கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

 


தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் வேளாண் கூட்டுறவு கடன் தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய பிறகு பேசிய அவர், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

>>> பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் (Prospectus & Online apply details)...

 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தேர்வுக்குழு செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி நர்சிங், பி.ஃபார்ம், பி.ஏஎஸ்எல்பி ( செவித்திறன் பேச்சு மற்றும் மொழிக்குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்.சி. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி. க்ரிடிகல்கேர் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரெஸ்பிரேட்டரி தெரபி,, பி.ஓ.டி, பி.ஆப்டம் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tnhealth.tn.gov.in. மற்றும் www.tnmedicalselection.gov ஆகிய இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்தபின், விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 01-10-2020 10 மணி முதல் 15-10-2020 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 ஐ ஆன்லைனிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ”the Secretary, Slection Committee, kilpauk, chennai -10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும், பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வபொழுது கட்டாயமாக பார்த்து அறிந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9884224648988422464998842247459884224746 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 01.10.2020(வியாழக்கிழமை)


🌹கேட்டால் மட்டுமே கொடுங்கள் 

பணமோ அல்லது பாசமோ 

இலவசமாக கொடுக்கப்படும் எதுவாயினும் ஒருநாள் உதாசீனம் செய்யப்படும்.!

🌹🌹அதிகாரம் செய்யும் இடத்தில் இருந்தாலும்,அன்பாய் பேசுங்கள்.

அதிகார போதையில் வாழ்ந்தவர்களை விட,

வீழ்ந்தவர்களே இங்கு அதிகம்.!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💐💐அன்புள்ளங் கொண்ட அனைத்து பெரியவர்களுக்கும் 

உலக முதியோர் தின நல்வாழ்த்துக்கள்

👉அன்பை காட்டி வளர்த்தவர்களை 

அன்புக்காக ஏங்க விடாக்கூடாது.

பண்பை தந்து வளர்த்தவர்களை 

ஒரு சோற்று பருக்கைக்காக கை ஏந்த விடக்கூடாது.

முதிர்ந்த குழந்தைகள் அவர்கள் 

வயது முதிர்வின் காரணமாக ஆயிரம் குற்றங்கள் செய்தாலும் அனுசரித்து வாழ்வோம்.

📕📘அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் சென்னை உயர்நீதிமன்த்தில் தெரிவித்துள்ளது.

📕📘இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி : 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது. 

📕📘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு.

87,000 இடங்களில் 70,000+ மட்டுமே நிரம்பியதால், அவகாசத்தை நீட்டித்தது உயர்கல்வித்துறை.

இதுவரை சேராத மாணவர்கள் வரும் நாட்களில் நேரடியாக கல்லூரிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று அறிவிப்பு.

📕📘அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

- மத்திய அரசு

📕📘தனிநபர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ஆம் தேதிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

📕📘அக்டோபர் 15 முதல் நீச்சல் குளங்கள்,தியேட்டர்கள்,

பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது 

- மத்திய அரசு

📕📘நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

அக்டோபர் 31 ஆம் தேதி வரை கட்டுபாடுகளை அமல்படுத்தலாம்

- மத்திய அரசு

📕📘பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது:

விளையாட்டுப் பிரிவில் 1,409, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 855 & 149 மாற்றுத்திறன் மாணவர்கள் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

அக். 8 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.

📕📘விவசாய மசோதாக்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விவரங்கள்:

👉மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களை செல்லத்தக்கது அல்ல என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் உத்தரவிட வேண்டும்

விவசாயிகளின் சுதந்திரம் மற்றும் சுலபமாக விற்பனை செய்யக்கூடிய திறன்களை பறிக்கும் வகையில் இந்த சட்டங்கள் இருக்கிறது.

அடிப்படை ஆதார விலை, மண்டிகள் முறை போன்றவற்றை பறித்து விட்டு விவசாயத் துறையை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும் வகையில் இந்த சட்டங்கள் உள்ளது.

அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயம் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கி இருப்பதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அதனை பெறுவதற்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📕📘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

📕📘ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக்கூடம் திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

📕📘கேரளாவில் ஊரடங்கு நீடிப்பு இல்லை என்ற போதும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

📕📘இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

📕📘நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட 25% எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு.

📕📘இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு.

📕📘வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த மாதம் 2 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

📕📘உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கும் மைல்கல் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

📕📘 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு -அக்.15ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல்.

📕📘2018-2019 மற்றும் 2019-2020 நிதியாண்டுகளுக்கு வருமான வரி படிவம் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (இந்திய அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் கடிதம் வெளியீடு)

📕📘ரேடியோ சிட்டியின் "கல்விக்கு கைகொடுப்போம்" நிகழ்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு.

📕📘யோனோ செயலி மூலம்  வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு.

📕📘அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது 2011முதல் 2014வரை நியமனம செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறை மற்றும் பனிவரன் முறை படிவம் வெளியீடு.

📕📘தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 86,326 பேர் விண்ணப்பம்.

📕📘சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தில் விடுபட்ட மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு

📕📘Govt Law College சட்டப் படிப்பு நேற்று முதல் விண்ணப்பம் வினியோகம்

📕📘பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு

📕📘RTE - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

📕📘DSE PROCEEDINGS பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

📕📘பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம்"

👉காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை.

