சென்னை:அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்,"அனைத்து அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு
'ஸ்மார்ட் கார்டு' வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில்
அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துறை - அரசு மேல்நிலைப் பள்ளி,
அய்லாப்பேட்டை - அரசு மேல் நிலைப்பள்ளி, சோமரசம் பேட்டை - அரசு
மேல்நிலைப்பள்ளி, எட்டரை - அரசு மேல்நிலைப்பள்ளி, இனாம் குளத்தூர் ஆகிய
ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர்
ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி திட்டத்தினை
துவக்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவ, மாணவியர்களின் பெயர், பெற்றோர் முகவரி,
பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை
போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள்
குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடம் பெயர நேரும் போது இதில் பதிவு
செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.
இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் 91,54,741 மாணவ, மாணவியர்
பயன்பெறுவார்கள். மாணவ, மாணவியர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவு செய்யும் ஹெல்த்
கார்டுடன் 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில், 2011-12ஆம்
கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு
பயின்று தேர்ச்சி பெற்றுள்ள 4,60,779 மாணவ, மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த
சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து,
மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.2011-12ஆம் கல்வியாண்டில் 21 லட்சத்து 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்
பயன்பெறும் வகையில் 313 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு
தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும்,
2012- 13ஆம் கல்வி ஆண்டில் 21,52,986 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்
353 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும்
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் வருமானம் ஈட்டும்
தாய் தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ,
அப்பெற்றோர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளிச் செல்லும்
குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவிற்காக ஒரு
மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வியாண்டுகளில் 720
மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான வைப்பு
நிதி பத்திரங்களை முதலமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கு 9 புதிய வாகனங்களும், என மொத்தம் 83 லட்சத்து 460 ரூபாய்
செலவில் வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களையும் முதல்மைச்சர் ஜெயலலிதா
வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் !!!
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்
குத்
தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம்
வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை,
ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல
நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில்
இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system)அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு(Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம்(Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல்களில் அடங்கும்.
பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.
இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

>>>20 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வளாக தேர்வை
எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான மையங்கள், அரசு
கல்லூரிகளில் துவங்கப்பட உள்ளன. இதற்காக, ஆறு கோடி ரூபாயை, தமிழக அரசு
செலவிட உள்ளது.தமிழகத்தில் உள்ள, 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
படிக்கும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம்
மூலம், இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் பருவ
தேர்வுகளில், இப்பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு வாரத்திற்கு, எட்டு மணி நேரம் என்ற கணக்கில், நடப்புக்
கல்வியாண்டில் பயிற்சி தரப்படும்.கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் வளாக
தேர்வில், எந்தெந்த காரணங்களால், மாணவர்கள் தோல்வியடைகின்றனர் என்பதை
கண்டறிந்து, அதை போக்க இப்பயிற்சி உதவிடும். பன்னாட்டு நிறுவனங்கள்,
மருத்துவம், சில்லரை வணிகம் என, அந்தந்த துறைகளுக்கு ஏற்ப இப்பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. பணி சார்ந்த மொழி கற்பித்தல், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி,
வாக்கியங்களை, தகவல்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல், சரளமாகவும்,
தன்னிச்சையாகவும் ஆங்கிலம் பேசுதல், பிரபலமான தலைப்புகளிலிருந்து
கருத்துகளை தெரிவித்தல், நிகழ்வுகள், அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரித்தல்
போன்ற பயிற்சிகள், இதில் அடக்கம்.ஒவ்வொரு துறைவாரியான பயிற்சி,
தன்னம்பிக்கை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்தும், பயிற்சி பாடத்தில்
அடங்கும்.அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கில அறிவை
வளர்க்கும் வகையில், பயிற்சி அளிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு
உள்ளது.
இதுகுறித்து, பயிற்சி அதிகாரி கூறியதாவது:இப்பயிற்சியில் சேர விரும்பும்
மாணவர்களுக்கு, முன்தேர்வு நடக்கிறது. இதில், வெற்றி பெறும் மாணவர்கள்
மட்டுமே, பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கல்லூரி வளாகத்தில் நேர்காணலை
சந்திக்கும் மாணவர்களுக்கு, இப்பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். பயிற்சி
மையங்கள் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
>>>துப்புரவு பணியாளர், காவலர் நியமனம்:தர்மபுரியில் அதிகம், சென்னையில் குறைவு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2,216 துப்புரவு பணியாளர்கள்,
1,492 காவலர்கள் என, 3,708 பேருக்கு, இணையதளம் வழியாக, நேற்று கலந்தாய்வு
நடத்தி, பணி நியமனம் செய்யப்பட்டனர்.மொத்தம், 5,000 பேர், பணி நியமனம்
செய்யப்படுவர் என, கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், சில
மாவட்டங்களில், முன்னுரிமைப் பட்டியலின் கீழ், சில பிரிவினர் இல்லாததால்,
முதல் கட்டமாக, 3,708 பேருக்கு மட்டும், பணி நியமனம் நடந்ததாக,
பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மீதமுள்ள, 1,292 பேருக்கான பதிவுமூப்பு பட்டியல், மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகங்களில் இருந்து பெற்று, விரைவில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை
எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலம் முழுவதும், 66
கல்வி மாவட்ட அலுவலகங்களில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதை,
பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்தபடி, இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர்
கண்ணப்பன் ஆகியோர் கண்காணித்தனர். கலந்தாய்வு முடிந்ததும், சம்பந்தபட்டவர்களுக்கு, கல்வி மாவட்ட
அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர். நியமன உத்தரவு பெற்ற
அனைவரும், உடனடியாக பணியில் சேர, இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.அதிகபட்சமாக, வேலூர் கல்வி மாவட்டத்தில், 116 துப்புரவு
பணியாளர்களும், 98 காவலர்களும், பணியில் சேர்ந்தனர். தர்மபுரி கல்வி
மாவட்டத்தில், 85 துப்புரவு பணியாளர்கள், 67 காவலர்களும், சேலம் கல்வி
மாவட்டத்தில், 69 துப்புரவு பணியாளர்கள், 59 காவலர்களும்
நியமிக்கப்பட்டனர்.மிகக் குறைவாக, மத்திய சென்னை கல்வி மாவட்டத்தில், இரு
பணிகளிலும், தலா ஒருவர் நியமிக்கப்பட்டனர்.
