காதல் வந்தால் சொல்லியனுப்பு.... உயிரோடிருந்தால் வருகிறேன்’, - இது ஒரு
பிரபலமான சினிமாப் பாடல். காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான்
இந்த வாரம்
என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டி.யிலும் இரு மாணவர்கள்
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்னையும் ஒன்று என்று
செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படிப் பிரச்னையாகிறது?
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>ஓ பக்கங்கள் - இரண்டு கடிதங்கள்! ஞாநி
கடிதம் 1:
அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் வணக்கம்.
இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள்
எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை.
முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது
உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.
தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று
நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை
கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
>>>தகவல் தொழில்நுட்ப சட்டத்தை திருத்த கோரி வழக்கு
பால் தாக்கரே மறைவு குறித்து, சமூக வலை
தளமான,"பேஸ்புக்'கில் விமர்சித்த இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டு,
பின் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் தற்போது, சுப்ரீம்
கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது.தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், இதுதொடர்பான
சட்டப் பிரிவில் திருத்தம் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி,
சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடைகள் அடைப்பு
சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சமீபத்தில் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்துக்காக, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மும்பையை சேர்ந்த, இரண்டு இளம் பெண்கள், சமூக வலைதளமான, "பேஸ்புக்'கில் கருத்து தெரிவித்திருந்தனர்.அதில், "நாட்டில், தினமும் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். அவர்களுக்காக, கடைகள் அடைக்கப்படுவது இல்லை. பால் தாக்கரே மறைவுக்காக, கடைகள் அடைக்கப்பட்டதற்கு, அவர் மீது உள்ள மரியாதை காரணமல்ல; சிவசேனா கட்சியினர் மீது உள்ள, பயமே காரணம்' என, கூறியிருந்தனர். இந்த விவகாரம், மும்பையில் பரபரப்பு ஏற்படுத்தியதால், இருவரும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் கைதுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த மாணவி, ஷ்ரேயா சிங்கால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், நேற்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், அவர் கூறியுள்ளதாவது:
"தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 - பிரிவு 66ஏ, மிகவும் விரிவாகவும், தெளிவற்றதாகவும் உள்ளது. எந்த நோக்கத்திற்காக, இந்த சட்ட விதி இயற்றப்பட்டதோ, அதை பூர்த்தி செய்ய முடியாததாக உள்ளது. அதனால், சட்டப் பிரிவை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து. அத்துடன், இந்த சட்ட விதியால், அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள, அடிப்படை உரிமைகள் மீறப்படும் அபாயமும் உள்ளது. பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு, சிக்கல் உண்டாக்குவதாகவும் இருக்கிறது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின், இந்த பிரிவில், திருத்தங்களை மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல்தமஸ் கபீர் தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:சமீபத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களையும், இந்தச் சட்டப் பிரிவின் கீழ், சிலர் கைது செய்யப்பட்டதையும், கோர்ட் கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும், தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின், குறிப்பிட்ட அந்தப் பிரிவை எதிர்த்து, ஏன் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வியப்பாக உள்ளது. அதனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம்.தற்போது, இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், சமூக வலை தளங்களில், கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு எதிராக, அரசு தரப்பினர், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; அதனால், அதிரடியாக எந்த தடை உத்தரவும், இப்போது பிறப்பிக்க தேவையில்லை. வழக்கின் விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகனவதி, சுப்ரீம் கோர்ட்டிற்கு உதவ வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழிகாட்டி குறிப்பு வெளியீடு
தகவல்
தொழில் நுட்பச் சட்டத்தின், பிரிவு, 66ஏ-வை எதிர்த்து, சுப்ரீம்
கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டப் பிரிவு
தொடர்பாக, வழிகாட்டிக் குறிப்பு ஒன்றை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:சமூக வலைதளங்களில், யாராவது ஆட்சேபகரமான கருத்துக்களைத் தெரிவித்தால், அந்த நபருக்கு எதிராக, அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த, போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியோ அல்லது இன்ஸ்பெக்டரோ, "தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000' பிரிவு, 66ஏ-ன் கீழ், தற்போது வழக்கு பதிவு செய்யலாம்.

