Pay - One Day All India Strike
இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...