>>>ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,
"அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15
ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள்
தெரிவித்தன. இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு
வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும்
தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும்,
புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி
ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள்,
எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15
ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம்
படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக
வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள்
தெரிவித்தன. கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால்,
முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக்
கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம்
ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம்
உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர்
நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
>>>அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம்
"தமிழக அரசுக்கு, பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்தும்
மக்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி பெற
ஆர்வம் காட்ட வேண்டும்' என, ஆசிரியர் கூட்டணி
வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை
வினியோகிக்க முடிவு செய்திருக்கிறது.
பெற்றோர், இலவச கல்வி தரும் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், தரமான ஆசிரியர்கள் உள்ளனர். தமிழக அரசு, மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி வழங்குவதுடன், பல்வேறு இலவச திட்டங்களையும் வழங்குகிறது.ஆண்டுக்கு, நான்கு ஜோடி இலவச சீருடை, நாள்தோறும், ஒரு முட்டையுடன், ஏழு வகை மதிய உணவு, வாழைப்பழம், இலவச பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுகள், சைக்கிள், "லேப்-டாப்' கம்ப்யூட்டர் என, பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு அளிக்கிறது. இதை, பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பல்வேறு வரிகளை கட்டுகிற மக்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்கள் குழந்தைகளை, இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி, இன்று மற்றும் நாளை, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள், மக்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.மக்களுக்கு வழங்க அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் நன்மைகள், இரண்டு பக்கங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன..

>>>கல்வி வளர்ச்சிக்கு பிராந்திய மொழிகள் அவசியம்:விஞ்ஞானி பேச்சு
கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக பிராந்திய மொழிகள்
இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே
சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்றி, கலாசாரத்துடன்
ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்,'' என, விஞ்ஞானி ராஜன்
பேசினார்.இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில், "கல்வியில் தரம்' என்ற
தலைப்பில், 10வது மண்டல மாநாடு துவக்க விழா நேற்று கோவையில் நடந்தது.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு கோவை மண்டலத் தலைவர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார். தேசிய தரமதிப்புச் சான்று, கல்வி மற்றும் பயிற்சி கழக தலைவர் சந்திரசேகர் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் அதேவேளையில் 40 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருந்ததக்கது. ஐ.நா., குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் 50 சதவிதத்துக்கும் குறைவான கிராமப்புறக் குழந்தைகளே பள்ளிக் செல்கின்றனர் என, தெரிய வந்துள்ளது. இது இந்தியக் கல்வி தரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எதிர் வரும் 2025ம் ஆண்டில் அதிகளவு தகுதி வாய்ந்த மனித வளம் உள்ள நாடாக இந்தியா இருக்கும்.
கல்வித்துறையில் தனியார் மட்டுமே சிறந்த கல்வியை அளித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சிறந்த கல்வி கிடைக்கிறது. இன்ஜினியரிங் துறையில் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் பயிற்சிகள் தேவைப்படுகிறது. கல்வியின் அடித்தளமாக இருப்பது ஆரம்பக் கல்வி. அடித்தளம் சரியாக அமையவில்லை என்றால் மொத்த கல்வியும் சரியாக அமையாது. இந்தியாவின் 48 சதவீதம் பள்ளிகளில் அடிப்டை வசதிகளே இருப்பதில்லை. ஆரம்பக் கல்வியை வலுப்படுத்த அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதற்கான தணிக்கை குழவை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்த வேண்டும். பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பித்தால் மட்டுமே வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட முடியும். கல்வித் தரத்தில் போட்டியிடக்கூடிய நிறுவனங்களை உருவாக்கினால் மட்டுமே தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தேசிய தரமதிப்புச் சான்று கழக தலைவர், ராஜன் பேசியதாவது:உலக அளவில் கல்வி வளர்ந்து வரும் நிலையில், இந்தியக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி தரம் வளரவில்லை. தொழிற்சாலைகள் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆரம்பக் கல்வித் துறையின் மீது தொழிலகங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 15 சதவீதத்தினர் மட்டுமே சிறந்த உயர்கல்வியை பெறுகின்றனர்.
பிளஸ்2 வகுப்புக்குப் பிறகு சாதாரண உயர்கல்வி எட்டு சதவீதத்தினருக்கு கிடைக்கிறது. 70 சதவீதம் மாணவர்கள் எந்தவித மேல் படிப்பையும் மேற்கொள்வதில்லை. வளர்ந்து வரும் கல்வியில் சில பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை களைந்து மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். மாணவர்களின் திறமைகளை தொழிலகங்களின் தேவைக்கேற்ப மாறுபடுத்திக்காட்ட வேண்டும். கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்ற வேண்டும்.
கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டல துணைத் தலைவர் சுந்தரராமன், கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...