கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஷாஜகான்...

 
ஷாஜகான்... வரலாற்று ஆசிரியர்கள் அவரின் ஆட்சியை முகலாய மன்னரகளிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர். இவரின் அண்ணன் அப்பாவுடன் சண்டையிட்டு அவரின் கோபத்துக்கு உள்ளான காலத்தில் இவர் அமைதி காத்து நல்ல பெயர் சம்பாதித்து கொண்டார். அப்பாவுக்கு எதிராக புரட்சி செய்து அதில் தோல்வி கண்டார்; அப்பா ஜகாங்கீர் இறக்கும் தருவாயில் அவரின் மனைவி நூர்ஜஹான் ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்ததை முறியடித்து அரசர் ஆனார்.

ஆசப் கானின் மகளை இவர் மணந்தார். அவருக்கு முன்னமே மனைவிகள் இருந்தாலும் மும்தாஜ் என பிற்காலத்தில் அழைக்கப்பட இருக்கும் அவரின் மகளை மணந்தார். ஏழு பிள்ளைகளை பெற்று தந்து அவள் இறந்து போனாள். அவள் மறைந்த அடுத்த நாளே இவர் முடி வெள்ளையாகி விட்டதாம். அவரின் நினைவாக தாஜ்மகாலை கட்ட வைத்தார் ஷாஜஹான். கூடவே முத்து மசூதியை ,செங்கோட்டையை, இன்றைக்கு பழைய டெல்லி என அழைக்கப்படும் பகுதியை உருவாக்கினார். அவரின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது. தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினங்கள், மரகதம் ஆகியவற்றால் இழைக்கப்பட்டது அது இவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தாரா ஷுகோ. ஆனால், தொடர்ந்து அவுரங்கசீப் இவரின் கடுப்பிற்கு உள்ளானார். மகள் தீவிபத்தில் காயமுற்ற பொழுது பலநாள் கழித்து அவுரங்கசீப் வர அது இன்னமும் பகைமையை வளர்த்தது.

இவர் உடல்நலம் சரியில்லாத பொழுது இவரை மறைத்து வைத்துக்கொண்டு ஷுகோ ஏமாற்றுவதாக நினைத்து பிள்ளைகள் போர் தொடுக்க இறுதியில் அவுரங்கசீப் அப்பாவை சிறை வைத்தார்; அவர் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் தாஜ்மகால் மட்டுமே தெரியும் வண்ணம் படுக்க விட்டது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை, நீர்க்கடன் செய்யும் நாட்டில் குடிக்க நீர் கூட இல்லாமல் தவிக்க விடுகிறானே இவன் என புலம்பினார்; அவர் அன்பு மகள் மட்டுமே வந்து பார்த்து செல்வாள்; கருப்பு தாஜ்மகால் ஒன்றை எதிரில் உருவாக்கி அதில் தன்னை புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அவர். அது வீண் செலவு என மறுத்தார் அவரின் மகன். ஒருநாள் காலை அவரின் மனைவியின் கல்லறை இருந்த திசை நோக்கி பார்த்தபடியே இறந்துகிடந்தார் அவர். இன்று (ஜன.22) ஷாஜகானின் நினைவு தினம்

>>>ஜனவரி 22 [January 22]....

நிகழ்வுகள்

  • 1506 - 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.
  • 1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.
  • 1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.
  • 1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
  • 1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.
  • 1899 - ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.
  • 1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.
  • 1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
  • 1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.
  • 1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.
  • 1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
  • 1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.
  • 1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
  • 1984 - ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
  • 1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
  • 2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
  • 2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1561 - பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1626)
  • 1788 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)
  • 1901 - விக்டோரியா, பிரித்தானிய மகாராணி (பி. 1819)
  • 1908 - லேவ் லான்டாவு, நோபல் பரிசு பெற்ற ரசிய இயற்பியலாளர் (இ. 1968)
  • 1909 - ஊ தாண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் (இ. 1974)
  • 1922 - தி. வே. கோபால், தமிழறிஞர் (இ. 2007)
  • 1936 - அலன் ஹீகர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
  • 1988 - கிரெக் ஓடென், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1666 - ஷா ஜகான், முகலாலயப் பேரரசர் (பி. 1592)
  • 1922 - பிரெட்ரிக் பாஜெர், நோபல் பரிசு பெற்றவர் ([இ. 1837)
  • 2005 - வேந்தனார் இளங்கோ, ஆஸ்திரேலியத் தமிழறிஞர்

>>>நாராயண குரு....

 
(1854) கேரள மாநிலம் திருவாங்கூரிலிருந்து பத்துகல் தொலைவில் உள்ள செம்பழாண்டி என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் மாடன் ஆசான், குட்டியம்மா. 18 வயது வரை உள்ளூரிலேயே இருந்தார்.

