கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறிப்பிடத்தக்கவர். பாஞ்சாலங்குறிச்சியில் 1760-ஆம் ஆண்டு ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்முவுக்கும் ஆறுமுகத்தம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வரவடிவு, துரைக்கண்ணு என இரு சகோதரிகளும் இருந்தனர்.

அழகிய வீரபாண்டியபுரம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஓட்டப் பிடாரம் பகுதியில் ஆட்சிசெய்த ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு இருந்தார். பிறகு, 1791-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலிச் சீமை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் அதிகார வரம்புக்குள் வந்தது.

1797-ல் ஆலன்துரை என்ற ஆங்கிலேயேர் பாஞ்சாலங் குறிச்சிக்கு வந்தார். அவரைப் போரில் கட்டபொம்மன் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, கப்பம் கட்ட மறுத்த கட்டபொம்மனிடம் ஆங்கிலேய கலெக்டர் ஜாக்சன் விளக்கம் கேட்டார்.

'அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல்’ என்ற மன உறுதியுடன் நெஞ்சை நிமிர்த்தித் தண்டனையை ஏற்றுக்கொண்ட கட்டபொம்மன், அக்டோபர் 16, 1799-ல் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
 
 வீரபாண்டிய கட்டபொம்மனைக் கெளரவிக்கும் விதமாக 1999-ல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை!

>>>அழகாவோம் - வெ.இறையன்பு I.A.S.

நம் எல்லோருக்குமே அழகாக தோன்ற வேண்டும் என்று ஆசை!

சிலருக்கோ தாம் மட்டுமே அழகென்று திடமான நம்பிக்கை. அழகு என்பது சிலருக்கு நப்பாசை. சிலருக்கு அது ஒத்தாசை.

எவ்வளவு முயன்றாலும் ஒரு சதவிகிதம்கூட நம் முகத்தை மாற்ற நம்மால் முடியாது. இயற்கை நம்மை படைத்த விதத்தை சிகை திருத்தி, முகம் கழுவி செம்மைப்படுத்த மட்டுமே இயலும். ஆனாலும் எதையாவது செய்து நாம் அழகாகி விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புகள் ஏராளம்!

இருக்கிற முகத்தை அசிங்கமாக்காமல் பார்த்துக்கொள்ள நம்மால் முடியும். இயல்பாக இருக்கிறபோது நாம் எல்லோருமே அழகுதான். கோபப்படுகிற போது நாம் அசிங்கமாக தோன்றுகிறோம் என சிலர் சொல்வதுண்டு.

கோபப்பட வேண்டிய இடத்தில் உணர்வுகளை விழுங்கிக்கொண்டு அமைதி காப்பதுகூட அருவருப்புதான். நியாயமான கோபங்களும், சமூகத்தில் நடக்கும் அவலங்களின் மீது ஏற்படும் கோபங்களும் முகத்தை சிவப்பாக்கும்போது ஏற்படும் கம்பீரம் நம்மை அழகாக்குகிறது.

பலவீனமானவர்கள் மீது சிறுபிள்ளைத்தனமாக கொள்கிற கோபம் முகம் முழுவதும் ஓடுக்கல்களை உண்டாக்குகிறது.

அழுகிறபோது மனிதன் அழகை இழந்துவிடுகிறான் என்று சொல்பவர்கள் உண்டு. வாய் கோணலாகி, கன்னங்கள் புடைக்க, சக்தியற்று வெளிப் படும் அழுகையில் பரிதாபம் தோன்றுமே தவிர அழகு ஏற்படாது என்று வாதிப் பவர்களும் இருக்கிறார்கள்.

நெஞ்சை உலுக்கும் சோகத் தில் மௌனமாக, ஆரவாரம் செய்யாமல், தன் கண்ணீர் துளிகளை இரங்கற் கவிதையாக மாற்றுகிற மனிதர்கள் அழுகையைக்கூட அழகாக்கிவிடுகிறார்கள். அதில் அன்பு, பாசம், இயலாமை, வருத்தம், பிரிவு, அக்கறை ஆகிய அனைத்து உணர்வுகளும் பிரதிபலிக்கின்றன.

அழகாக்கும் ஆசையில் நிறைய ஒப்பனைகள் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் அழகை இழக்கிறோம். நம் இயல்பு தன்மையுடன் ஒட்ட மறுக்கின்ற அவை, ஒட்டவைத்த மலர்களைப் போல் மணம் பரப்ப மறுக் கின்றன. சின்னக் குழந்தைகள் வெட்கப் படும்போதுகூட நம் மனதில் மகிழ்ச்சி தூரல் தெளிக்கப்படுகிறது. இயல்பான உணர்வுகள் தான் எப்போதுமே முகத்தில் அழகையும், ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.

