கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இந்திய ஜனாதிபதி மாளிகை

இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை - ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911 - ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை ' . யாகத்தான் இது உருவாக்கப்பட்டது தற்போது ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளி கை ,இந்
தியா சுதந்திரம் பெற்ற போது , ` அரசு இல்லம் ' என்று மறுபெயர்சூட்டப்பட்டது. நாடு 1950 - ல் குடியரசானபோது ` ராஷ்டிரபதி பவன் ' என்றதற்போதைய பெயரைப் பெற்றது.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக , பழைய ரெய்சினா , மால்ச்சா கிராமங்களில்இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர்

கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் , 1914 - ம் ஆண்டு முதல் 1918 - ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர் , கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில் , 1929 - ம் ஆண்டு ,மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை , நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும் , 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931 - ம் ஆண்டு ஜனவரி 23 - ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி , ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து , இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி , இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர்விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும் , அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே , மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள் , அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று , இங்குள்ள `மொகல் கார்டன் ' எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும் , பலவண்ண மொகலாயத் தோட்டம் , ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம் , உலக முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது.

>>>வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்
கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.
வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !''

>>>இரவிலும் தொடர்ந்த ஆசிரியர் "கவுன்சிலிங்'

மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கவுன்சிலிங், நேற்று இரவு 12 மணியை கடந்தும், தொடர்ந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் மதுரை மாவட்டத்தில் 391 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு டிச.,9 ல், மாநகராட்சி இளங்கோ பள்ளியில் கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில், 92 பேருக்கு பணியிடம் ஒதுக்கப் பட்டது. 2வது நாளான நேற்று, 200 பேருக்கு பாடங்கள் வாரியாக பணியிடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால், இரவு 7 மணி வரை 100 பேருக்கு மட்டுமே, பணியிடம் ஒதுக்கியிருந்தனர். இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான "கவுன்சிலிங்' துவங்க உள்ளதால், எஞ்சியுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், இரவு 12 மணியை கடந்தும், கவுன்சிலிங் தொடர்ந்தது. பெண் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கணவருடன் இரவு முழுவதும் காத்திருந்து, "கவுன்சிலிங்'ல் பங்கேற்றனர்.

>>>இன்று - பாரதியார் பிறந்த நாள்.

'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே...'

இப்போது தெரிந்திருப்பீர்கள்... 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி நான்தான் என்று. இளம் வயதிலேயே தமிழ் மீது எனக்குப் பற்று. என் மீத
ும் தமிழுக்குப் பற்று!

இளம் வயதில் என்னை வறுமை வாட்டியது. நல்ல வேளை, சுதேசமித்திரன் பத்திரிகைக்கு நான் ஆசிரியராகி ஓரளவு வயிற்றுப் பசியைத் தீர்த்தேன். ஆனால், என்னுள் கனன்ற சுதந்திரத் தீயின் பசியைத்தான் என்னால் அடக்க முடியவில்லை.

எழுதினேன்... எழுதினேன்... வெள்ளையரை எதிர்த்து ஓராயிரம் பாடல்கள் எழுதினேன். தேசத்தைப் பற்றி எழுதினேன், தெய்வீகத்தைப் பற்றி எழுதினேன், குயில் பாட்டும்கூட எழுதினேன். அறியாமை நீங்கவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், சாதி வெறியைச் சாடியும், நாடு விடுதலை பெறவும் எழுதினேன். காக்கை, குருவிகூட எங்கள் சாதி என்று எழுதினேன்.

துப்பாக்கிக் குண்டுகளுக்குக்கூடப் பயப்படாத ஆங்கிலேயர்கள், எனது பாடல்களுக்குப் பயந்தார்கள். ''ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்'' என்று பாடினேன்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் எனது கவிதை நின்றது. சுதந்திரப் போராட்ட வீரனுக்கு மரணமில்லை என்பார்கள். எனது கவிதை வடிவிலே இன்றும் நான் உங்களிடம் வாழ்கிறேன்!''
*
இன்று - டிசம்பர் 11: தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன்... மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன்... மக்கள் மனங்களில் வாழும் ஒருவன்... அழகிய தமிழ் மகன் பாரதியார் பிறந்த நாள்.

