கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>ஜூன் மாதத்தில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க
உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று
அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும்
நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
>>>நாணயம்... நம்பிக்கை!
அவன்
மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள்,
தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை
இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை.
அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று
நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு
கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில்
இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில
ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப்
பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து
எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன
ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை
மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன்.
காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான்
வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.
''இது எப்போது
நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன்
அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம்
இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன்
தனது பணியைத் தொடர்ந்தான்.
>>>ஒரு முத்தமும் பல கேள்விகளும்.... ஓ பக்கங்கள்-ஞாநி
‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன்,
ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன்,
நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி,
முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின்
எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’
படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.
பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில்
நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை
இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற
கேள்வியை அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதை
கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும்
பார்த்துவிட்டு பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.
“நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ்
அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது
மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா?
படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பை தொகுத்து வழங்கிய
சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே,
அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் உதவி செய்வது
மெழுகுவத்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும்
அம்சங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை
வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில்
எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும்
கவலையில்லையா? டெல்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த
பேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப்
பதுங்கிக் காணாமற் போவது ஏன் ?”
இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் பேஸ்புக் சுவர்களில்
பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும்
இவ்வளவு பகிரப்பட்டதில்லை.என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த
கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.
இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து.
பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல
வருடங்களாக நடக்கிறது. இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகையாக
அறிமுகம் ஆனபோது அவர் வயது 15தான். மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர்
கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18தான். சட்டப்படி மேஜர்
வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்கவைக்கப்படுவது
அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும்
சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில்
காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல்
பொறுப்பு அவளுடைய அம்மா ராதாவுடையதுதான்.
இப்படி வளர் இளம் பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே
காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்கவைத்து இயக்குநர்களும்
தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும்
மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர்
இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால்
தமிழ் சினிமாவில் வேறு எந்த படைப்பாளியை விடவும் அதிகமாகக்
கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர்.
அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய
பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே
விமர்சிக்கப்படவேண்டும்.
அது மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப்
பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக
தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை
உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம்,
சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும்
பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை
முன்னெப்போதையும் விட டெல்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும்
வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும்
பாதிப்புகள் முக்கியமானவை. டெல்லி நிகழ்ச்சியில் குற்றவாளிகளில் ஒருவன்
மைனர் என்பது கவனிக்கத்தக்கது. அண்மையில் தமிழ்நாட்டில் பள்ளிச் சிறுவர்கள்
பள்ளி வளாகத்தில் மது குடித்ததைக் கண்டித்த ஆசிரியரை
அடித்திருக்கிறார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் மது குடிக்க பணம் தேவை
என்பதற்காக பள்ளிக்கூட மரமேசைகளை உடைத்து விறகாக்கி விற்றுக்
குடித்திருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக
ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின்
பெரும்பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர்
நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை
ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர்.
“ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே
என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்” என்று செய்தி
அனுப்பினேன்.“எனக்கும் செய்தி வந்தது. இனி இந்த தவறு நிகழாமல் பார்த்துக்
கொள் என்று சொல்லியுள்ளேன்” என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.
சினிமா சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குற்றம் செய்யவும்,
தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாகாரர்கள் ஏற்றுக்
கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது
என்பதை சமூகவியலாளர்களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள்.
பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை
சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்கு பதிலாக
பலப்படுத்துகின்றன. ஆணுக்கு சேவை செய்ய பெண், பெண் விட்டுக் கொடுத்தால்தான்
குடும்பம் உருப்படும்,ஆணின் இச்சைக்கானவள் பெண் என்ற கருத்துகளை திரும்பத்
திரும்ப சொல்லிவருகிறது சினிமா. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
என்ற பழைய கருத்தை, பொறுக்கியானாலும் காதலன், ரவுடியானாலும், லவ்வர் என்று
நவீனப்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண்பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும்
விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு
பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர்
இளம்பருவ சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில்,
எழுபதுகளில்,எண்பதுகளில் இருந்ததை விட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண்
மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர்
இல்லை. எதிர் பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள
உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும்
இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர்
இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே
ஆச்சரியமானதுதான்.
இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.
அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற
கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம்.
ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம்
புரிந்துகொள்ளவேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது
காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை
இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால்
மனநல பாதிப்புதான் ஏற்படும்.
என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச்
செல்லும்போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு
வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில்
முத்தமிட்டு வாழ்த்த முடியாது.
குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது அதன் கன்னத்தில்
முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம்
காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி
பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச்,
பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.
எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப்
பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனதில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை
ஏற்படுத்தும் என்பது பற்றி படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும்.
நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யூஏ என்றெல்லாம்
வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை.எல்லா
படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே
இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே
நம்மிடம் இல்லை.
பள்ளிப் பருவத்திலிருந்து உடல் நலம் மன நலம் சார்ந்த பாலியல்
கல்வியையும் மீடியாவைப் புரிந்துகொள்ளும் பயிற்சியையும் அறிமுகம்
செய்யவேண்டும் என்று என் போன்றோர் பல வருடங்களாக வலியுறுத்திவருகிறோம்.
ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுவோர் பாலியல் வக்கிரங்களை
படைப்பாக்குவோரைக் கண்டு கொள்வதே இல்லை.
பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும்
இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா
துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு
உடபடுத்திக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள்
எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாச்கர்களுக்கும் மட்டுமென்று
தனக்கு தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குநரும் இனியும்
இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவத்தி ஏற்றுவது அல்ல.
மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும்
தப்பிக்க முடியாது.
காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில்
பெரும்பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல்
ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே
இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாறவேண்டுமானால் நாம் அனைத்தையும்
விமர்சித்து விவாதித்தாகவேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை
முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.
கல்கி 19.1.2013
>>>வேலைக்குப் போகும் பெண்கள் அவசியம் கருத்தில் கொள்ளவேண்டியது !!
1. நேரத்தை நிர்வகிக்கும் திறமை
2. பிள்ளைகளோடு தினமும் நேரம் செலவழிப்பது
3. நம் டென்ஷனை பிள்ளைகளிடம் காட்டாமல் இருப்பது
4. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வருவதை தவிர்ப்பது.
5. அலுவலக நண்பர்களின் குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாமல் இருப்பது.
6. சம்பாதிக்கின்ற காரணத்தால் அளவுக்கு மீறிய பொருளாதார சுதந்திரம் கொடுப்பது.
7. கணவருடன் கலந்தாலோசித்து வேலைகளை பங்கிட்டுகொள்வது
8. வாரத்தில் ஒருநாள் உங்களுக்கென்று சிறப்பு நேரம் ஒதுக்கி உங்களுக்கு பிடித்ததை செய்வது
9. அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வது
10. பிள்ளைகள் ஏதாவது சாதிக்கும்போது தட்டிக்கொடுத்து பாராட்டுவது
11. தங்கள் வாழ்க்கை முறையும் நம் வரலாற்றையும் கற்றுத்தருவது .
12.தான் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களிடம் நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுவது
தொடக்க பள்ளிக்கு முந்தைய காலகட்டத்தில் - 75 சதவீதம் தாயாகவும், 25 சதவீதம் ஆசானாகவும்.

தொடக்க பள்ளிக்கு காலகட்டத்தில் - 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் ஆசானாகவும்.
தொடக்க பள்ளிக்கு பிந்தைய காலகட்டத்தில் - 50 சதவீதம் தாயாகவும், 50 சதவீதம் தோழியாகவும்.
மேலே சொன்னதுபோல நமது பங்கு, பிள்ளைகள் வளர்ப்பில் இருந்தால் நாமும் சவால்களை சமாளித்து நம் பிள்ளைகளை சாதனையாளனாக உருவாக்க முடியும்

>>>பெசிமர்...
பெசிமர்...