உண்மையிலேயே மனித முகங்களை கவனிப்பவர்கள், அவர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அசிங்கமாக தோன்றுவது கொட்டாவி விடும்போதுதான் என்பதை புரிந்துகொள்வார்கள். படுக்கை அறையில் விடுகிற கொட்டாவியை காட்டிலும், பள்ளியில் விடுகிற கொட்டாவி அதிகஅசிங்கத்தை கொடுக்கும். கண்களின் துடிப்பையும், முகத்தின் வசீகரத்தையும், உதடுகளின் இருத்தலையும், கன்னங்களின் செழுமையையும் கொட்டாவி ஒரே நொடியில் களவாடிவிடுகிறது.

சோம்பலும், மந்தத்தனமும் கொட்டாவிகளை பிரசவிக்கின்றன. சுறுசுறுப்பான முகங்களும், துருதுருவென தெரியும் வெளிப்பாடுகளுமே, அருகில் இருப்பவர்களையும் ஆனந்தப்படுத்துகின்றன!

>>>பட்ஜெட்டில் கல்விக்கான நிதி 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு

இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில் இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது. தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர்கல்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
கல்வி துறை நிதி குறைப்பு, மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி மதிய உணவு திட்டத்தை கையாண்டு வரும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி நெருக்கடி, வரும் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சகத்தால் ஈடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளை கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் நிதித் தொகை குறைப்பு உள்நாட்டு கல்வி வளங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

>>>மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை

"வரும் கல்வியாண்டில், மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை, ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கையில், 100 சதவீதத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தற்போதே, விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்கக் கல்வி இயக்குனரகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து, தமிழகம் முழுவதும், சிறப்பு சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. விழிப்புணர்வு பேரணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், கல்வி அலுவலர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்.
இதற்கான பேரணி முன்னேற்பாடுகள், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தி முடிவு செய்ய வேண்டும். பள்ளிக்கு, 100 சதவீதம், குழந்தைகளை அனுப்பும் கிராமங்களுக்கு, பரிசு வழங்கி கவுரவித்தல், நலத் திட்ட உதவிகள் சார்ந்த அனைத்து திட்டங்கள், இலவச சலுகைகள் போன்றவற்றை விளம்பரப்படுத்த வேண்டும். வீதி நாடகங்கள், பாடல்கள், சிறு நாடகங்கள், பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

>>>செய்முறைத் தேர்வில் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் எவ்வளவு?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் குறித்து, தேர்வுத்துறை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை பாட தேர்வில் தேர்ச்சி பெற, செய்முறையில், குறைந்தபட்சம், 30 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில், 40 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற நிலை, முதலில் இருந்தது. இந்த நடைமுறை, தற்போது இல்லை.
அறிவியலில், அதிக மாணவர்கள் தோல்வி அடைவதை கருத்தில் கொண்டு, செய்முறை தேர்வில், 50க்கு, 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வில், 150க்கு, 30 மதிப்பெண்களும் எடுத்தாலே, தேர்ச்சி என்ற நிலைதான், சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
பத்தாம் வகுப்பு, அறிவியல் செய்முறைத் தேர்விற்கு, எழுத்து தேர்வில், 75க்கு, 20 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில், 25க்கு, 15ம் எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

>>>லூயிஸ் பிரெய்ல்...

 
பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவரும் ஒரு பார்வையற்றவர்.

லூயிஸ் பிரெய்ல் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும்போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. உரிய மருத்துவம் செய்யாததால் அவரது கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.

தன் அயராத முயற்சியால், பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.

பிரெய்ல் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

>>>வகுப்பில் பயன்படுத்தும் கரும்பலகையைக் கண்டுபிடித்தது யார்?

''ஸ்காட்லாண்டின் எடின்பர்க் நகரில் 1128-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பள்ளி, 'ராயல் ஹை ஸ்கூல்.’ இங்கே, தலைமை ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் பில்லன்ஸ் என்பவர்தான் முதல் முதலாக கரும்பலகையை அறிமுகம் செய்தார். அதே 11-ம் நூற்றாண்டில் இந்தியர்களும் கரும்பலகையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகே உலகம் முழுவதும் இது பரவியது. 1800-ம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் பள்ளிகளில் கரும்பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் அதற்கு சாக்போர்டு என்று பெயரிட்டார்கள். தொடக்க காலத்தில் 'சிலேட்’ எனப்படும் கற்களில் இந்தக் கரும்பலகைகளைச் செய்தார்கள். இப்போது, கரும்பலகைகள் வேறு வண்ணங்களில் ஆடைகள் அணிய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, பச்சை நிறத்தில் பட்டையைக் கிளப்புகின்றன.''

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...