கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்
விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை! அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம்செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள்.கமல் திடீரென வீராவேசமாக வழக்கம்போல் ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்க, ஆக்ஷன் படமாக வேறு தளத்தில், ஆப்கன் தலிபான் பின்னணியில் விரிகிறது.ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால் உண்மையில் அவர் ரா அதிகாரி. அமெரிக்க எப்பிஐக்கு உதவுகிறார். அமெரிக்காவை பழிவாங்க நியூயார்க் நகரையே அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தலிபான்கள் திட்டத்தை எப்பிஐயுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார்என்பது மீதிக்கதை! கமல் நன்றாக நடித்திருக்கிறார்...பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஸ்வீட் இனிப்பாக இருக்கிறது என்று சொல்வது அபத்தத்துக்கு இணை!. மனுஷன் அந்தகேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். முகத்தில் தெரியும் வயதின் ரேகைகள்தான் கவலை தருகிறது. ஆனால் அதற்கேற்ப கதையை அமைத்துக் கொண்டதுதான் கமல் ஸ்பெஷல்!. பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் தெரிந்த பிற முகங்கள் சேகர் கபூர், நாசர் மட்டும்தான். இது வரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூயார்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்ளார்கள். பார்க்காதவர்கள், அட நியூயார்க்இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன.இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான் லாய். ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கி விட்டார் போலிருக்கிறது.இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம்.அந்த புறாக்காட்சிகள், ஒரு மெக்சிகன் படத்திலிருந்து தழுவல் போலிருக்கே கமல் சார்!முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான்,நியூயார்க் என்று என்று காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் தமிழகத்தை பற்றி எங்கேவருகிறது என்று தேட வேண்டியுள்ளது. ஒரே ஒரு காட்சியில் வில்லன் (தலிபான் தலைவர் முல்லா ஒமர்) தமிழ்நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன்என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள் கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார். மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழுக்கு தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான். பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது. ரூ. 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதைதெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் அல்லவா இது!. நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும்.விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன். சராசரி ஹாலிவுட் படங்களை விட நன்றாகவே படமாக்கியுள்ளார் கமல்."கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!"
>>>எது மகிழ்ச்சி? - வெ. இறையன்பு
சிறுவயது முதல், பழமொழிகள் பலவும் நமக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவற்றில் மகிழ்ச்சிக்கான உபாயங்கள் ஒளிந்திருக்கின்றன.
எது உண்மையான மகிழ்ச்சி என்பதை அறிய, எளிய வழி உண்டு. அந்த நேரத்தில்
மட்டுமே மகிழ்ச்சி யைத் தந்துவிட்டுப் பிறகு உபத்திரவம் தரும் எதுவும்
உண்மையான மகிழ்ச்சியே இல்லை; இன்னும் 20 வருடங்கள் கழிந்தாலும் நினைத்து
இன்புறத்தக்க நிகழ்வு எதுவோ... அதுவே பேரானந்தம்!
சில செயல்களைச் செய்யும் அந்தத் தருணத்தில், அவை சுவையாகவும்
சுவாரஸ்யமாகவும் இருக்கும். பின்னர், அவற்றை நினைவுகூரும் போது, நீங்காத
வலியையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
பணம் இலக்காக இல்லாமல், வழியாக மட்டுமே இருப்பின், ஏமாற்றம் என்பதே இல்லை.
>>>இலக்கணம் மீறிய கவிதை..!
''இலக்கணம் மீறிய கவிதை என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?''
''முதன்முதலாக ஒரு மழலை, அம்மாவை அழைக்கும் வார்த்தை 'ங்கா'.
தமிழில் மெல்லினத்தில் முதல் எழுத்து 'ங'. மற்ற எழுத்துக்களைவிடவும் மென்மையாக ஒலிப்பதால்தான் மெல்லினம் என்கிறோம். ஆனால், எந்த ஒரு வார்த்தையும் 'ங்'கை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குவதில்லை. ஏனெனில், தமிழ் இலக்கணப்படி வார்த்தைகளின் முதல் எழுத்தாக மெய்யெழுத்து அமையாது. உயிரெழுத்தோ, உயிர்மெய் எழுத்தோ மட்டும்தான் முதல் எழுத்தாக வரும்.