தொழில்மயம் ஒட்டுமொத்த ஐரோப்பாவை புரட்டிப்போட்டபொழுது இங்கிலாந்தில்
இணையற்ற வேலைகளை இவர் செய்தார். நுரம்பெர்க் எனும் இடத்தில் வெண்கலம்
பொடியாக்கி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அதை தயாரிக்கும் முறைகள்
நேரம் எடுத்துக்கொண்டன. அந்த பொடியை பெற்று அதை மேலும் தரமேம்படுத்தி, அதை
எளிமையாக தயாரிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதை மாற்று பொறியியல் என
கொண்டாடினார்கள்.
இவர் வருவதற்கு முன்வரை வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு எனும் இரண்டு வகைகளையே பாலங்கள், தண்டவாளங்கள் முதலியவற்றில் பயன்படுத்தி கொண்டிருந்தார்கள். இவை வலிமை குறைந்ததாக இருந்ததால் அடிக்கடி விரிசல் விட்டு செயலிழந்து விபத்துக்களுக்கு வழி வகுத்தன. இவர், உருக்கப்பட்ட பன்றி இரும்பை ஆக்ஸிஜனை கொண்டு வெப்பப்படுத்தி அழுக்குகளை நீக்கி அதன் மூலம் எஃகை தயாரிக்கும் முறையை உருவாக்கினார். வலிமை மிகுந்த பாலங்கள், கட்டடங்கள், தண்டவாளங்கள் உலகுக்கு கிடைத்தன.
சர்க்கரையை எளிமையாக தயாரிக்கும் தொழிற்சாலை நடைமுறைகளை உருவாக்கினார். மொத்தம் 129 பேடண்ட்கள் இவர் வசமிருந்தது. வார்ப்புகளின் மூலம் பல உருவங்களை ஒரே வடிவத்தில் தயாரிக்கும் முறையும் இவர் தந்த கொடையே.அவரின் பிறந்தநாள் (ஜன.19).

>>>ஜேம்ஸ் வாட்...
நீராவி இன்ஜினில் மாற்றங்கள் கொண்டுவந்த, உலகையே திருப்பிபோட்ட அற்புத
பொறியியல் வல்லுநர். ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்காட்லாந்து
வறுமையில் வாடியது. இவரின் குடும்பமும் அவ்வாறே துன்பப்பட்டது. இளவயதில்
இருந்தே வடிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் வரைய தாளில்லாமல் தரையில்
வரைந்து பழகினார்.
உடல் நலம் அடிக்கடி சரியில்லாமல் போய்விடும் இவருக்கு. பல பிள்ளைகள் கொள்ளை நோயில் இறப்பதை கண்ட இவர் அம்மா பள்ளிக்கு இவரை அனுப்ப மாட்டார். பள்ளிக்கல்வியே தடைபட்டது. வேலையை செய்ய விலங்குகள், மனிதர்கள் பயன்படுத்தபட்ட பொழுது பல மாற்றங்கள் வந்தது. 1698-ஆம் ஆண்டு தாமஸ் சவேரி என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவியை உருவாக்கினார். அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து மேம்பட்ட நீராவி இயந்திரத்தை பதினான்கு ஆண்டுகள் கழித்து உருவாக்கினார் தாமஸ் நியூக்கோமன். ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.
படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அதற்கு பின் கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பில் சேர்ந்தார் அவர். தாமஸ் நியூகோமன் உருவாக்கிய இயந்திரம் பல்வேறு குறைகளோடு இருந்தன. ஆற்றல் விரயம் வேறானது. இவர் வீட்டில் கெட்டிலை அடுப்பில் வைத்திருந்த பொழுது நீராவி கெட்டிலின் மூடியை தூக்கி நிலையாக நிற்க வைப்பதை பார்த்தார். விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார்.
பதினேழு ஆண்டு உழைப்பில் சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார். அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் 'centrifugal governor' அழுத்தமானியையும் அவர் கண்டுபிடித்தார். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்திப் பன்மடங்குப் பெருகியது. தொழிற்புரட்சியின் மாபெரும் பங்களிப்பை தந்தவர் வாட் என நாடே கொண்டாடியது. ஏழ்மை, உடல்நலமின்மை ஆகியனவற்றை வென்று சாதித்த அவரை நினைவுகூர்வோம். அவரின் பிறந்தநாள் (ஜன.19).

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...