கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>சார்லி சாப்ளின்
அவன்
பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஜூனியர். அவனோட அப்பா, அம்மா ரெண்டு
பேரும் நாடகக் கம்பெனிகளில் பாட்டுப் பாடி நடிக்கிறவங்க. அவனுக்கு ஓர்
அண்ணன். அவன் பெயர் சிட்னி.
ரெண்டு பேரும் ரொம்பப் பாவம். காரணம், அவங்க அப்பாவும் அம்மாவும்
பிரிஞ்சுட்டாங்க. விவாகரத்துக்குப் பிறகு, ரெண்டு பேரையும் வளர்க்க அம்மா
ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டம். சார்லஸ் ஸ்கூலுக்கே போனது
இல்லை.
அவன் என்ன செய்வான் தெரியுமா? வீட்டு மாடிப்படியின்
அடியில் இருந்த சன்னல் வழியே சாலையில் நடக்கும் எல்லாத்தையும்
பார்த்துக்கிட்டே இருப்பான். அவனுக்கு அப்பப்போ உடம்பு சரி இல்லாமல்
போயிரும். படுக்கையில் அவன் படுத்து இருக்கும்போது, அவனோட அம்மா அவனுக்காக
வெளியில் நடப்பதைச் சொல்லி, அழகா நடிச்சுக் காட்டுவாங்க. அவன் அம்மா பேரு
ஹெனா. 'சார்லஸ் இவ்வளவு நோஞ்சானா இருக்கானே’னு வருத்தப்பட்டாங்க.
ஒரு நாள்... அம்மா வழக்கம்போல நாடக மேடையில் பாடி நடிக்கப் போனாங்க.
அன்னைக்கு முதல் முறையா சார்லஸையும் கூட்டிக்கிட்டுப் போனாங்க.
நாடகத்துக்கு சரியான கூட்டம். பாதி நாடகத்துல பாடிக்கிட்டு இருக்கும்போது
அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே... திடீர்னு மயக்கம்போட்டு
விழுந்துட்டாங்க. பார்வையாளர்கள் மத்தியில் ஒரே கலாட்டா. அந்த நேரம்,
திடீர்னு அந்தப் பாட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது. யார்னு
பார்த்தா, நம்ம சுட்டி நாயகன் சார்லஸ்.
வீட்டில் அடிக்கடி அம்மா
பாடுவதைக் கேட்டு மனசில் பதிச்சு இருந்தான். அந்தப் பாட்டை சூப்பராப்
பாடிக்கிட்டே மேடையில் வந்து நின்னான். எல்லாரும் கைதட்டினாங்க. மயக்கம்
தெளிஞ்ச அம்மாவும் அசந்துட்டாங்க. அப்போது சார்லஸ் வயசு 5.
அப்போ
ஆரம்பிச்சதுதான். அம்மா அடிக்கடி உடம்பு சரியில்லாமல் கஷ்டப்படுவாங்க.
அண்ணனும் தம்பியும் நடிக்கப் போவாங்க. ஆனால், சார்லஸுக்கு அந்த நாடகங்கள்
வெறுப்பாக இருந்தன. அவன் கேட்டான், ''அம்மா ஏன் எப்பவும் அழவைக்கும்
நாடகங்களையே நடத்துறாங்க? நிஜ வாழ்க்கைதான் கஷ்டமா இருக்கு, நாம்
எல்லோரையும் சிரிக்கவெச்சா என்ன?'' என்றான்.
அவன் மனசு முழுக்க ஒரே எண்ணம், 'நாம் உலகையே சிரிக்கவைக்க வேண்டும்’ என்பதுதான்.
சார்லஸுக்கு ஏழு வயதாக இருந்தபோது, மன நோய் காரணமாக அவன் அம்மா ஒரு
காப்பகத்தில் சேர்க்கப்பட்டாங்க. அண்ணனும் தம்பியும் தனியாக விடப்பட்டாங்க.
அண்ணனையும் பார்த்துக்கிட்டுத் தன்னையும் பார்த்துக்கும் அளவுக்கு சார்லஸ்
திறமைசாலியா மாறி இருந்தான். தி எயிட் லாங்ஷையர் லேட்ஸ் (The Eight
Lancashire Lads) என்ற நாடகத்தில் சிரிப்பு நடிகனாக மேடை ஏறியபோது அவனுக்கு
வயசு 8. அவன் மேடையில் செய்த சேட்டைகளைப் பார்த்து எல்லாரும் விழுந்து
விழுந்து சிரிச்சாங்க. சின்ட்ரெலா, ஜிம், ஷெர்லாக் ஹோம்ஸ் என்று எந்த
வேடத்தில் நடித்தாலும் எல்லாரையும் சிரிக்கவைத்தான்.
ஒரு முறை
ஊருக்குள் டேரா போட்ட சர்க்கஸில் ஜோக்கர் வேடம்போட்டு, குழந்தைகளை வயிறு
வலிக்க சிரிக்கவெச்சான். 'உலகையே சிரிக்கவைக்கும்’ சார்லி சாப்ளினாக,
சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தான்.
