கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜனவரி 20 [January 20]....

நிகழ்வுகள்

  • 1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.
  • 1523 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.
  • 1649 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
  • 1783 - பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
  • 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.
  • 1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
  • 1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
  • 1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
  • 1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
  • 1892 - முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.
  • 1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
  • 1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
  • 1929 - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
  • 1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
  • 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.
  • 1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
  • 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
  • 1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
  • 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

பிறப்புகள்

  • 1873 - ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
  • 1920 - பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலியத் திரைப்பட இயக்குனர் (இ. 1993)
  • 1930 - எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்
  • 1931 - டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
  • 1956 - பில் மேகர், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்

இறப்புகள்

  • 1936 - ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)

சிறப்பு தினம்

  • அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் (1937 இலிருந்து)

>>>தாமஸ் ஆல்வா எடிசன்

  
அமெரிக்கா பாடசாலை ஒன்றில் எட்டு வயது சிறுவனை "இவன் அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான்". இனி இவனுக்கு பாட சாலையின் அனுமதி இல்லை என்று ஒரு கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவன்.

தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்....பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். இன்றும் அக்.,21ம் தேதி இரவு 9.59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, இதர மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்தும் ஒரு நிமிடம் அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும் என்று...!

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். ஆகவே யாரும் முட்டாள் இல்லை. நீங்களும் அடுத்தவர் சொல்வதை கேட்டு வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வைரம் இருக்கிறது. அதை பட்டைதீட்டுங்கள்

>>>அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் எவை?

தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு பெறாத மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்தப் பதிவும், எந்தத் தேர்வும் நடத்தப்படாது. www.tnmgrmu.ac.in என்ற பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் பெயர்கள்
* தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்
கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் - வேலூர்
* பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - கோவை
* ஐ.ஆர்.டி பெருந்துறை மெடிக்கல் காலேஜ் - பெருந்துறை
* ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - கன்யாகுமரி
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - மேல்மருவத்தூர்
* கற்பக வினாயகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் - காஞ்சிபுரம்
* சென்னை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர் - திருச்சி
* ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - மாங்குடி(அருகில்).
* தனலட்சுமி சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - பெரம்பலூர்
* அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - சென்னை
* கற்பகம் பேகல்டி ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் - கோயம்புத்தூர்.

>>>வீரதீர செயல்களுக்கான விருது: தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் உட்பட 22 பேர் தேர்வு

தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவன் உட்பட, நாடு முழுவதும், 22 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிக்கலான சூழ்நிலைகளில், தைரியமாக செயல்பட்டு, சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, ஆண்டு தோறும், வீரதீர செயல்களுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சுகந்தன் என்ற சிறுவன் உட்பட, 22 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருது பெறுவோரில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த, ராம்தின் தாராவுக்கு, அவனின் இறப்புக்குப் பின், இந்த விருது வழங்கப்படுகிறது. தண்ணீரில் மூழ்கிய தன் நண்பனை காப்பாற்றுவதற்காக, உயிரை விட்ட, 15 வயது சிறுவன் இவன்.
விருது பெறும் குழந்தைகளில், நான்கு பேர் சிறுமிகள். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகளில் மிகவும் இளையவன், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கொரவுன்கம்மா. தன் வீடு தீப்பிடித்த போது, தைரியமாக செயல்பட்டு, தங்கையை காப்பாற்றியவன் இவன்.
விருது பெறும் குழந்தைகளின் பெயர் விபரங்களை, இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் பொது செயலர், கஸ்தூரி மொகாபத்ரா நேற்று அறிவித்தார். பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழு, இந்த 22 பேரையும் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியின் போது, குழந்தைகளுக்கு இந்த விருதுகளை பிரதமர் மன்மோகன் சிங் வழங்குவார்.

