கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பீட்ரூட்

 
பீட்ரூட்-ல் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மலச்சிக்கலை நீக்கும்.

புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

முகப்பொலிவு கூடும்.

சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது

>>>பேர்ள் துறைமுகம் {Pearl Harbor}...

 
பேர்ள் துறைமுகம் (Pearl Harbor) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹோனலாலுவின்மேற்கே அமைந்துள்ள ஒவாகு தீவில் உள்ள ஒரு துறைமுகம். இத்துறைமுகத்தின் மிகப் பெரும்பாலானபகுதிகளும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு முக்கிய கடற்படைத்தளமும் ஐக்கியஅமெரிக்கப் பசிபிக் கடற்படையின் தலைமையகமும் ஆகும். ஜப்பானியர்கள் இத்துறைமுகத்தின் மீது டிசம்பர் 7, 1941 ஆம் ஆண்டில் நடத்திய குண்டுத் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடவைத்தது

பேர்ள் துறைமுகம் மீதான திடீர்த் தாக்குதல் ஐக்கிய அமெரிக்காவைத் திகைக்க வைத்தது எனலாம். டிசம்பர் 7, 1941 அதிகாலை ஜப்பான் பேரரசின் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் விமானங்களும் தளபதி இசரோக்குயமமோட்டோ தலைமையில் இத்துறைமுகம் மீது திடீர்த் தாக்குதலை மேற்கொண்டன.

இத்தாக்குதல்நடத்தப்படக்கூடும் என ஏற்கனவே அமெரிக்கா அறிந்திருக்க ஏதுநிலை இருந்திருந்தாலும் அமெரிக்காஇத்தாக்குதலுக்குத் தயாராக இருக்கவில்லை. அன்று காலை 6:09 மணிக்கு ஆறு விமானத் தாங்கிக் கப்பல்களில்இருந்து 181 விமானங்கள் குண்டு மழை பொழிய ஆரம்பித்தன. அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் இராணுவத் தளங்களும் அழிக்கப்பட்டன.

மொத்தமாக 21 கப்பல்கள் அழிக்கப்பட்டு 2,350 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 68பேர் பொது மக்கள். 1,178 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டாம்உலகப் போரில் நேரடியாகக் குதித்தது .

>>>முகமது அலி...

 
சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி.

காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர். பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்தகொண்டு இருந்த எளிய மனிதர். க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றிதான். தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.

இரண்டு முறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்த மனிதருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம். இவர் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்ககூட ஆளில்லை; நிறவெறி -வெய்ட்டர்கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை நதியில் வீசிவிட்டு நடந்தார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரை முகமது அலி என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார். கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும், உலக சாம்பியன் ஆனார்.

வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்து அதில் இவரையும் சேர சொன்னது. "அப்பாவி மக்களை கொல்லும் போரில் கலந்துகொள்ள மாட்டேன்!"என இவர் சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது. காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது. மூன்று வருடம் வனவாசம். பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவுதான் என நாடே நகைத்தது.

அப்பொழுதுதான் உலக சாம்பியன்ஷிப் வந்தது. ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை. மூன்று வருட வனவாசம் வேறு. ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி!

அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது - பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை பாதித்து முடக்கிபோட்டது. ஆனாலும், அவர் பல்வேறு நிதி திரட்டல்கள் மூலம் எளியவர்களுக்கு உதவி வந்தார். அவருக்கு பண்ணிய அவமானங்களுக்கு பிரயசித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள்.

"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது. இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன்!"என்ற வரிகளுக்கு பின்தான் எவ்வளவு நம்பிக்கை. அவரின் பிறந்தநாள் இன்று (ஜன.17).

>>>மக்கள் போற்றும் மாமனிதர் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்...

 
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்... -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள்கொண்ட சோப்புத் தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார். இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார். இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை. -அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார்.