'உங்கள் வாழ்வில் சிரிக்காத நாள், வீணாக்கப்பட்ட நாள்’ என்பது சார்லி சாப்ளினின் பொன்மொழி.
>>>வியாபாரி
பேருந்து
நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில்
பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி,
பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க
முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில்
ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல
விற்பனை.
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து
பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே
இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி
அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்.
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை
பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின்
சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம்
பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக்
கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக
விற்பனை ச...ெய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி
விட்டார்.
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப்
பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு
வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து
ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன்
வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு
வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை
மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
எப்பவும் வியாபாரி வியாபாரிதான்..!
>>>அம்பேத்கர்.
சாதாரண ஒரு படைவீரனின் மகனாக,
வரலாற்று வார்த்தைகளால் ஒடுக்கப்பட்ட குலத்தில் பிறந்து, இந்தியாவின் ஈடு
இணையற்ற அறிஞராக, சாதி வெறியின் தலை மேல்
சம்மட்டி அடிகொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புது வெளிச்சம் தந்த புரட்சி
வீரனாக மறைந்த அம்பேத்கரின் வாழ்வில் எதிர்கொண்ட வேதனைகளின் சரித்திரம்
இனி வேறு எவராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.
சிறுவயதில், பள்ளியிலும் மழைக்கு ஒதுங்கிய வீட்டிலும் பட்ட அவமானங்களினால் அன்று மட்டும் முடங்கியிருந்தால் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படியாக இருக்கும் என ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அன்று அவரை சுற்றிச் சூழ்ந்திருந்தது அடர் இருட்டு, கடைத்தேறவே வழியில்லாமல் சாதி வெறியர்களால் உருவாக்கப்பட்ட இருட்டு. அப்போது அவருக்கு முன் இருந்த ஒரே தூரத்துவெளிச்சம் கல்வி. கண்களை இறுக மூடி தளராத நெஞ்சுரத்துடன் அந்த வெளிச்சத்தை மட்டுமே பற்றுக்கோடாக்கி அவர் நடை பயின்றதன் பலன் இன்று லண்டன் மியூசத்தில் பெருமைப்படத்தக்க அறிஞர்களின் வரிசையில் கார்ல் மார்க்ஸுக்கு இணையான இடத்தில் அவரைப் புகைப்படமாக மாட்டப்படும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வணிகம், கல்வி, சமயம் என சகல துறைகளிலும் அசாத்தியமான அறிவாற்றலும், எழுத்து வன்மையும், மேதமையும் கொண்டிருந்த இதுவரையிலான இந்தியாவின் ஒரே அறிவுலக நாயகன் அம்பேத்கர் மட்டுமே. அப்படிப்பட்ட மேதை வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் கணக்கில்லாத விருதுகளைத் தந்து அந்த நாட்டின் அரசாங்கம் பெருமைக் கொண்டிருக்கும்.
ஆனால், அப்பேர்ப்பட்ட தலைவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்கப்பட்டதே அவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் என்பது நாம் அனைவரும் வருத்ததோடு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
எந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க அம்பேத்கர் அல்லும் பகலும் அயராது வியர்வை சிந்தினாரோ அந்தச் சட்டங்களை செயல்படுத்தும் அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடம் அவரை தேசத்தின் சிற்பியாக அங்கீகரிக்க மனமில்லாமல் அவரது புகைப்படத்துக்கு அனுமதி மறுத்து வந்தது. பாரதப் பிரதமராக வி.பி.சிங். பதவி ஏற்று கட்டளை இட்ட பிறகுதான் அந்தத் தடையும் விலகி நம் நாடாளுமன்றம் தன் கதவுகளைக் திறந்து வழிவிட்டது.
(இன்றும் கிராமப்புற மக்கள் தங்களின் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு கொஞ்சமேனும் பொருளாதார சுவாசக் காற்றை சுவாசிக்க காரணமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை தன் ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தியவர்தான் திரு.வி.பி.சிங் அவர்கள்)
இவை அனைத்துக்கும் சிகரமாக இருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு உண்டான நெருக்கடி...! இயக்குனர் ஜாபர் படேல் இயக்கத்தில் என்.எப்.டி.சி. தயாரிப்பில் உருவான அந்தத் திரைப்படம் கூட தற்பொழுதுதான் வெளிவந்து சில நாட்களில் ஆதிக்க சாதியின் அழுத்தத்தில் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் எந்த தேசத்தின் உண்மையான அகவிடுதலைக்காகப் போராடினாரோ அந்த தேசத்தில் அவருக்கான முழுமையான மதிப்பும் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதற்க்குத்தான் எத்தனை தடங்கல்கள், எத்தனை தடைகள்!
