மருத்துவப் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வை நடத்த, இந்திய மருத்துவக்
கவுன்சிலான, எம்.சி.ஐ.,க்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே
நேரத்தில், அடுத்த உத்தரவு வரும் வரை, தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது
என, தடை விதித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான, பொது நுழைவுத் தேர்வை நடத்தும் திட்டத்தை, எம்.சி.ஐ., அறிவித்தது. இதற்கு, பல மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது.எம்.சி.ஐ.,யின் அறிவிப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும், மற்ற பல உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சமீபத்தில், தலைமை நீதிபதி, அல்தாமஸ் கபீர் தலைமையிலான, பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எம்.சி.ஐ., நிர்வாகம், தாங்கள் அறிவித்தபடி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான, அகில இந்திய அளவிலான, பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம்.அதேபோல், பல்வேறு மாநிலங்களும், பல்கலைக்கழகங்களும், மற்ற மருத்துவ கல்வி நிறுவனங்களும், அவரவர் நடத்தும் தேர்வுகளை, தொடர்ந்து நடத்தலாம்.ஆனால், இரு தரப்புமே, தாங்கள் நடத்தும் தேர்வு முடிவுகளை, சுப்ரீம் கோர்ட்டிலிருந்து, இது தொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரை, வெளியிடக் கூடாது.பொது நுழைவுத் தேர்வு விவகாரம் குறித்து, நாங்கள் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதிலுள்ள அம்சங்கள் குறித்து, ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு, போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, அதுவரை, வழக்கமான நடைமுறை தொடரும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, பல்வேறு கோர்ட்டுகளில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும், அடுத்த ஆண்டு, ஜனவரி, 15ம் தேதிக்குள், உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிடுகிறோம்.அதே நேரத்தில், பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, மனுக்கள் தாக்கல் செய்துள்ளவர்களும், இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற தரப்பினரும், தங்களின் விளக்கத்தை, அடுத்த மாதம், 7ம் தேதிக்குள், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>284 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி
பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11 கல்வியாண்டு தரம்
உயர்த்தப்பட்ட 284 நடுநிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்படவில்லை. இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல்
ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-11 கல்வியாண்டு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் 284 பள்ளிகள் தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தற்போது வரை தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறுகிய காலத்தில, தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தலைமை ஆசிரியர்கள் பதவி, பள்ளிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பள்ளிகல்வித்துறை சார்பில், நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்து செயல்பாடுகளும், நலத்திட்டங்களுக்கும் தலைமை ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
இதுபோன்ற சூழலில் தலைமை ஆசிரியர் பதவிகள் காலியாக இருப்பது ஏற்புடையதல்ல. மேலும் இப்பொறுப்பிற்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு நிரப்பப்படும் போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் காலியாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு பட்டதாரி ஆசியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் பணி இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு புதிய பணிநியமனத்திற்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடம் நிரப்பப்படாமல் இருப்பதால் இதுபோன்ற நிர்வாக ரீதியாக பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
>>>டிசம்பர் 17 [December 17]....
நிகழ்வுகள்
- 1398 - சுல்தான் மெஹ்மூடின் படைகளை டில்லியில் வைத்து டீமூர் படைகள் தோற்கடித்தன.
- 1577 - பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டான்.
- 1718 - பெரிய பிரித்தானியா ஸ்பெயினுடன் போரை அறிவித்தது.
- 1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
- 1834 - அயர்லாந்தின் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- 1903 - ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்தனர்.
- 1926 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
- 1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
- 1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
- 1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
பிறப்புக்கள்
- 1908 - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி, அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் (இ. 1980)
- 1959 - ரஞ்சகுமார், ஈழத்தின் சிறுகதையாசிரியர்
- 1972 - ஜோன் ஆபிரகாம், இந்திய நடிகர்
இறப்புகள்
- 1947 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (பி. 1879)
- 1967 - ஹரல்ட் ஹோல்ட், முன்னாள் ஆஸ்திரேலியப் பிரதமர் (பி. 1908)
சிறப்பு நாள்
- பூட்டான் - தேசிய நாள் (1907)
- ஐக்கிய அமெரிக்கா - ரைட் சகோதரர்கள் நாள்
- பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள்
>>>இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்!
