கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் அறிமுகம்

மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்ட சான்றிதழ்களை, ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் என்ற அமைப்பின் மூலம் Verification செய்யும் வசதியை, காருண்யா பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்பல்கலையால் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை verify செய்ய, www.karunyauniversity.directverify.in என்ற வலைத்தளம் சென்று, மேற்கூறிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பிறகு, அந்த சான்றுகளை, பல்கலைக்கழகம் சரிபார்க்கும்.
Verification முடிந்த பிறகு, சரிபார்க்கப்பட்ட ஆவணம் அடங்கிய Link -ஐ கொண்ட ஒரு மின்னஞ்சல், சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பப்படும்.
இதுதொடர்பான விரிவான விபரங்களுக்கு http://www.karunya.edu/ என்ற வலைத்தளம் செல்க.

>>>நாட்டு வைத்தியத்தின் பயன்கள் !!

தேள் கடி!!!!
தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
· எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.
· நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

ஆண்மைக் குறைவு!!!!!!!!!!!!!!!!!

· மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

· தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

· அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

· அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

· படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
தாது விருந்தி

· முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

· நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

· கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

· அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

· வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

உடல் மெலிய !!!!!!!!!!!!!!!

· 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

· இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

· கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

· 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

· நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

கை நடுக்கம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

· காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

· வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

கருத்தரித்த பெண்களுக்கு !!!!!!!!!!!!!!!

· கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

· குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.

· நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால்
· கைகால் வீக்கம் வராமலிருக்கும்.

· அமுக்கராங் கிழங்கை இடித்து 200-மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்கவைத்து 100-மில்லியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

மாதவிடாய் வலி தீர !!!!!!!!!!

· மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.
· மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.

கருப்பை கோளாறுகள் நீங்க !!!!!!!

· நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
· அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.
· முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.
· அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்
.
குழந்தை பாக்கியம் பெற !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

· வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தாய்ப்பால் சுத்தமாக
· தேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.

நன்றாக ஜீரணமாக !!!!!!!!!!!

· வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.

· எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.

· தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.

· எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.

· ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.

>>>டிசம்பர் 12 [December 12]....

நிகழ்வுகள்

  • 627 - பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.
  • 1098 - சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
  • 1787 - பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது.
  • 1812 - ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
  • 1817 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
  • 1862 - யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
  • 1871 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
  • 1901 - அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.
  • 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
  • 1923 - இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1939 - குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
  • 1940 - இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.
  • 1941 - அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.
  • 1941 - யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.
  • 1942 - நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
  • 1963 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
  • 1979 - ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.
  • 1984 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா புதிய அதிபரானார்.
  • 1985 - கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1988 - லண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
  • 1991 - ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1863 - எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)
  • 1927 - ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
  • 1949 - ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்
  • 1950 - எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்
  • 1981 - யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வீரர்

இறப்புகள்

  • 1940 - தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)
  • 2006 - இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)

சிறப்பு நாள்

  • கென்யா - விடுதலை நாள் (1963)

>>>ம‌னித உட‌ல் - ஆ‌ச்ச‌ரி‌ய‌ தகவ‌ல்க‌ள்

Photo: Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...

க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன...!
  • க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
  • ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.
  • கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.
  • மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
  • நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
  • உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.
  • ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
  • மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
  • மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன...!

>>>இந்திய ஜனாதிபதி மாளிகை

இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை - ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911 - ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை ' . யாகத்தான் இது உருவாக்கப்பட்டது தற்போது ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளி கை ,இந்
தியா சுதந்திரம் பெற்ற போது , ` அரசு இல்லம் ' என்று மறுபெயர்சூட்டப்பட்டது. நாடு 1950 - ல் குடியரசானபோது ` ராஷ்டிரபதி பவன் ' என்றதற்போதைய பெயரைப் பெற்றது.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக , பழைய ரெய்சினா , மால்ச்சா கிராமங்களில்இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர்

கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் , 1914 - ம் ஆண்டு முதல் 1918 - ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர் , கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில் , 1929 - ம் ஆண்டு ,மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை , நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும் , 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931 - ம் ஆண்டு ஜனவரி 23 - ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி , ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து , இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி , இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர்விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும் , அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே , மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள் , அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று , இங்குள்ள `மொகல் கார்டன் ' எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும் , பலவண்ண மொகலாயத் தோட்டம் , ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம் , உலக முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது.

>>>வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு

இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்
கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி சித்த மருத்துவ மைய சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம்.

''பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.
வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.'' எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும் !''

>>>இரவிலும் தொடர்ந்த ஆசிரியர் "கவுன்சிலிங்'

மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கவுன்சிலிங், நேற்று இரவு 12 மணியை கடந்தும், தொடர்ந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் மதுரை மாவட்டத்தில் 391 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு டிச.,9 ல், மாநகராட்சி இளங்கோ பள்ளியில் கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில், 92 பேருக்கு பணியிடம் ஒதுக்கப் பட்டது. 2வது நாளான நேற்று, 200 பேருக்கு பாடங்கள் வாரியாக பணியிடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால், இரவு 7 மணி வரை 100 பேருக்கு மட்டுமே, பணியிடம் ஒதுக்கியிருந்தனர். இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான "கவுன்சிலிங்' துவங்க உள்ளதால், எஞ்சியுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், இரவு 12 மணியை கடந்தும், கவுன்சிலிங் தொடர்ந்தது. பெண் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கணவருடன் இரவு முழுவதும் காத்திருந்து, "கவுன்சிலிங்'ல் பங்கேற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...