கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிப்ரவரி 19 [February 19]....

நிகழ்வுகள்

  • 1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
  • 1674 - இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கில-டச்சு போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • 1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
  • 1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
  • 1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.
  • 1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
  • 1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
  • 1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
  • 1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
  • 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1473 - நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கணிதவியலாளர், விண்வெளியியலாளர். (இ. 1543)
  • 1833 - ஏலி டூக்கோமன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1906)
  • 1855 - உ. வே. சாமிநாதர், தமிழறிஞர் (இ. 1942)
  • 1859 - சுவாண்டே ஆரேனியஸ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர், (இ. 1927)
  • 1900 - ஜியோர்கஸ் செஃபேரிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர், (இ. 1971)
  • 1941 - டேவிட் குரொஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
  • 1943 - டிம் ஹண்ட், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
  • 1956 - ரொடெரிக் மாக்கினன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்

  • 1951 - அண்டிரே கைட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், (பி. 1869)
  • 1952 - நூட் ஹாம்சன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், (பி. 1859)
  • 1988 - அண்டிரே கூர்னான்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)

>>>பிப்ரவரி 18 [February 18]....

நிகழ்வுகள்

  • 1229 - புனித ரோம் பேரரசின் மன்னன் இரண்டாம் பிரெடெரிக் எகிப்திய மன்னன் அல்-கமீல் உடன் 10 ஆண்டு போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டான்.
  • 1478 - இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்ட்டிற்கு எதிராக சதி முயற்சியில் இறங்கியதற்காக அவனது சகோதரன் ஜோர்ஜ் (கிளாரன்ஸ் இளவரசன்) தூக்கிலிடப்பட்டான்.
  • 1797 - ட்ரினிடாட் பிரித்தானியர்களிடம் வீழ்ந்தது.
  • 1832 - இலங்கையின் பல இடங்களில் ஓர் அசாதாரண எரிமீன் (meteor) தோன்றியது.
  • 1861 - அலபாமாவில் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கு தலைவரானார்.
  • 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வில்லியம் ஷேர்மன் தலைமையிலான கூட்டுப் படைகள் தென் கரோலினாவின் மாநில அவையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.
  • 1911 - முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.
  • 1929 - முதற்தடவையாக ஒஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
  • 1930 - கிளைட் டொம்பா ஜனவரியில் எடுத்த புகைப்படங்களை ஆராய்கையில் புளூட்டோவைக் கண்டுபிடித்தார்.
  • 1932 - சீனக் குடியரசிடம் இருந்து மன்சூகுவோவின் விடுதலையை ஜப்பான் மன்னர் அறிவித்தார்.
  • 1957 - கென்யாவின் போராளித் தலைவர் டெடான் கிமாத்தி பிரித்தானிய குடியேற்ற அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
  • 1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • 1965 - காம்பியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1979 - தெற்கு அல்ஜீரியாவில் சகாரா பாலைவனத்தில் முதற் தடவையாக பனி மழை பெய்தது.
  • 1991 - லண்டனில் தொடருந்து நிலையங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன.
  • 2003 - தென் கொரியாவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 2004 - ஈரானில் இராசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் 295 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2007 - தில்லியில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டு இருந்த 'சம்ஜவுதா' விரைவு தொடருந்தில் குண்டுகள் வெடித்து தீ பிடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1745 - வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1827)
  • 1836 - ஸ்ரீ ராமகிருஷ்ணர், இந்தியாவின் ஆன்மீகவாதி (இ. 1886)
  • 1860 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1946)
  • 1926 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)
  • 1931 - டொனி மொறிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்.

இறப்புகள்

  • 1546 - மாட்டின் லூதர், ஜெர்மனிய சமய சீர்திருத்தவாதி (பி. 1483)
  • 1564 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய ஓவியர் (பி. 1475)
  • 1967 - றொபேட் ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1904)

சிறப்பு நாள்

  • காம்பியா - விடுதலை நாள் (1965)

>>>தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

 
மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

>>>முட்டையை வைத்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!

