கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி கட்டடத்தை பாதுகாப்பு படையினர் பயன்படுத்த அனுமதியில்லை: அரசு அதிரடி

நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில், நக்சலைட்டுகளுக்கு எதிராக, அதிரடி வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர், பள்ளிக்கூடங்களை பயன்படுத்த கூடாது; இது தொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.நக்சல் பாதிப்பு, அடிக்கடி கலவரம் நடக்கும் பகுதிகளில் கல்வியின் நிலைமை குறித்து, தேசிய கலந்தாய்வு டில்லியில் நடந்தது.
இதற்கு, மத்திய மனித வள அமைச்சகமும், "யுனிசெப்'பும் ஏற்பாடு செய்திருந்தன.இதில், பங்கேற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாவது:கலவரம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக நக்சலைட் தொந்தரவு உள்ள மாநிலங்களில், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினருக்கு, தங்குவதற்கு பள்ளி கட்டங்களை ஒதுக்கக் கூடாது.

இதனால், நக்சலைட்டுகள் கல்வி நிறுவனங்களை குறி வைக்க கூடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு, மாநில அரசுகளுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும், பாதுகாப்பு படையினருக்கு, பள்ளி கட்டடங்களை ஒதுக்க கூடாது.கனிம வளம் உள்ள மாவட்டங்களில், நக்சலைட் தொந்தரவு உள்ளது. இப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு என்று ஒருங்கிணைந்த சமூக பொறுப்பு நிதி உள்ளது. இந்த நிதியின் மூலம், மாணவிகளுக்கு கழிப்பறை கட்டித்தரவும், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இக் கூட்டத்தில் பங்கேற்ற, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷனின் தலைவர் சாந்தா சின்கா பேசும்போது, ""கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதுகாப்பு படையினர் பள்ளிக் கூடங்களை ஆக்கிரமிப்பதால், ஆசிரியர்களே பள்ளிகளுக்கு போவதில்லை. பொதுவாக பள்ளிக் கூடங்கள் அமைந்துள்ள பகுதி அமைதியான பகுதியாக இருக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

>>>அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்!: தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள்

திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாகி உள்ளனர். இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்து வரும் இத்தருணத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீரென வெளியேறியுள்ளது, மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவு, கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் வரும் 13ல் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்வான ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, பணி நியமன கலந்தாய்வு நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, பட்டதாரி ஆசிரியர் களுக்கான கலந்தாய்வு நடந்தது; இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த 400 இடைநிலை ஆசிரியர்களும், பி.எட்., முடித்த 219 பட்டதாரி ஆசிரியர்களும், அரசு ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலோ அல்லது வெளிமாவட்டங்களிலோ பணி அமர்த்தப்பட உள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு சிக்கல்
திருப்பூர் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், டி.இ.டி., தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களாக தேர்வாகியுள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளில், அவர்களது பணியிடம் திடீரென காலியாகி உள்ளது.தனியார் பள்ளிகள் சிலவற்றில் அரையாண்டு தேர்வு துவங்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவமிக்க ஆசிரியர்கள், திடீரென அரசு பள்ளிக்கு தாவியுள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய ஆசிரியர்களை பணியில் சேர்க்க, தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டினாலும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், முழு ஆண்டுக்கு உரிய "சிலபஸ்' முடிப்பதும், பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதும், ஆசிரியர்கள் தட்டுப்பாட்டால், தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆசிரியர்கள் வெளியேறுவதால், தேர்ச்சி விகிதம் நிச்சயமாக குறையும் என்ற அச்சத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில்,"சில பள்ளிகளில் இருந்து ஐந்து பேர் வரை, அரசு ஆசிரியர்களாக தேர்வாகி வெளியேறியுள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால், பாடங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக பணிக்கு வரும் ஆசிரியர்கள், பாடங்களை நடத்துவதிலும், மாணவர்களை புரிந்துகொள்வதிலும் சிரமம் உள்ளது. பொதுத் தேர்வுக்கு பின், மே மாதத்தில், பணியிட நியமனத்தை அரசு செய்திருந்தால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது,' என்றனர்.மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள், ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதால், மாணவர்களில் கல்வி நலன் மேலோங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான பணியிடங்கள், தனியார் பள்ளிகளில் திடீரென காலியாகியுள்ளது. இது, அப்பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.

>>>டிசம்பர் 11 [December 11]....