"இலவச
ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம்
மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக
அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன்
எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில,
தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ்
பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள்
மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக
டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும்
குறித்து இந்த இணைய தளத்தை உருவாக்கியிருப்பவர் கூறும் விஷயங்கள்......
"1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியைத் தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியைச் சுமக்க தேவையில்லை.
2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.
3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட
அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.
4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை "பேஜ்
மார்க்" செய்து ஆசிரியருக்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள்
அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்தப்
பக்கங்கள் கிடைக்கும்.
5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ
சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம்
உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.
6. மாதிரி
வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட
கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி
செய்யலாம்.
7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தப்
புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள்
குழந்தைகளுக்குப் பாடம் நடத்தலாம்.
8. பள்ளி மற்றும் டுட்டோரியல்
கல்லூரிகளில் "புரஜக்டர்" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தைப் பெரிய
திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.
9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.
10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து
புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/-
அறிமுகபடுத்தப்படுகிறது.
இந்த போர்ட்டலில் எந்த ஒரு
புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்தப் பக்கத்துக்கும்
நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும்
ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு
மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம்
அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு
பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி
செய்யபட்டுள்ள்து. அதனால் அதுவே உங்களுக்கு படிக்கும்.
மிக
சீக்கிரம் வீடியோ கிளாஸஸ் தொடங்க உள்ளோம். மற்றும் உலகில் உள்ள அனைத்து
கல்வியாளர்களின் டிப்ஸ் வார பாட திட்டம், வர்ச்சுவல் கிளாஸ் ரூம் அனைத்து
வசதியும் படி படியாக செயல்படுத்துவேன்.
இது ஒரு இலவச கல்வி சேவை.
இதற்காக மூன்று சர்வர்கள் (அமெரிக்கா / கனடா மற்றூம் இந்தியாவில்)
நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 2 - 4 லட்சம் மாணவர்கள் இலவசமாக
படிக்க ஏதுவாக ஹைஸ்பீட் பேன்ட்வித் டேட்டா சென்டரில் ஹோஸ்ட்
செய்யபட்டுள்ளது."
நன்றியுடன் - நாகாராஜன் ரவி - 14 நவம்பர் 2011. - nag@insightgroupglobal.com
பள்ளிக்கல்விக்கு மிகுந்த பயனுள்ள இந்த இணையதள முகவரி: http://www.samacheeronline.com/
>>>நீல்சு போர் (Niels Bohr)...
நீல்சு என்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr) அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை
கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர். இவர்
இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின்
புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல
அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல்
கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்சுட்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம்
கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும்
தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர்
அறியப்படுகின்றார்
போர் டென்மார்க்கில் கோப்பனாஃகனில் 1885 இல் பிறந்தார். இவரின் தந்தை கிறிசிட்டியன் போர், கிறித்தவ மதத்தின் உலுத்திரன் பிரிவு மதத்தின் வழிபாட்டாளராக இருந்தார். இவர் கோப்பன்னாஃகன் பல்கலைக்கழகத்தில் உடலியக்கவியல் பேராசிரியராக இருந்தார். தாய் எல்லென் ஆட்லர் போர் செல்வாக்கு மிக்க செல்வந்த யூதக் குடும்பத்தில் இருந்து வந்தவர். நீல்சு போரின் தம்பி ஹெரால்டு போர் (Harald Bohr), கணிதவியலராகவும், டென்மார்க்கின் தேசிய கால்பந்தாட்ட வீரராகவும் இருந்தார். நீல்சு போர் அவர்களும் கால்பந்தாட்ட விளையாட்டுக்காரரும் ஆர்வலரும் ஆவார்.
நீல்சு போர் முதலில் 1903 இல் கோப்பனாஃகன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்திருந்தார்.ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவித்து இருந்த தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது பிறகு புகழ்பெற்ற கிறிசிட்டியன் கிறிசிட்டியான்சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இருந்த புகழ்பெற்ற சோ. சா. தாம்சன் (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் செய்தார். பின்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் எர்ணசுட்டு ரதர்போர்டு அவர்களிடம் பயின்றார்.