முட்டையை வைத்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!

முட்டையில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைய சத்துக்கள் உள்ளன. குறிப்பாக முட்டையில் தான் மற்ற உணவுப் பொருட்களை விட அதிக அளவில் புரோட்டீன் மற்றும் சல்பர் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் உடலுக்கு தேவையான 9 அமினோ அமிலங்கள், கோலைன், வைட்டமின் டி போன்றவைகளும் உள்ளன. மேலும் முட்டையை அதிகம் சாப்பிட்டால், கண்களுக்கு நல்லது.

எனவே அத்தகைய உணவுப் பொருளை காலையில் காலை உணவாகவோ அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவோ செய்து சாப்பிடலாம். அதிலும் முட்டையை குழம்பு, குருமா, மசாலா என்று மதிய வேளையில் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் தான் செய்வோம். ஆனால் அதனை வைத்தும் சூப்பரான ஸ்நாக்ஸ்களை செய்யலாம். இத்தகைய ஸ்நாக்ஸ்கள் குறிப்பாக டயட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறந்ததாக இருக்கும். இப்போது அத்தகைய முட்டையை எப்படியெல்லாம் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் என்று ஒருசிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சமைத்து சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

>>>செஞ்சிலுவைச் சங்கத்தின் 150-வது ஆண்டு நிறைவு!

 
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது 150 வது ஆண்டு நிறைவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறது.

கடந்த 1859-ல் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியர்களுக்கு இடையே நடந்த போரின்போது சொல்பெரினோ மோதலில் காயமடைந்தர்கள். அதுபோன்ற துயரத்துக்கு ஆளானவர்களுக்கு உதவுவதற்காக 1863-ல் செஞ்சிலுவை அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜெனீவாவை சேர்ந்த வணிகரான ஹென்றி டுனண்ட் முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று இன்று உலகின் பல போர் முனைகளிலும் செயற்படுகிறது.

150 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த வேளையில், நவீன ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

>>>நம்முடைய கட்டாய கடமை பூமியை மாசு படுத்தாமல் வைதிருப்பது !

 
நம்முடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம் , அதை போல் நம் சுற்றத்தையும் சுத்தமாக வைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும் .நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்கு நாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர் ,நிலம் காற்று .போன்றவற்றை சுத்தமாக வைத்தாயே போதும்

" ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது .

பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் .

இதற்கு என்ன செய்யலாம் ?

Reduce - குறைக்க வேண்டும் : பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் .

Reuse - மீண்டும் பயன்படுத்த வேண்டும் : நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .

Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .
Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது

முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம் . நாம் எல்லோரும் ஒன்று படுவோம் . பூமியைக் காப்பாற்றுவோம் .

தீதும் நன்றும் பிறர்தர வாரா !

>>>மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள் !

நாம் கண்டிப்பாக படிக்க வேண்டிய அறியவேண்டிய பகிரவேண்டிய தகவல் நம் அனைவருடைய வீட்டிலும் தாய் , தங்கை மனைவியாக இப்படி ஒவ்வரு விதமாக நம்முடன் இருக்கும் ஒரு சொந்தம் பெண் எதோ ஒரு வகையில் அவர்களுடைய கஷ்டங்களை அவஸ்தைககளை புரிந்து கொள்ள கூடிய வகையிலாவது இந்த தகவல் இருக்கும்

மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.

இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம். இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

- கோபம் தொடர்ந்து நீடித்தல்.

- வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.

- சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.

- காரணமில்லாமல் அழுதல்.

- தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.

- மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.

- கடுமையான சோர்வு.

- உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.

- பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.

- கட்டுப்பாடற்ற சில செயல்பாடுகள் போன்றவை பி.எம்.டி.டி.யின் இதர அறிகுறிகள்.

சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.

பி.எம்.டி.டி. பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் என்னென்ன?

ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.இந்த தகவலை தந்த சுமதி அவர்களுக்கு இன்று ஒருதகவல் சார்பாக நமது நன்றியே தெரிவித்து கொள்கிறோம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...