மதமே கூடாது, கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கை உடையவர் அல்லர். கடவுள் நம்பிக்கையோடே அதேநேரத்தில் அதற்குள்ளேயே சில மாற்றங்களைக் கொண்டு வந்த ஒரு சீர்திருத்தக்காரர்.

ஒரே கடவுள், ஒரே மதம் என்ற போக்கைக் கொண்டவர், பிரச்சாரம் செய்தவர்.

ஒன்றே குலம் என்பதன்மூலம் வருண தர்மத்தை முற்றிலும் எதிர்த்தவர். அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் எதிர்ப்புக்கு ஆளானவர். நான் சொல்லும் சிவன் வேறு; பார்ப்பனர்களின் சிவன் வேறு என்று கூறியவர்.

அவர் இயற்றிய கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரே இனத்தினுள் ஆணும், பெண்ணும் இணைந்தால் பிள்ளை பிறப்பதில்லையா? மனித இனத்தில்தான் பார்ப்பானும் பிறக்கிறான். பறையனும் பிறப்பதும் அதே மனித இனத்தில்தான். அப்படியானால் மனிதர்களிடையே ஜாதியில் வேறுபாடு ஏனிருக்கவேண்டும்?

பழங்காலத்திலேயே முனிபுங்கவரான பராசரர் பிறந்தது பறைச்சி ஒருத்திக்கே; வேதவியாசர் பிறந்தது மீனவக் கன்னி ஒருத்திக்கே என்றெல்லாம் பாடியிருக்கிறார்.

நாராயண குரு மூட நம்பிக்கையின் எதிரி. ஒருமுறை அவரின் சீடர் ஒருவர் குருவுக்குக் கஞ்சி கொண்டு வந்தார். உப்பு சரியாக இருக்கிறதா என்று கேட்டார். குருவுக்குக் கொண்டு போவதை நான் எப்படி ருசித்துப் பார்க்க முடியும் என்றான் சீடன்.

சீடனின் மூட நம்பிக்கையைக் கண்டித்த நாராயண குரு, அப்படியானால் அதை நாய்க்கு ஊற்று; அதாவது ருசித்து சாப்பிடுகிறதா என்று பார்ப்போம்! என்றாராம். அந்த அளவுக்கு அவர் பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார்.

தம் கருத்துகளைப் பரப்புவதற்காகவே என்.டி.பி.ஒய். என்னும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்னும் அமைப்பினைத் தொடங்கினார் (1903). நாடெங்கும் இந்தச் சீர்திருத்தக் கருத்தினை பிரச்சாரம் செய்தார். 1926 இல் தமிழ்நாட்டில் கோவையிலும், நீலகிரியிலும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். வைக்கம் போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடாவிட்டாலும், மறைமுகமாக உதவி செய்திருக்கிறார்.

மதத்தில் இருந்துகொண்டே அவர் செய்த சீர்திருத்தங்களைக்கூட கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்த்து வந்துள்ளனர். மாற்றம் என்றாலே மரணம் என்பதுதானே பார்ப்பனர்களின் சித்தாந்தம்!

>>>சார்லி சாப்ளின்...

 

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு நகைச்சுவை எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

1889 ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலி வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழயங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.

1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"

என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.

>>>டீன்-ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ...

 
பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், பெற்றோராகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்தீர்களோ அதேபோல், இந்தப் பருவத்திலும் கவனிக்க வேண்டியது அவசியம்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

* பூப்பெய்துவதில் சில குழந்தைகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, தன் சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்தும் கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும். உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும். இதுகுறித்து கவலைப்பட வேண் டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். அதோடு, வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின் டீன்-ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.

>>>Directorate of Govt. Examinations: SSLC March 2013 - Examination Time Table

                      DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI–600 006
                                            S.S.L.C. EXAMINATION, MARCH – 2013
                                                               TIME TABLE
                           Hours : 10.00 a.m. to 10.10 a.m. – Reading the Question Paper
                                        10.10 a.m. to 10.15 a.m. – Filling up particulars in the answer sheet
                                        10.15 a.m. to 12.45 p.m. – Duration of the Examination.
     DATE             DAY                   SUBJECT
27.03.2013  WEDNESDAY         LANGUAGE PAPER – I
28.03.2013  THURSDAY            LANGUAGE PAPER – II
29.03.2013  FRIDAY                    ---GOOD FRIDAY---
30.03.2013  SATURDAY                          -----
31.03.2013  SUNDAY                               -----
01.04.2013  MONDAY               ENGLISH PAPER – I
02.04.2013  TUESDAY              ENGLISH PAPER – II
03.04.2013  WEDNESDAY      --- NO EXAMINATION---
04.04.2013  THURSDAY          --- NO EXAMINATION---
05.04.2013  FRIDAY                  MATHEMATICS
06.04.2013  SATURDAY                         -----
07.04.2013  SUNDAY                             -----
08.04.2013  MONDAY              SCIENCE
09.04.2013  TUESDAY           --- NO EXAMINATION---
10.04.2013  WEDNESDAY    --- NO EXAMINATION---
11.04.2013  THURSDAY         TELUGU NEW YEAR
12.04.2013  FRIDAY                SOCIAL SCIENCE
CHENNAI-6                                                                           Sd/-
Date : 12.12.2012                                                          DIRECTOR