ரதர்போர்டு அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் போர் ஒப்புரு (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார். நீல்சு போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலயத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய ஒளியன் ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார். இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.
நீல்சு போர், அவருடைய மனைவி மார்கரெட் நோர்லுண்டு (Margrethe Nørlund) ஆகிய இணையருக்கு ஆறு குழந்த்தைகள் பிறந்தனர். இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர். மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். அவர்களில் ஆகெ நீல்சு போர் 1975 இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார்.
>>>வசம்பு [Sweet Flag]...
இயற்கையில்
கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை
முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ
குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி,
வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க
கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ்
(Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட்
ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம்
முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான்.
கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில்
கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு
பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே
இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
# இதில் முக்கிய விஷயமாக
சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு,
மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது...
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
# இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது...
>>>வால்மார்ட் வருகை இந்தியாவிற்கு பாதகமா சாதகமா
சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடு’ என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு
வருகிறது. சில்லறைவணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில்
வால்மார்ட், கேர்போர், மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து
சில்லறைவணிகத்தில் ஈடுபட முடியும். இந்நிறுவனங்கள் நம்மூர் கடைகளை விட
மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை. இந்த
சில்லறைவணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழையும்போது தற்போது இந்த
வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம்
கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.
சில்லறைவணிகம் (Retail Industry) இரண்டு பிரிவுகளாக உள்ளன. முறையாக லைசன்ஸ் பெற்று, விற்பனை வரி, வருமான வரி போன்றஅனைத்து வகை வரிகளையும் கட்டும் வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்டவை (Organized) என்றும் மேற்குறிப்பிட்ட எந்தவகை வரிகளையும் செலுத்தாத வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாதவை (UnOrganized) என்றும் இரண்டு பிரிவுகளாக உள்ளன.
இந்தியாவில் மொத்த சில்லறைவணிகத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் தான் முதல் வகையைச் சார்ந்தவை. எஞ்சிய 97 சதவீதம் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட சில்லறைவணிகம் 70 முதல் 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விற்பனை ரீதியில் சில்லறைவணிக நிறுவனங்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்று ‘சிங்கள் பிராண்ட்’ சில்லறைவணிகம். இதற்கு நோக்கியா ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் ஒரே ஒரு பிராண்ட் செல்போன் மட்டும் விற்பனை செய்யப்படும். மற்றொன்று ‘மல்ட்டி பிராண்ட்’ சில்லறை வணிகம். இதற்கு யுனிவர்செல் ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் பல கம்பெனி பிராண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்படும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டமானது இந்த இரண்டு வகையான சில்லறைவணிகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘சிங்கள் பிராண்ட்’ சில்லறைவணிகத்தில் 51% முதல் 100% வரையிலும், ‘மல்ட்டி பிராண்ட்’ சில்லறை வணிகத்தில் 51% வரையிலும் அன்னிய முதலீட்டை உயர்த்தியிருக்கிறது இந்த சட்டம் திருத்தம்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இனி வால்மார்ட், டெஸ்கோ, பிளாக்பெர்ரி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யும். அன்னிய முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டு வருவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இடைத்தரகர்களை விலக்கப்படுவதால் விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும், இதன் காரணமாக வேளாண் உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் இதற்கு ஆதரவாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் சில்லறைவணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் மளிகை பொருள்களை வாங்கும் அண்ணாச்சிக்கடைகளும் பெட்டிக்கடைகளும் காணமால் போய், சில்லறை வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் உள்ளூர் வியாபாரிகளுக்கு கிடைக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போய்விடும் அபாய நிலையும் தோன்றியுள்ளது.
இந்தியா பல தரப்பட்ட மக்களை கொண்டதொரு தேசம். பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் நடுத்தர வர்கத்தினராகவும் இருக்கின்றனர். இவர்கள் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்காமல் அன்றைக்குத் தேவையாக மளிகை பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். உதாரணமாக 50 மில்லி நல்லெண்ணையும் 2 ரூபாய்க்கு தேங்காய் சில்லும் 50 பைசாவுக்கு பச்சை மிளகாயும் வாங்குவார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்ற சிறுவணிகர்களால்தான் முடியும். அவசர தேவைக்கு கடனாகவும், மாதத் தவணையில் பொருள்கள் வாங்கும் வசதியும் இல்லாததும்தான்.