நிகழ்வுகள்

  • 1282 - வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டான்.
  • 1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
  • 1792 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.
  • 1816 - இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.
  • 1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது.
  • 1917 - பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.
  • 1927 - சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.
  • 1931 - ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
  • 1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.
  • 1937 - எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்காமீது போரை அறிவித்தன.
  • 1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
  • 1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.
  • 1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
  • 1993 - மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1994 - ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார்.
  • 1998 - தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

  • 1781 - சர் டேவிட் ப்ரூஸ்டர், ஸ்காட்லாந்து இயற்பியலாளர். (இ. 1868)
  • 1803 - ஹெக்டர் பேர்லியோஸ், பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869)
  • 1843 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளரும் மருத்துவரும் (இ. 1910)
  • 1882 - மாக்ஸ் போர்ன், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் விருதாளரும், (இ. 1970)
  • 1882 - சுப்பிரமணிய பாரதி, கவிஞர் (இ. 1921)
  • 1890 - மார்க் டோபே, அமெரிக்கப் பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ. 1976)
  • 1911 - நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006)
  • 1918 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008)
  • 1931 - ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990)
  • 1935 - பிரணப் முக்கர்ஜி, இந்திய அரசியல்வாதி,இந்திய குடியரசு தலைவர்
  • 1951 - பீட்டர் டி. டேனியல்ஸ், மொழியியல் அறிஞர்
  • 1954 - பிரசந்தா, நேபாளப் பிரதமர்
  • 1969 - விஸ்வநாதன் ஆனந்த், இந்திய சதுரங்க ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1937 - ஜான் ஆன்வெல்ட், எஸ்தோனியாவின் தலைவர் (பி. 1884)
  • 2004 - எம். எஸ். சுப்புலட்சுமி, கருநாடக இசைக் கலைஞர் (பி. 1916)

சிறப்பு நாள்

  • புர்கினா பாசோ - குடியரசு நாள் (1958)

>>>6,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை "ஆன்-லைன்' கலந்தாய்வில் சுறுசுறுப்பு

டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியில், மாநிலம் முழுவதும் நேற்று சுறுசுறுப்பாக நடந்தது. 8,718 பேரில், 6,500 பேருக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. இவர்கள் அனைவருக்கும், அவரவர் சொந்த ஊர்களிலேயே வேலை கிடைத்தன. டி.இ.டி., தேர்வில், 9,664 இடைநிலை ஆசிரியர், 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் என, 18 ஆயிரத்து, 382 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும், மூன்று நாள் பணி நியமன கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல்கட்டமாக, பட்டதாரி ஆசிரியர், சொந்த மாவட்டத்தில், பணி பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று, "ஆன்-லைன்' வழியில் நடந்தது. சென்னை மாவட்டத்தில், எந்த பாடத்திலும், காலி பணியிடங்கள் இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கணிதம் பாடத்தை தவிர, இதர பாடங்களில், கணிசமான அளவிற்கு, காலி இடங்கள் இருந்தன. தர்மபுரியில் அதிகம்: தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், அதிகளவில் காலி பணியிடங்கள் இருந்தன. தர்மபுரியில் மட்டும், 800 பணியிடங்கள் காலி. நேற்று பிற்பகல் முதல், கலந்தாய்வு நடந்தது. சொந்த மாவட்டங்களில், அதிக காலியிடங்கள் இருந்ததால், ஆசிரியர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, மாலை, 6:30 மணிக்குள், 6,418 பேர், அவரவர் சொந்த ஊர்களிலேயே, பணியிடங்களை தேர்வு செய்தனர்.
ஆசிரியர்கள் குஷி :பட்டதாரி ஆசிரியர் மொத்த பணியிடங்களில், 73.61 சதவீதம் பேருக்கு, அவரவர் சொந்த மாவட்டங்களிலேயே வேலை செய்யும் அதிர்ஷ்டம் அடித்ததால், புதிய ஆசிரியர் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: அதிகமானோருக்கு, சொந்த மாவட்டங்களிலேயே இடங்கள் கிடைத்து விட்டன. 2,000 பேர் மட்டும், வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்,
கணித பாடத்தை தவிர, இதர பாடங்களில், காலி பணியிடங்கள் அதிகம் உள்ளன.
இன்றைய கலந்தாய்வு :எனவே, சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பணியில் சேரலாம்.இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த காலி பணியிடங்கள், ஒளிவு மறைவின்றி, "ஆன்-லைன்' வழியில் காட்டப்பட்டன. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தேர்வு பெற்றவர்கள், மேற்கண்ட இடங்களில் உள்ள பள்ளிகளை, "ஜாக்பாட்' அடித்ததுபோல், மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தனர்.இரண்டாவது நாளான இன்று, பட்டதாரி ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. நேற்று, சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத ஆசிரியர்கள், இன்றைய கலந்தாய்வில் பங்கேற்பர்.
நாளை...:
தொடக்க கல்வித்துறையில், 9,664 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடந்த இடங்களிலேயே, இந்த கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனமும், பிற்பகலில், வெளி மாவட்டங்களுக்கான பணி நியமனமும் நடக்கிறது.இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதிகளவில், சொந்த மாவட்டங்களிலேயே, வேலை கிடைப்பதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பணி நியமனம் :
நாளையுடன், 18 ஆயிரத்து, 382 பேர் பணி நியமனத்திற்கான பணிகளும் முடியும். அதைத் தொடர்ந்து, 13ம் தேதி, சென்னையில் நடக்கும் விழாவில், 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார். அனைவரும், 17ம் தேதி, பணியில் சென்னை மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் சுத்தமாக இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். அப்படியிருக்கும்போது, மாவட்டத்திற்குள், பணி நியமன கலந்தாய்வை நடத்தியிருக்கக்கூடாது. இன்று நடக்கும், வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்விற்கு அழைத்திருக்க வேண்டும். இதற்கு மாறாக, சென்னை மாவட்டத்தில் தேர்வு பெற்ற 165 பேரும், நேற்று, மாவட்டத்திற்குள் நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். சேத்துப்பட்டு, எம்.சி.சி., மேல்நிலை பள்ளியில், 165 பேரும், காலையிலேயே குவிந்தனர். பல மணி நேரம் காத்திருந்ததற்குப் பின், "காலி பணியிடங்கள் இல்லை; நாளைக்கு (இன்று) வாருங்கள்' என, அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து, முதன்மைக் கல்வி அலுவலருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதேபோல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 2, "செட்' சான்றிதழ் நகல்களை ஒப்படையுங்கள் என, முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூறியதால், ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறுகையில், ""பணி நியமனத்திற்கு முன், கடைசியாக ஒரு முறை சான்றிதழ்களை சரிபார்ப்பது, வழக்கமான நடைமுறை தான். அப்படித்தான், இப்போதும் நடந்தது,'' என, தெரிவித்தனர்.