>>>அரசாணை மற்றும் கால அட்டவணையைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....

>>>லெனின்...

 
லெனின்... காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து மூலதனம் நூலை எழுதி, உலகத்தொழிலாளர்கள் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று சொன்னதை மெய்ப்பித்தது இவர்தான்.

இவர் காலத்தில் ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் ஆடம்பரங்களில் மூழ்கினார்கள். எளிய தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள். கோரிக்கைகளை அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிகவும் சாவகாசமாக சுட்டுகொன்ற கொடுமைகள் எல்லாம் நடந்தன. இதை எதிர்த்து பல மக்கள் போராடினார்கள். மிகசிறிய நாடான ஜப்பானிடம் போரில் பரிதாபமாக தோற்கவும் செய்தது ரஷ்யா.

லெனின் அப்பா ரஷ்யாவில் கல்வி அதிகாரியாக இருந்தார். அவரிடம் இருந்து தீரத்தை சகோதரர்கள் கற்று இருந்தார்கள். அண்ணன் அரசரை கொல்லதிட்டமிட்டதாக தூக்கில் போடப்பட்டார். அன்றைக்கு இறுதி தேர்வு மனதை திடப்படுத்திக்கொண்டு தேர்வெழுதினார் லெனின். மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். சட்டம் பயில முயன்றார். கல்லூரி இடம் தர மறுக்க நான்கு வருடம் படிக்க வேண்டிய சட்டத்தை ஒன்றரை வருடத்தில் முடித்தார்.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வகுத்தளித்த மூலதனம் நூலை படித்தார். தொழிலாளர்களை ஊக்குவித்தார் லெனின். அதிக வேலை நேரத்தை எதிர்த்து போராடினார்கள். அவர்களை பின்னிருந்து இயக்குவது லெனின் எனத் தெரிந்தது. கொடிய சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டார். 1905-ல் தொழிலாளர் புரட்சி நடத்த முயன்று தோற்றுப்போனார். பின் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி முதலிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். வெளியே இருந்து தன் எழுத்தின் மூலம் உத்வேகம் ஊட்டியவண்ணம் இருந்தார். முதல் உலகப்போரில் கலந்துகொண்ட ரஷ்யாவின் மக்கள் பசியால் வாடினார்கள்.

ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமலும், உணவில்லாமலும் நொந்து போனார்கள். ஜாரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து பிப்ரவரியில் ஆட்சியை மக்கள் பிடித்தார்கள்; அதை நாடாளுமன்ற குழு ஒன்று நிர்வகித்தது. பின் லெனின் நாடு திரும்பினார். புகழ்பெற்ற அக்டோபர் புரட்சி நடந்து லெனினிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு போரை நிறுத்தினார் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது; அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுபாட்டுக்கு வந்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. நிலங்கள் பிரித்து எளிய மக்களுக்கு தரப்பட்டன .லெனின் எந்த அளவுக்கு விமர்சனத்தை மதித்தார் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு விளாடிமர் மாயகொவஸ்கி ஆட்சியில் அதிகாரிகள் கூட்டம் கூட்டம் எனச்சொல்லி மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் இருப்பதாக கவிதை வடித்தார்; அதை வெளியிட பயந்தார்கள்.

லெனின் கேள்விப்பட்டு அவரை அழைத்து ஒரு கவிஞன் இதைத்தான் பாடவேண்டும்; என்னை பற்றி இனிமேல் புகழ்ந்து எழுத வேண்டாம் என்றார். ஓயாத உழைப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டது; பக்கவாதம் வந்தது; வலது கை பாதிக்கப்பட இடது கையால் எழுத கற்றுக்கொண்டு தன் கருத்துக்களை அந்த நிலையிலும் சொன்னார். பேசவே முடியாத சூழலிலும் எளிய மக்களுக்காக யோசித்த அவர் 1924-ல் இதே தினத்தில் (ஜன.21) மறைந்து போனார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...