கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரத்த வங்கி மேலாண்மையை மேம்படுத்த கம்ப்யூட்டர்கள்!

ரத்த வங்கி மேலாண்மையை மேம்படுத்த கம்ப்யூட்டர்கள், டேட்டா கார்டுகளை முதல்வர்  வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தன்னார்வ ரத்த தான கொடை திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தரமான மற்றும் பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள், தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடியாக சென்றடைவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. தமிழகத்தில் 85 அரசு ரத்த வங்கிகள், 180 தன்னார்வ தனியார் ரத்த வங்கிகள், 9 மத்திய, மாநில நிறுவன ரத்த வங்கிகள் என மொத்தம் 274 அரசு அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன.தமிழகம், கடந்த ஆண்டில் 7.11 லட்சம் ரத்த அலகுகளை தன்னார்வ ரத்த கொடை திட்டத்தின் மூலம் சேகரித்துள்ளது. மேற்கண்ட ரத்த வங்கிகள் மட்டுமல்லாமல், 196 அரசு மற்றும் 57 தனியார் என மொத்தம் 253 ரத்த சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் ரத்தத்தை பாதுகாக்கவும், சேமித்து வைத்து நோயாளிகளின் அவசரகால ரத்த தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளது. 
அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் வலைதளத்தின் www.tngovbloodbank.in மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வலைதளம் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தங்கள் கொடை விருப்பத்தை (இ-ரிஜிஸ்ட்ரி) பதிவு செய்வதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும், இவ்வலைதளத்தில் உள்ள தன்னார்வ ரத்த கொடையாளர் விவரங்கள் அரசு ரத்த வங்கிகளின் அவசரகால ரத்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவியாக உள்ளது.இந்த  வலைதளம் அரசு ரத்த வங்கிகளின் ரத்த இருப்பு, ரத்த தான முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரம், ரத்த தான முகாம் அமைப்பாளர்களின் தொலைபேசி எண் போன்றவைகளை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 மடிகணினிகளையும், 25 இணையதள இணைப்பான்களையும் (டேட்டா கார்டு) அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

>>>“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”


அனைவராலும் சேது சமுத்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிற‌ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழரின் ஒரு நீண்ட கால கனவுத் திட்டமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகம் பெருகுவதற்கும், கரையோர மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், தமிழகக் கரையோர பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கும், சுற்றுலாத் தொழில் வளர்ந்து அரசுக்கு நல்ல வருவாய் கிட்டுவதற்கும்கூட இந்தத் திட்டம் மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திட்டத்தினால் விளையக் கூடிய நன்மைகள் பலவாகும்.

இத்திட்டத்தின் பயனைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய‌ 1981-82ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வ‌றிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

>>>திருச்சி மலைக் கோட்டை


திருச்சி மலைக் கோட்டை இமாலய மலையைவிட அதிக பழமையானது . (Rock fort,Trichy )
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம்.

இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மூன்றைத் தவிர பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும் உள்ளன. பெரிய மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட கோவில்களே குடவரைக்கோவில்கள் எனப்படும்.

இந்த மலை மொத்தம் 83 மீ உயரம் கொண்டது, மிகவும் பழமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையைவிட அதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாக கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.

இந்த மலையின் உச்சியில் அடைய மொத்தம் 437 படிகளைக் கடக்க வேண்டும். மூச்சிறைக்க ஏறிய பின் திருச்சியின் அழகையும், காவிரி ஆற்றையும் கண்டு களிக்கலாம

17ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்டுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது. மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய கதவு ஒன்றும் உள்ளது.

இந்தக் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.

அருங்காட்சியக நேரம்:

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை.திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செயல்படாது..

>>>தியானமும் தூக்கமும்

 
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார்.

சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...

''முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!''

>>>இல்லறத்தின் ரகசியம்....

 
சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம்..

”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன...?” என்று தனித்தனியே கேட்டார்கள்.

”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள்...

”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்...

ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார்.

திருமண வாழ்க்கை என்பது, உரிமைகளை நிலை நாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள்...

உரிமைகளை விட்டுக் கொடுப்பதே உறவில் வளர்வது என்று தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்...!

>>>துவர்ப்பு சுவை - பயன்கள்...

 
இன்று நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை பற்றிய தகவல்.
மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் நோயின் ஆரம்ப அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கலை போக்கினாலே நோய்களின் கோரப் பிடியின்றி நாம் வாழலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் துவர்ப்புத் தன்மை அதிகம் சேர்ந்திருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். இதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும் தன்மையை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினர்.