>>>இன்று உலக மனிதஉரிமைகள் தினம்

ஓவ்வொருவரும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிடவேண்டும் என்பதனை வலியுறுத்தும்விதமாக ஓவ்வொரு ஆண்டும் டிச.10-ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1948-ம் ஆண்டுடிசம்பர் 10-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில், உலக மனித உரிமைகள்தினம் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைபடுத்தும்விதத்தில் 1950-ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

உலகில்வாழும் அனைவரும் சமம். ஓருவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாமும் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது.எதுமனித உரிமை :ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமை வந்துவிடுகின்றன. உயிர்வாழ்வதற்கானஉரிமை, கருத்துசுதந்திரம், கல்வி,மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம்.

தொடரும் மீறல்கள்:இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் 1991-ம் ஆண்டு அக்.13-ல்இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளிலும்,இந்தியாவிலும் அடிமைத்தனம், இனவெறி,பாலியல் குற்றங்கள் என மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.இதைமுற்றிலும் தடுப்பதற்கு அரசுடன் இணைந்து மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவிக்கிறது.

>>>ராயபுரம் ரயில் நிலையம்

 
தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் எது என்று உங்களுக்கு தெரியுமா ?

அது நம்ம ராயபுரம் தான் அதைபற்றிய ஒரு வரலாற்று தகவல் !!!

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்யமானது. ஆனால் இந்த பகுதியைச் சேர்ந்த பலருக்கே கூட இன்று அது தெரியவில்லை எ
ன்பதுதான் உச்சகட்ட சோகம்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து 1845ஆம் ஆண்டு 'மெட்ராஸ் ரயில்வே கம்பெனி' தொடங்கப்பட்டது.ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி' இந்தியாவின் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரில் (Bori Bunder) இருந்து தானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம்தான் ராயபுரம். கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து, ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. இதற்கான ரயில் பெட்டிகளை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திருந்தது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London Newsவிரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. வழிநெடுகிலும் இந்த ரயில்களை ஏராளமானோர் அச்சம் கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடினார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆரவாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ராஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண்டு ரயில்கள்.முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும், அங்கு ஒரு சிறிய விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு, மெட்ராஸ் ரயில்வே கம்பெனியையும், அதன் மேலாளர் ஜென்கின்சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டுகள் செலவானதாகவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி கோலாகலமாக தொடங்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட்ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலையமாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறைமுகத்தின் சரக்குப் போக்குவரத்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூருக்கு இடம்பெயர்ந்தன.
ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சியளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. அப்படி ஒரு ரயிலில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக, பொலிவிழந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது, நம்மையும் அறியாமல் கண்கள் பனிக்கின்றன.

* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.

* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.

* சென்ட்ரல், எழும்பூரைத் தொடர்ந்து ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன.

>>>தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்

 
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா 
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா 
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா 
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.

இன்று பட்டுக்கோட்டை போல மக்களுக்கான கருத்துக்களை விதைக்கும் பாடலாசிரியரைத் தேடவேண்டியுள்ளது.

பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில் எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில், தளங்களில் பயணித்தது. இவர்களை தமிழ்உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமைப்படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று, பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது அவருடைய சிறப்பு . இப்போது அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறையை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதிய‌வர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...