மூன்றாண்டு சிறை
இந்தச்
சட்டப் பிரிவு, ஜாமினில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்றாலும், குற்றம்
நிரூபணமானால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.ஆனால், இனி,
இந்தச் சட்டப் பிரிவின் கீழ், யார் மீதாவது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்
எனில், கிராமப்புறங்களில், ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரியிடமிருந்தும்;
நகரங்களில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரியிடமிருந்தும், சம்பந்தப்பட்ட
போலீஸ் நிலைய அதிகாரி, அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற பின்னரே, யார்
மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இந்த புதிய வழிகாட்டிக் குறிப்புக்களை,
அனைத்து மாநில அரசுகளும், கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு
வழிகாட்டிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வழக்கு: கைவிட மகா., போலீஸ் முடிவு
மும்பை
பால்தாக்கரேயின் இறுதி ஊர்வலம் தொடர்பாக, ஆட்சேபகரமான கருத்துக்களை, "பேஸ்
புக்கில்' வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட, இரு பெண்களுக்கு எதிரான
வழக்குகளை கைவிட, மகாராஷ்டிரா போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக,
மகாராஷ்டிரா மாநில போலீஸ், டி.ஜி.பி., சஞ்சீவ் தயாள்
கூறியதாவது:தாக்கரேயின் இறுதி ஊர்வலத்தின் போது, கடைகள் அடைக்கப்பட்டதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளமான பேஸ் புக்கில், கருத்துக்களை
வெளியிட்ட, ஷாகீன் ததா, ரினு ஸ்ரீனிவாசன் என்ற, இரு பெண்கள், கைது
செய்யப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.மும்பையை
சேர்ந்த இந்த இரு பெண்களுக்கு எதிராக, எந்த விதமான குற்றப் பத்திரிகையும்
தாக்கல் செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான வழக்கை கைவிட, மகாராஷ்டிரா
போலீஸ் முடிவு செய்துள்ளது. வழக்கை முடித்துக் கொள்வது தொடர்பான அறிக்கை,
கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு சஞ்சீவ் தயாள் கூறினார்.
>>>உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப, அடுத்த மாதம், 7ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் படி, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47 பேருக்கு, அடுத்த மாதம், 7ம் தேதி, 11:00 மணிக்கு, சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது. அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>>ஓய்வூதிய திட்ட நிதியில் முறைகேடு: ஆசிரியர்கள் புகார் : தணிக்கையும் இல்லை; கணக்கும் இல்லை
ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்
கீழ் பிடிக்கப்படும் நிதியில், முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கு
விவரங்களை, ஆசிரியர்களுக்கு தருவது இல்லை எனவும், ஆசிரியர்கள் குற்றம்
சாட்டுகின்றனர். பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும்
ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பங்களிப்பு, ஓய்வூதிய நிதி குறித்த
கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை
அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது. தொடக்க கல்வித் துறையின் கீழ்
பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் கணக்கு விவரங்கள், சென்னை,
கோட்டூர்புரத்தில் உள்ள, "டேட்டா சென்டர்' மையத்தில் பராமரிக்கப்படுகிறது.
>>>நவம்பர் 30 [November 30]....
நிகழ்வுகள்
- 1612 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
- 1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.
- 1718 - நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
- 1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
- 1803 - ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
- 1806 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
- 1853 - ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
- 1872 - உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
- 1908 - பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
- 1917 - முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
- 1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
- 1939 - சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
- 1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
- 1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.
- 1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
- 1967 - சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
- 1981 - பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
- 1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புக்கள்
- 1825 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)
- 1835 - மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
- 1858 - ஜகதிஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)
- 1874 - வின்ஸ்டன் சேர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)
- 1950 - வாணி ஜெயராம் - பிரபல இந்தியப்பாடகி.
இறப்புகள்
- 1900 - ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)
சிறப்பு நாள்
- பார்போடஸ் - விடுதலை நாள் (1966)
- புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
- புனித அந்திரேயா தினம் - ஸ்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் ஊள்ளது.
>>>வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி
மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு,
வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி, மின்வாரியம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால்,
வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில்
மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
TNPSC Group 4 - Answer Key - Part B & Part C
TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...