இரத்தம் சுத்தமடைய:

துவர்ப்புச் சுவைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உண்டு.

மேலும் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை கரைப்பதும் துவர்ப்பு சுவையே. துவர்ப்பு வியர்வை பெருக்கியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற இந்த துவர்ப்பு பயன்படுகிறது.

பித்த அதிகரிப்பு நீங்க:

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு.

வாயுத் தொல்லை நீங்க:

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நரம்புகள் பலப்பட:

அதிக மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது. இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த நரம்புத் தளர்வை நீக்கும் குணம் துவர்ப்பு சுவைக்கு உண்டு.

இரத்தக் கொதிப்பைக் குறைக்க:

இரத்தக் கொதிப்பால் ஏற்படும் இருதய நோய்களை குறைக்க துவர்ப்பு சுவை மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அளவு துவர்ப்புச் சுவை கிடைப்பதால் இரத்தக் கொதிப்பு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

துவர்ப்பு சுவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தினமும் நாம் சாப்பிடும் உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட பொருட்களை அதிகம் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இயற்கையாகவே மூலிகைகள், காய்கள், கனிகளில் உள்ள விதைகள், தோல் முதலியவை துவர்ப்பு சுவை கொண்டவை. எந்த ஒரு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் அதற்கு மாற்று மருந்தாக துவர்ப்புச் சுவை உள்ள பொருட்களை சாப்பிடுவது நல்லது.

உதாரணமாக திராட்சையில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உண்டு. ஆனால் அதன் மேல் உள்ள தோலும், உள்ளே உள்ள விதைகளும் துவர்ப்புச் சுவை உடையவை.

துவர்ப்புச் சுவை மற்ற சுவைகளினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். எனவே தினமும் துவர்ப்புச் சுவையுள்ள உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

>>>நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு

நம்மைச் சுற்றி நடப்பவற்றில், உகந்தவற்றை நுகரவும், உபயோகமற்றவற்றை உதறவும் கற்றுக்கொள்வதுதான் மிகப் பெரிய கல்வி. உலகமே நம் முன் அகண்ட பள்ளிக்கூடமாக விரிகிறது. நம் முன் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நாம் நல்லவற்றை மாத்திரம் பாலை உறிஞ்சும் அன்னமாய் கிரகிக்க முனைந்தால், வாழ்க்கை நமக்கு வசந்த கம்பளத்தை மட்டுமே விரிக்கும்.

நகைச்சுவை என்பது எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது, எல்லோரையும் கிண்டலுக்கு உட்படுத்துவது, எதையும் குதர்க்கமாக்குவது, எதிலும் விதண்டாவாதம் புரிவது என்கிற எண்ணம் இப்போது புரையோடிப் போய்விட்டது.

வெளியிலே இருப்பவர்கள் விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நம் நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் அனைவருமே அவர்களிடமிருந்த ஏதோ ஓர் உயரிய பண்பின் காரணமாகத்தான் அந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இன்றுள்ள மாறுபட்ட சூழலில், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல உண்மை. இறந்தவர், தன் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடுகிறார் என்பதுதான் வாதம்.

மண்புழுவிடமிருந்து கூட மக்கிய இலைகளை உரமாக்கும் ரசவாதத்தைக் கற்க வேண்டும். வருத்துகிற வறட்சியிலும் மனம் தளராப் பறவைகளைப் பற்றி பயில வேண்டியவை உண்டு.

எல்லாவற்றிலும் சிறந்த பக்கங்களையே பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், நம் உடல் கூட பஞ்சு போலக் காற்றில் மிதப்பதைக் கவனிக்க முடியும். வெறுப்பு, உடலில் அமிலத்தை உண்டாக்கும்; குடல்களை அரிக்கும்; வயிற்றைப் புண்ணாக்கும்.

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு பெரியவர்களை 'பெரிசு' என்றும், மூத்தவர்களை ஒருமையில் விமர்சிப்பதும் அதிகமாகி வருகின்றன. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற இறுமாப்பு அதல பாதாளத்தில் நம்மை உருட்டிவிடும் இயல்பு கொண்டது.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஒரு நல்ல குணத்தைக் காண்போம். அதை கடைபிடிக்க முயல்வோம் என்று சூளுரை எடுப்போம்.

நம் பொறுமை வளர, வெறுப்பு குறையும்.

பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்.

மகிழ்ச்சி பெருக, வருத்தம் மறையும்.

நல்லவை கற்போம் - அல்லவை மறப்போம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...