கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வெந்நீர்குடிப்பதின் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

 
* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

>>>சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?

கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை.
இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதி இல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.
அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில்,  "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார்.
தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.

>>>ஜனவரி 23 [January 23]....

நிகழ்வுகள்

  • 1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.
  • 1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
  • 1570 - ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
  • 1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
  • 1719 - புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.
  • 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 1793 - ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தனர்.
  • 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.
  • 1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1874 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.
  • 1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
  • 1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
  • 1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.
  • 1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
  • 1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
  • 1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
  • 1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
  • 2002 - அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.
  • 2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1876 - ஒட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனியர் (இ. 1954)
  • 1897 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)
  • 1907 - ஹிடெக்கி யுக்காவா, நோபல் பரிசு பெற்ற யப்பானியர் (இ. 1981)
  • 1915 - ஆர்தர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1991)
  • 1918 - கேர்ட்ரூட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (இ. 1999)
  • 1929 - ஜோன் போல்யானி, நோபல் பரிசு பெற்ற கனடியர்
  • 1930 - டெரெக் வால்கொட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்

இறப்புகள்

  • 1873 - இராமலிங்க அடிகள், ஆன்மீகவாதி (பி. 1823)
  • 1944 - எட்வர்ட் மண்ச், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓவியர் (பி. 1863)
  • 1989 - சல்வடோர் டாலி, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)

>>>பிப்ரவரி 1ல் துவங்கும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள், பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெறுகின்றன. இவற்றில், பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் மாதம் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடக்கின்றன. இவற்றை மொத்தம் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
அறிவியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பிப்ரவரி 1 முதல் 23 வரை, செய்முறைத் தேர்வுகளை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்முறைத் தேர்வானது, மாவட்ட அளவிலான பொதுத்தேர்வாக நடக்கும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், செய்முறைத் தேர்வுக் கேள்விகளை வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்குவர்.
மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல கட்டங்களாக செய்முறைத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அனைத்து செய்முறைத் தேர்வுகளையும், பிப்ரவரி 23ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
செய்முறைத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஓரிரு நாட்களில் பதிவெண் குறித்து அறிவிக்கப்படும். இதே பதிவெண்களைப் பயன்படுத்தி, மார்ச்சில் துவங்கவுள்ள, எழுத்துத் தேர்வையும் எழுத வேண்டும்.
கடந்த தேர்வானது மொத்தம் 1,900 மையங்களில் நடந்தது. ஆனால் இந்தாண்டு, மொத்தம் 2,100 மையங்களில் இத்தேர்வு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான கடைசித் தேதி இந்த வாரத்துடன் முடிந்துவிடும் என்றும், இதுவரை, 70 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

>>>ஒற்றை சாளர முறையில் கலை கல்லூரி மாணவர் சேர்க்கை : ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாண்டியன் அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, முறையான நெறிமுறைகளை ஆண்டுதோறும் அரசு வெளியிட்டாலும், அவை பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர் சேர்க்கையில் அதிகபட்ச கட்டண வசூல், இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மாணவர் சேர்க்கை, கட்டாய நன்கொடை வசூல், சுயநிதி பாடப்பரிவுகளுக்கு முன்னுரிமை, மாணவர் சேர்க்கை இல்லையென கூறி, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையை பின்பற்றினால் மட்டுமே, இம்முறைகேடுகளை களைய முடியும் என, உயர்கல்வி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, கடந்த கல்வியாண்டின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்கள், கால அவசாகம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், அடுத்த கல்வியாண்டில், ஒற்றை சாளர முறையை அமல் செய்ய பரிசீலிக்கப்படும் என, உறுதியளித்தனர்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி, வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும்.இவ்வாறு பாண்டியன் கூறியுள்ளார்.

>>>டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை 28ல் வெளியீடு

2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்கள், இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
வருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது.
அப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர் வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம் 24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.
குரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும். எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும், அவற்றில் எத்தனை ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற விபரங்கள் அப்போது வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு, 30 ஆயிரம் பேர் வரை, அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குரூப் 4 பணியிடங்களை கணிசமாக எதிர்பார்க்கலாம்.

>>>எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : தமிழக அரசு உத்தரவு

எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இளங்கலையுடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியில் சேர்ந்த பின், முதுகலை மற்றும் எம்.எட்., படித்தால், இரு ஊக்க ஊதியம் பெற தகுதி பெறுவர்.ஆனால், முதுகலை பட்டம் பெற்று, எம்.பில்.,-ஆய்வு படிப்பு, பட்டம் பெற்றால், ஒரு ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது.தமிழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் உட்பட, பல ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன.இந்நிலையில், எம்.பில்., முடித்தவர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தற்போது பணியில் சேரும் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை -.9,300 ரூபாய், மற்றும் தர ஊதியத்தில் -.4,600 ரூபாயில், 6 சதவீதம் வரை ஊக்க ஊதியம் வழங்கப்படும். குறைந்தது, ஒரு ஆசிரியரின் சம்பளம், 1500 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ""ஆசிரியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை, அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...