>>>ஆங்கிலத்தில் பேசி அசத்தும் கிராமத்து பள்ளி மாணவர்கள்

 சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், மரக்காத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு மரக்காத்தூர், நற்கனி, புலியூரணி, மணியன்குடி, சிவந்தரேந்தல், அந்தரேந்தல், குருமனேந்தல் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பெஞ்சமின், 38, முயற்சியால், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசி, அசத்துகின்றனர். இவர், தமது சொந்த முயற்சியால், 5 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு , காலை 8.30 முதல் 9.15 மணி வரை, ஆங்கிலத்தில் படித்தல், பேசுதல், இலக்கண பயிற்சி அளிக்கிறார். இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயநடையில், ஐந்து வரிக்கு மிகாமல், பிழையின்றி ஆங்கிலம் எழுதுவர். இது தவிர வாசிப்பு, இலக்கண பயிற்சியும் அளிக்கிறார். பள்ளி விழாக்களின் போதும், மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் மூலம் பட்டிமன்றம், நாடகம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதில் பங்கேற்று, சரளமாக ஆங்கிலம் பேசுவது, அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்துகிறது. மாணவர்கள் அனைவரும், பாட நேரங்கள் தவிர்த்து, பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது தான் சிறப்பு. மேலும், "நண்பர்கள் குழு' மூலம் விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு சென்று, சுகாதாரம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் கூறுகையில், ""ஆரம்பத்தில் ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருந்தது. ஆசிரியர் தந்த ஊக்கத்தால், ஆங்கிலம் கற்பது, பேசுவது எளிமையானது, '' என்றார்.

ஆசிரியர் பெஞ்சமின் கூறுகையில்,""அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள், சின்ன வாக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வந்தேன். தினமும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன், எழுத்து, இலக்கண பயிற்சி தருகிறேன். ஆங்கிலம் அந்நியமொழி என்ற எண்ணம் வரக்கூடாது. தயக்கமில்லாமல் பேசவேண்டும், தவறாக பேசுகிறோம் என கூச்சப்படவேண்டாம் என வலியுறுத்துவேன்,'' என்றார்.

>>>பேகம் ஹஜ்ரத் மஹல்

 
1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

... குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.*

1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.**

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்.***

ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61)

(*மேற்படி.,பக்கம்.253.) - (** மேற்படி,.பக்கம்.354-355) - (*** R.c. AgarWal, Constitution Develapment of India and National Movement, P.43,53)

1858 மார்ச் 6 ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.

போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை

பேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 - இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*

1938 - இல் ஹிந்து  முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில்:
என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். - என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன  என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.

சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு கதர் என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். (* B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History, P.268.). - (** தினமணி, 29.04.1938., மறுபிரசுரம்: 29.04.1977.)

மேலும் பேகம் ஹஜ்ரத் மஹல்பற்றிய வரலாற்றிக்கு இந்த லின்க்கை கிளிக் செய்து பாருங்க

https://www.youtube.com/watch?v=kNCbiw4fVVo

நன்றி

மக்கள் கலை இலக்கியக் கழகம்

>>>ஜனவரி 19 [January 19]....

நிகழ்வுகள்

  • 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.
  • 1806 - நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.
  • 1839 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.
  • 1899 - ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.
  • 1903 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
  • 1917 - லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.
  • 1927 - பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.
  • 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1981 - ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
  • 1983 - நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
  • 1986 - முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.
  • 1997 - 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.
  • 2006 - சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.
  • 2006 - புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.
  • 2007 - இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

பிறப்புகள்

  • 1736 - ஜேம்ஸ் உவாட், கண்டுபிடிப்பாளர் (இ. 1819)
  • 1807 - ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)
  • 1809 - எட்கார் அலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1849)
  • 1839 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)
  • 1912 - லியோனிட் கண்டரோவிச், நோபல் பரிசு பெற்ற இரசியப் பொருளியலாளர் (இ. 1986)
  • 1933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)

இறப்புகள்

  • 1905 - தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817)
  • 1990 - ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...