இவையனைத்தையும் கடந்து இதே தேசத்தில் இன்னொரு புறம் உலகம் வியக்கும் ஒரு மகத்தான பெருமையும் அவருக்கு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களிலும் இன்று நின்றுகொண்டிருக்கும் அவரது சிலைகளின் சாதனை, உலகின் வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத பெருமைகளில் ஒன்று. ஆனால், எண்ணிக்கையில் 6 லட்சமாக இருந்தாலும் அவை இரண்டாகப் பிளவுண்டு 12 லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை!
நூல்: அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
ஆசிரியர் அஜயன் பாலா.
விகடன் வெளியீடு.

>>>டிசம்பர் 26 [December 26]....
நிகழ்வுகள்
- 1776 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியர் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
- 1792 - பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1793 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.
- 1811 - வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம்ஸ்மித் இறந்தார்.
- 1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
- 1862 - ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
- 1882 - யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின.
- 1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1925 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.
- 1944 - ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் ஜேர்மனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
- 1948 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
- 1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
- 1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1976 - நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.
- 1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
- 1985 - கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபொசி கொல்லப்பட்டார்.
- 1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).
- 1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
- 1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 2003 - தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
- 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
- 2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.
பிறப்புகள்
- 1791 - சார்ள்ஸ் பாபேஜ், ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1871)
- 1880 - எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (இ. 1949)
- 1893 - மா சே துங் சீன மக்கள் குடியரசின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (இ. 1976)
இறப்புகள்
- 1530 - ஸாகிருதீன் பாபர், இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் (பி. 1483)
- 1972 - ஹரி ட்ரூமன், 33வது அமெரிக்காவின் 33வது அதிபர் (பி. 1884)
- 1999 - சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918)
- 2006 - ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அதிபர் (பி. 1913)
சிறப்பு நாள்
- பொதுநலவாய நாடுகள் - பொக்சிங் நாள்
- கேரளா - சபரிமலையில் மண்டல பூஜை
- குவான்சா - முதல் நாள் விழா
>>>10ம் வகுப்பு தனி தேர்வு 28.34 சதவீதம் பேர் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தனி தேர்வில், 28.34 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
அக்டோபரில், 10ம் வகுப்பு தனி தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., -
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து,
59,685 பேர் தேர்வெழுதியதில், 16,916 பேர், தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி
சதவீதம், 28.34. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில்,
மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
>>>இணையவழி பதிவு திட்டம் வாபஸ் கிடையாது தேதியை மட்டும் நீட்டிக்க தேர்வுத்துறை முடிவு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத, இணையவழி பதிவு செய்வதற்கான கடைசி
தேதியை, ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு செய்ய, தேர்வுத்துறை
திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்த புதிய திட்டம், வாபஸ்
பெறப்பட மாட்டாது எனவும், தேர்வுத் துறை திட்டவட்டமாக தெரிவித்தது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்கள், இணையதளம் வழியாக
பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரைப் பற்றிய
விவரங்கள், ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,
பள்ளிகளில் இருக்கின்றன. இவற்றை வைத்தே, இணையதளவழி பதிவிற்கான வேலைகளை,
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும்,
தேவைப்பட்டால், சம்பந்தபட்ட மாணவ, மாணவியரை அழைத்து, விவரங்களை பெறலாம்
எனவும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த பதிவை, ஜனவரி, 4ம்
தேதிக்குள் செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை அறிவிப்பு செய்திருந்தது,
மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10
லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் விவரங்களை, ஒரு வாரத்திற்குள் பதிவு
செய்ய முடியாது என்பது, ஆசிரியர்களின் கருத்தாக இருந்தது. மேலும், திடீரென,
கடைசி நேரத்தில், புதிய திட்டத்தை அமல்படுத்துவதை தவிர்த்து, பழைய
முறையில் விவரங்களைப் பெறவும், தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா கூறியதாவது: இணையதள வழி பதிவு செய்யும் திட்டத்தை, எக்காரணம்
கொண்டும் வாபஸ் பெற மாட்டோம். மாணவர்களே, விவரங்களை பதிவு செய்ய வேண்டிய
அவசியம் கிடையாது. இருக்கிற விவரங்களை வைத்து, ஆசிரியர்களே, இணையதளத்தில்,
பதிவு செய்யலாம். அனைத்துப் பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் வசதி, இணையதள
வசதிகள் இருக்கின்றன. அறிவிப்பு வெளியான இரு நாட்களிலேயே, ஏராளமான பதிவுகள்
செய்யப்பட்டுள்ளன. ஜனவரி, 4ம் தேதிக்குள் பதிவாகும் எண்ணிக்கையின்
அடிப்படையில், தேதியை நீட்டிப்பது குறித்து, முடிவு செய்வோம். இவ்வாறு
வசுந்தரா தெரிவித்தார். இணையவழி பதிவு, ஜனவரி இறுதி வரை, நீட்டிப்பு
செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...