அண்ணனின் பத்திரிகையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார். அண்ணன் பத்திரிகையில் பல பேரை விமர்சித்ததால் சிறை போய் மீண்டு வந்தார். இவர்தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார். எங்கெங்கோ அலைந்து, பல துன்பங்களுக்கு பிறகு தானே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முதலில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியது இவர்தான். கேலிச் சித்திரங்களையும் சேர்த்துக்கொண்டார்.

முதன்முதலில் அமெரிக்காவில் தீ விபத்துகளில் இருந்து மக்களை காக்க ஒரு நிறுவனத்தை தொடக்கினார். காப்பீடு என்பதை செயல்படுத்தியவரும் இவரே. கொட்டுகிற மழையில் பட்டம் விட்டபொழுது , ஒரு அதிர்வை அவர் உடம்பில் உணர்ந்தார். பட்டம் விடுகிறபொழுது அதிலிருந்த உலோக கம்பி மழையில் நனையும்பொழுது மின்னலில் இருந்து வரும் மின்சாரத்தை கடத்துகிறது என்று உணர்ந்தார். அதை வைத்து கட்டடங்களை இடியில் இருந்து இடிதாங்கிகளின் மூலம் காக்கலாம் எனவும், கூர்மையான முனைகள் இருந்தால் இடியின்பொழுது கடத்தப்படும் மின்சாரத்தை அந்த கூர்மையான கம்பியே வாங்கிக்கொள்ளும் எனச் சொன்னார். அதனால் பல கட்டடங்கள் இடி தாக்குதலில் இருந்து தப்பித்தன.

முதன்முதலில் சந்தா கட்டி நூலகத்தில் சேரும் முறையை கொண்டு வந்ததும் இவரே. இவரின் கண்டுப்பிடிப்பை வைத்தே மால்துசின் பிரபலமான மக்கள் தொகை கொள்கை உருவானது. அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை ஜெபர்சன் உடன் இணைந்து தயாரித்தது இவரே. எத்தனையோ கண்டுப்பிடிப்புகளை அவர் கண்டறிந்திருந்தாலும் எதற்கும் காப்புரிமை பெற்றதில்லை -எல்லாமும் மக்களுக்கு போய் சேரவேண்டும் அதற்கு என் காப்புரிமைகள் தடையாக இருக்க கூடாது என பெருந்தன்மையாக சொன்னார். அத்தகு மாமனிதரின் பிறந்த நாள் இன்று (ஜன.17).

>>>ஜனவரி 17 [January 17]....

நிகழ்வுகள்

  • 1377 - பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
  • 1524 - இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.
  • 1595 - பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.
  • 1648 - இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
  • 1773 - கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
  • 1819 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.
  • 1852 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.
  • 1893 - ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
  • 1899 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.
  • 1917 - கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.
  • 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.
  • 1945 - சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.
  • 1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
  • 1951 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.
  • 1961 - கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
  • 1991 - வளைகுடாப் போர் ஆரம்பித்தது.
  • 1995 - ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1998 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

பிறப்புகள்

  • 1706 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790)
  • 1911 - ஜோர்ஜ் ஸ்டிக்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1991)
  • 1917 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இ. 1987)
  • 1942 - முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர்
  • 1977 - என். சொக்கன், தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

  • 1961 - பாட்ரிஸ் லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் (பி. 1925)
  • 2002 - கமீலோ ஜோஸ் சேலா, நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் (பி. 1916)
  • 2007 - ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. 1925)
  • 2008 - பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் (பி. 1943)
  • 2009 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)

>>>வெங்காயம்...!

 வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்கள்...

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

>>>உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது !!

 வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை
பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான்.

இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும்.

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:

`ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும்.

அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை.வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங் காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

வெப்பநிலையில் மாறுதல்:

சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது. ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்’ என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது.

சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.
இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

அசைவம்:

அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.

நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும் இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.
இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதய நோய் ஆபத்து

ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம் என்கிறார்கள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government school teacher murdered - Minister assured that appropriate action will be taken

  தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி "உடனடிய...