👉திருமணமான நபர்களுடன், இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது குறித்தும் உயர் நீதிமன்றம் கவலை.

👉10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளது- காவல்துறை.

👉பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

📕📘இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் மறைவுக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியும் ராமகோபாலனும் நல்ல நண்பர்களே என்று அவர் தெரிவித்துள்ளார்.

📕📘பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

📕📘நீட் தேர்வின் போது மாணவர்களின் ஆபரணங்களை அகற்றும்படி நிர்பந்திக்கக்கூடாது : உயர் நீதிமன்றத்தில் வழக்கு 

📕📘பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 

📕📘மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் - மாற்றுத் திறனாளி பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்ந்து கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘மதுரையில் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பணியிடை (நிஷ்த்தா) பயிற்சி வகுப்புகள் இன்று  முதல் டெலிகிராம் செயலி மூலம் துவங்குகிறது.

📕📘புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ மாணவா் சோ்க்கையில் புதுவைக்கான இட ஒதுக்கீடு முன்புபோலவே நிச்சயமாகக் கிடைக்கும் என்று முதல்வா் வே.நாராயணசாமி உறுதியளித்தாா்.  

📕📘10-ஆம் வகுப்பு தனித்தேர்வின் 29 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணி தீவிரம். இரண்டே நாளில் முடிக்க திட்டம் - நாளிதழ் செய்தி

📕📘கொரோனா தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கையை இந்தியா, ரஷ்யா & சீனா ஆகிய நாடுகள் மறைத்து வைத்துள்ளன.

- அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.

📕📘தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

📕📘பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

📕📘தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24% அதிகம் பெய்துள்ளது

சென்னையில் இயல்பான அளவில் மழை பெய்துள்ளது 

- சென்னை வானிலை ஆய்வு மையம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

>>> நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகம் - மாணவர் சேர்க்கை அறிவிப்பு (TNJFU ADMISSION 2020-21) வெளியீடு...

 



>>> Click here to Download TNJFU UG Admission Prospectus 2020-21

>>> "குரூப் - 2" உட்பட அரசு துறை பணிகளுக்கான ஏழு வகை தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது....

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'குரூப் - 2' நேர்காணல் தேர்வு உள்ள பதவிகளில் 1334 காலியிடங்களை நிரப்ப 2019 பிப்ரவரி 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 19ல் நேர்காணல் நடத்தப்படும்..


தமிழக தகவல் தொழில்நுட்ப துறையில் உதவி கணினி ஆய்வாளர் பணியில் 60 பணியிடங்களை நிரப்ப 2019 ஏப்ரலில் தேர்வு நடந்தது. இதில் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களின் மதிப்பெண் தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது.

கைத்தறி மற்றும் ஜவுளி துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 19 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலரான டி.இ.ஓ. பதவியில் 20 இடங்களை நிரப்பும் தேர்வுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான நலன் சார்ந்த நிறுவனத்தில் திட்ட அலுவலர் தமிழ்நாடு சிறைப்பணி உதவியாளர் தொல்லியல் துறை அலுவலர் உள்ளிட்ட தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த முடிவுகள் வழியே மொத்தம் 1455 காலியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

>>> NISHTHA-Online Training-ல் ஆசிரியர்கள் கலந்து கொள்ளுதல் மற்றும் Download செய்யவேண்டிய Apps குறித்து திருவாரூர் CEO அவர்களின் செயல்முறைகள்...

 


>>> Click here to Download Telegram app  


>>> Click here to Download Diksha app


>>> Click here to Download Q.R. code app

>>> தற்காலிக மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு ஊதிய உயர்வு பற்றிய நடைமுறை மற்றும் அரசாணைகள்...

 (அ) தற்காலிக ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால், அவர் வசிக்கும் பதவியில் தகுதிகாண் பருவக்காலத்தில் தேர்வுகள் ஏதேனும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் முதல் ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும். இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் வழங்கப்படும். (அரசாணை எண். 1087, நிர்வாகத்துறை, நாள் 10.11.1982 அரசாணை எண். 231, P&AR,சி.16383 மற்றும் அரசு க.எண் 35068DOFIP&AR,நாள் 1.1.1994) தற்காலிகமாக பதவி உயர்வு பெற்றவருக்கும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கலாம். (Govt. Letter. No. 15285/FR.1746, Finance dated. 16.8.1975)


(ஆ) தகுதிகாண் பருவத்தினருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். தகுதிகாண் பருவக் காலத்தில் தேர்வுகள் வரையறை செய்யப்பட்ட பதவிகளுக்கு இரண்டாம் ஊதிய உயர்வு குறிப்பிட்ட அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் வழங்கப்படும். தகுதிகாண் பருவம் முடிந்து ஆணை வழங்கிய பின்னர் தான் இரண்டாவது ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது இனி இல்லை (G.O Ms No. 618, P&A.R., Dated 6.7.1987)


(இ) புதிய பதவியில் பணி அமர்த்தப்பட்டால், முந்தையப் பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு சேராது. இருப்பினும் அதே பதவியில் அதே துறையிலோ வேறு துறையிலோ பணி அமர்த்தப்பட்டால் அதே ஊதியம் வழங்குவதுடன் முந்தைய பணிக்காலம் ஊதிய உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். (Govt. Letter. No.76362874, P&AR Dated 27.7.1988)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...