>>>இரண்டாம் நாள் கலந்தாய்வில் பணியிடங்கள் தேர்வில் மந்தம்

இரண்டாவது நாளாக, நேற்று நடந்த கலந்தாய்வில், 2,035 பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று, வெளி மாவட்டங்களில் உள்ள, காலி பணியிடங்களை தேர்வு செய்தனர். டி.இ.டி., தேர்வில் தேர்வான, 8,718 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் நடந்தது. அதில், 6,592 பேர், சொந்த மாவட்டத்திற்குள் பணியிடங்களை தேர்வு செய்தனர். நேற்று நடந்த, வெளி மாவட்டங்களுக்கான, பணி நியமன கலந்தாய்வில், 2,035 பேர் பங்கேற்றனர். வெளி மாவட்டத்தில் பணி என்பதால், பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி, தொலைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அதன்பிறகே, பள்ளியை தேர்வு செய்தனர். இதனால், கலந்தாய்வு விறுவிறுப்பில்லாமல், சற்று மந்தமாக நடந்தது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 165 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர். மாலை வரை நடந்த கலந்தாய்வில், 2,035 பேரும், பணியிடங்களை தேர்வு செய்தனர். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான, 91 பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை. இதனால், தேர்வு பெற்ற ஆசிரியர்கள், தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இந்த பட்டியலை, டி.ஆர்.பி., வழங்கினால், அவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வை நடத்த தயாராக இருக்கிறோம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம்

நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன.தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருகின்றனர். ஆசிரியருடன், துணைக்கு யாரும் வரக்கூடாது எனவும், விழா நடக்கும் நாளன்று காலை சிற்றுண்டி, சாப்பாட்டு செலவை, சம்பந்தபட்ட ஆசிரியர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆசிரியர்கள், தேவையில்லாமல், சென்னைக்கு வந்து அலைய வேண்டாம் என்பதற்காகத் தான், "ஆன்-லைன்' கலந்தாய்வு நடத்துகின்றனர். இது, வரவேற்கதக்கது.ஆனால், 18 ஆயிரம் பேரும், இப்போது, சென்னைக்கு வர வேண்டும் என, கூறுகின்றனர். 18 ஆயிரம் பேருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை. 10 பேருக்கோ, 15 பேருக்கோ, உத்தரவுகளை வழங்குவார்.அதன்பின், அதிகாரிகள் தான் வழங்கப் போகின்றனர். அதற்கு, எதற்கு இப்படி தேவையில்லாமல், இவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என, தெரியவில்லை.ஒரு ஆசிரியரிடம், 500 ரூபாய் என்றால், சென்னை நகரில் உள்ள ஆசிரியர்களை தவிர்த்து, கணக்கு பார்த்தாலும், 90 லட்சம் ரூபாய்க்கு வசூல் குறையாது. இவ்வளவு தொகையையும், மாவட்ட அதிகாரிகள், முறையாக செலவு செய்வார்களா என்பதும் கேள்விக்குறிதான்.இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

>>>சான்றிதழ் சமர்ப்பிக்க வந்த பட்டதாரிகள் விரட்டியடிப்பு

டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, தவிர்க்க முடியாத காரணங்களால், சில சான்றிதழ்களை சமர்ப்பிக்காத தேர்வர்கள் உட்பட, 500 பேர் நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை, முற்றுகையிட்டனர். இவர்களின் குறைகளை கேட்க, துறை அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், போலீசாரை குவித்து, விரட்டி அடித்தனர்.
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 533 பேர், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரவில்லை. வராததற்கான காரணத்தை தெரிவித்து, 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் அளிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பில், வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை ஒப்படைக்காத, இடைநிலை ஆசிரியர்கள், 47 பேர், அந்த அட்டையை, நேரில் ஒப்படைக்கலாம் எனவும், டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்சென்ட் ஆன தேர்வர்கள் உட்பட, 500 பேர் நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்களில், டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில சான்றிதழ்களை ஒப்படைக்காதவர்கள், அதிகளவில் இருந்தனர். தகுதி இருந்தும், தேர்வு செய்யப்படவில்லையே எனக் கூறி, பலர் வருந்தினர்.
இவர்கள் அனைவரிடமும், முறையாக விண்ணப்பங்களை பெறவோ, அவர்களின் குறைகளை கேட்கவோ, டி.ஆர்.பி., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, போலீசாரை குவித்து, கூட்டத்தைக் கலைத்தனர். இதனால், ஆவேசம் அடைந்த பட்டதாரிகள், அலுவலக வாயிலை முற்றுகையிட்டு, கோஷம் போட்டனர்.
இன்றுடன், பணி நியமன கலந்தாய்வு முடிவதால், "தேர்வு பெற்றும், வேலை கிடைக்கவில்லையே" என, பெண் பட்டதாரிகள், கண்ணீர் விட்டனர். பல பட்டதாரிகளுக்கு, பி.எட்., சான்றிதழை, தமிழக அரசு தாமதமாக வழங்கியுள்ளது. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சமர்ப்பிக்க முடியவில்லை என்றும், இதையே காரணம் காட்டி, தற்போது தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், குமுறினர்.
பட்டதாரிகள் புகார் குறித்து, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரியிடம் கேட்ட போது, "தகுதியில்லாதவர்கள் எல்லாம் வந்துவிட்டனர். இவர்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் வேலை பார்க்க முடியாது" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...