‘ரிலையன்ஸ், டாட்டா மற்றும் பிர்லா போன்றநிறுவனங்கள் முன்னமே இந்த துறையில் இருக்கின்றனவே, இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு மக்கள் பயப்படுகிறார்கள்?’ என்றகேள்வி எழும். ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்களுக்கு சில்லறைவணிகம் பிரதானமான தொழில் அல்ல. அவர்கள் நடத்தும் பலவகையான தொழில்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்.
ஆனால் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கும் Walmart,Carefour,Tesco போன்றவெளிநாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முதன்மையான தொழில் ஆகும். எனவே மிகத் தெளிவாக திட்டமிட்டு களத்தில் இறங்குவார்கள். இதனால் தற்போதைய சிறு வணிகர்கள் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிழைப்புக்காக வேறு தொழில் தேட வேண்டியிருக்கும். தொழிலை விட இயலாதவர்கள் வேறு வழியில்லாமல் நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும்.
சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகள் ஒழிக்கப்பட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வரும் என்று மறுபுறம் அச்சமும் தோன்றியுள்ளது. ஒருவகையில் இந்த அச்சம் நியாயமானதாகக் கூட தோன்றுகிறது. காரணம் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராகத்தான் இருக்கிறது. எனவே, பண்ணை விவசாயம் வந்தால் சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.
மக்களுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்றகருத்தும் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவாக சொல்லப்படுகிறது. மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏந்தியிருக்கும் ஆயுதம். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று ஏற்கனவே அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட்.
வால்மார்ட்
இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறைஅதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றசாம்வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்றபலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்றகடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையைவிட மலிவாகவும் விற்று வந்தது இந்த வால்மார்ட். சாம்வால்டன் இரண்டு வகையான வியாபார நுணுக்கத்தை கையாண்டார். ஓன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பது. மற்றொன்று உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் பொருட்களை கொள்முதல் செய்வது. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட்.
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்களில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி அசுர வளர்ச்சியடைந்தது. இந்த காலகட்டத்தில் தோன்றிய உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது. 1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பல நாடுகளில் சில்லறைவணிகத்தில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.
அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35% வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%. ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது வால்மார்ட். அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்றபல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% முதல் 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன. தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. மாறாக அதே மாதிரி பொருட்கள் வேறு நிறுவனத்திடமிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ பெறப்படும்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் அதிகரிக்க முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. ஆனால் வால்மார்ட் விலை உயர்வுக்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி. போன்று விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து பல லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.
சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்ட்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.
உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஏழை நாடுகளின் தொழிலாளர்களை ஒடுக்குவதைப் போன்றே தனது ஊழியர்களையும் ஒடுக்குகிறது வால்மார்ட். எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. ஒருவர் முன்னர் எப்போதாவது தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வலை வாய்ப்பு கிடையாது.
‘ஏன் 51 சதவீத முதலீடு? ஏன் இதை 49 சதவீதமாக வைத்திருக்கக் கூடாது? அந்த இரண்டு சதவீதத்தை இந்திய நிறுவனங்களால் கொண்டு வர முடியாதா?’ என்றகேள்வி எழும். இந்த இரண்டு சதவீத வேறுபாட்டில் கட்டுப்பாடு கைமாறும் என்பதுதான் இதில் உள்ள சிதம்பர ரகசியம்.
இக்கட்டான இந்த நிலையில் சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடு என்பதை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்கலாம் என்பது கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். மேலும் இத்தகைய நிறுவனங்கள் பெரு நகரங்களில் அதாவது 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 53 நகரங்களில்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதும் ஆறுதலான செய்தியாக உள்ளது. எது எப்படி இருப்பினும் இதன் நன்மை தீமைகள் பற்றி தீர்க்கமாக இப்போது கூறமுடியாது, காலம்தான் பதில் சொல்லும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...