கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> இன்றைய செய்திகள் தொகுப்பு... 01.10.2020(வியாழக்கிழமை)


🌹கேட்டால் மட்டுமே கொடுங்கள் 

பணமோ அல்லது பாசமோ 

இலவசமாக கொடுக்கப்படும் எதுவாயினும் ஒருநாள் உதாசீனம் செய்யப்படும்.!

🌹🌹அதிகாரம் செய்யும் இடத்தில் இருந்தாலும்,அன்பாய் பேசுங்கள்.

அதிகார போதையில் வாழ்ந்தவர்களை விட,

வீழ்ந்தவர்களே இங்கு அதிகம்.!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💐💐அன்புள்ளங் கொண்ட அனைத்து பெரியவர்களுக்கும் 

உலக முதியோர் தின நல்வாழ்த்துக்கள்

👉அன்பை காட்டி வளர்த்தவர்களை 

அன்புக்காக ஏங்க விடாக்கூடாது.

பண்பை தந்து வளர்த்தவர்களை 

ஒரு சோற்று பருக்கைக்காக கை ஏந்த விடக்கூடாது.

முதிர்ந்த குழந்தைகள் அவர்கள் 

வயது முதிர்வின் காரணமாக ஆயிரம் குற்றங்கள் செய்தாலும் அனுசரித்து வாழ்வோம்.

📕📘அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் சென்னை உயர்நீதிமன்த்தில் தெரிவித்துள்ளது.

📕📘இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி : 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது. 

📕📘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு.

87,000 இடங்களில் 70,000+ மட்டுமே நிரம்பியதால், அவகாசத்தை நீட்டித்தது உயர்கல்வித்துறை.

இதுவரை சேராத மாணவர்கள் வரும் நாட்களில் நேரடியாக கல்லூரிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று அறிவிப்பு.

📕📘அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

- மத்திய அரசு

📕📘தனிநபர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ஆம் தேதிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

📕📘அக்டோபர் 15 முதல் நீச்சல் குளங்கள்,தியேட்டர்கள்,

பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது 

- மத்திய அரசு

📕📘நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

அக்டோபர் 31 ஆம் தேதி வரை கட்டுபாடுகளை அமல்படுத்தலாம்

- மத்திய அரசு

📕📘பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது:

விளையாட்டுப் பிரிவில் 1,409, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 855 & 149 மாற்றுத்திறன் மாணவர்கள் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர்.

அக். 8 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.

📕📘விவசாய மசோதாக்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விவரங்கள்:

👉மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களை செல்லத்தக்கது அல்ல என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் உத்தரவிட வேண்டும்

விவசாயிகளின் சுதந்திரம் மற்றும் சுலபமாக விற்பனை செய்யக்கூடிய திறன்களை பறிக்கும் வகையில் இந்த சட்டங்கள் இருக்கிறது.

அடிப்படை ஆதார விலை, மண்டிகள் முறை போன்றவற்றை பறித்து விட்டு விவசாயத் துறையை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும் வகையில் இந்த சட்டங்கள் உள்ளது.

அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயம் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை நீக்கி இருப்பதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அதனை பெறுவதற்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📕📘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

📕📘ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக்கூடம் திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

📕📘கேரளாவில் ஊரடங்கு நீடிப்பு இல்லை என்ற போதும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

📕📘இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை 10 வயதுக்கு மேற்பட்ட 15 நபர்களில் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

📕📘நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட 25% எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு.

📕📘இந்தியா-வங்கதேசம் இடையேயான உச்சி மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு.

📕📘வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த மாதம் 2 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

📕📘உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகி இருப்பது வேதனை அளிக்கும் மைல்கல் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

📕📘 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு -அக்.15ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல்.

📕📘2018-2019 மற்றும் 2019-2020 நிதியாண்டுகளுக்கு வருமான வரி படிவம் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (இந்திய அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் கடிதம் வெளியீடு)

📕📘ரேடியோ சிட்டியின் "கல்விக்கு கைகொடுப்போம்" நிகழ்ச்சி - அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு.

📕📘யோனோ செயலி மூலம்  வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு.

📕📘அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது 2011முதல் 2014வரை நியமனம செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறை மற்றும் பனிவரன் முறை படிவம் வெளியீடு.

📕📘தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 86,326 பேர் விண்ணப்பம்.

📕📘சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்தில் விடுபட்ட மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்க உத்தரவு

📕📘Govt Law College சட்டப் படிப்பு நேற்று முதல் விண்ணப்பம் வினியோகம்

📕📘பொறியியல் மேற்படிப்புக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.7 வரை கால அவகாசம் நீட்டிப்பு

📕📘RTE - நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குதல் - விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் மற்றும் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

📕📘DSE PROCEEDINGS பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

📕📘பெற்றோர்கள், குழந்தைகளோடு நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேற காரணம்"

👉காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை.

👉திருமணமான நபர்களுடன், இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது குறித்தும் உயர் நீதிமன்றம் கவலை.

👉10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பெறப்பட்டுள்ளது- காவல்துறை.

👉பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

📕📘இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் மறைவுக்கு திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதியும் ராமகோபாலனும் நல்ல நண்பர்களே என்று அவர் தெரிவித்துள்ளார்.

📕📘பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

📕📘நீட் தேர்வின் போது மாணவர்களின் ஆபரணங்களை அகற்றும்படி நிர்பந்திக்கக்கூடாது : உயர் நீதிமன்றத்தில் வழக்கு 

📕📘பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 

📕📘மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் - பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் - மாற்றுத் திறனாளி பள்ளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்ந்து கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 

📕📘மதுரையில் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பணியிடை (நிஷ்த்தா) பயிற்சி வகுப்புகள் இன்று  முதல் டெலிகிராம் செயலி மூலம் துவங்குகிறது.

📕📘புதுச்சேரி ஜிப்மா் மருத்துவ மாணவா் சோ்க்கையில் புதுவைக்கான இட ஒதுக்கீடு முன்புபோலவே நிச்சயமாகக் கிடைக்கும் என்று முதல்வா் வே.நாராயணசாமி உறுதியளித்தாா்.  

📕📘10-ஆம் வகுப்பு தனித்தேர்வின் 29 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணி தீவிரம். இரண்டே நாளில் முடிக்க திட்டம் - நாளிதழ் செய்தி

📕📘கொரோனா தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கையை இந்தியா, ரஷ்யா & சீனா ஆகிய நாடுகள் மறைத்து வைத்துள்ளன.

- அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.

📕📘தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

📕📘பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

📕📘தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24% அதிகம் பெய்துள்ளது

சென்னையில் இயல்பான அளவில் மழை பெய்துள்ளது 

- சென்னை வானிலை ஆய்வு மையம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine   புது ஊஞ்சல் - புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 மாதமிரு...