ம்மா, ப்பா என்றெல்லாம் எழுதுவதற்கு தமிழ் இலக்கணம் இடம் தருவதில்லை. ஆனால், குழந்தையின் 'ங்கா' மட்டும் இந்த இலக்கணங்களை மீறிய மழலைக் கவிதை.''
>>>மதிப்பும் மரியாதையும்....
''மிரட்டியும் பயமுறுத்தியும் பெறும் மதிப்பும் மரியாதையும் நிலைக்குமா?''
''நிலைக்காது... ஒருமுறை சார்லி சாப்ளின் வெளியே சென்று வீடு திரும்பும்போது அவருடைய கோட்டுப் பையில் யாருடைய தங்க கைக் கடிகாரமோ இருந்தது. அதை அவர் காவல் துறையிடம் ஒப்படைத்தார். அது பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டது.
மறுநாள் சாப்ளினுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'ஐயா, நான் ஒரு திருடன். உங்கள் அபிமானி. நான்தான் அந்தத் திருட்டு வாட்ச்சை தங்கள் பையில் போட்டேன். என் பரிசாக அதை ஏற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது. சாப்ளின் அந்தக் கடிதத்தையும் காவல் துறையில் ஒப்படைத்தார். அதுவும் விளம்பரப்படுத்தப்பட்டது.
மறுநாள் சாப்ளினுக்கு ஒரு பார்சலும் கடிதமும் வந்தது. அதில், 'ஐயா! அந்த தங்க வாட்ச் என்னிடம் இருந்து திருடப்பட்டதுதான். ஆனால், நான் அந்தத் திருடனைவிட தங்கள் மேல் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவே, அந்த வாட்ச்சையும் இத்துடன் அனுப்பியுள்ள தங்க செயினையும் என் பரிசாக ஏற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது.
இப்படித் தாமாக போட்டி போட்டுக்கொண்டு வரும் மதிப்பும் மரியாதை யும்தான் என்றென்றும் நிலைக்கும்!''

>>>நடிகவேள் எம்.ஆர்.ராதா
''கலைமாமணி விருதுகளைப் பார்க்கும்போது விருதுகளின் மீதுள்ள மரியாதையே போய்விடுகிறதே?''
''உண்மைதான். எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது, நமக்கு விருதுகள் மீது மரியாதை போய்விடத்தான் செய்கிறது. ஆனால், உங்களுக்காக ஒரு தகவல். 1966-ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னர் பரிசு அளிப்பதாக இருந்தது.
ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லை. என் படத்தையே பார்க்காத கவர்னர் எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுப்பதை நான் விரும்பவில்லை’ என்று எம்.ஆர்.ராதா அந்த விழாவுக்கே போகவில்லை. இத்தகைய சுயமரியாதை உள்ள கலைஞர்கள் இருந்தால், நீங்கள் சொல்லும் அந்த நிலை மாறும்!''

>>>புகழ் என்பது அடங்காப்பசி கொண்ட அதிசய பிசாசு! - வெ. இறையன்பு
வாழும்
காலத்தில் வையப்பட்டவர்தான் ஷேக்ஸ்பியர். 'மயிலிறகு போர்த்திய காகம்' என
அவரை வசைமாரிப் பொழிந்தார் தாமஸ் கிரீன். ஆனால் காலம், ஷேக்ஸ்பியரை
பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
எப்போதும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள், அடுத்தவரது மதிப்பீட்டினால் தங்களைத் தரம் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நமது வீட்டிலேயேகூட, நமது பங்களிப்பை உணராமல் இருப்பர். அதற்காக வருந்தவேண்டிய அவசியம் இல்லை. நமது தியாகத்தை அவர்கள் உணரவில்லையே என நினைத்தாலே, நமது மகிழ்ச்சி பறிபோய்விடும். யாருக்காகப் பணியாற்றுகிறோமோ அவர்களின் மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சி என எண்ணும்போது, எல்லா நிமிடமும் இனிப்பு மயமாகிறது.
முதலில், அடுத்தவருக்குச் சேரவேண்டிய அங்கீகாரத்தை நாம் அளிக்கிறோமா என்பதை உற்றுப்பார்க்க வேண்டும். யாருடனும் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினால், நாம் புகழை யாசிக்கமாட்டோம்.!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...