கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 நீட் தேர்வில் தமிழக அளவில் 710 மதிப்பெண்கள் பெற்று வெள்ளகோவில் மாணவர் முதலிடம்...

 (வெள்ளக்கோவில் மாணவர் முதலிடம்)

நாமக்கல், அக்.16: நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். நிகழாண்டில், திருப்பூர் மாவட்டம்,வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

மாணவர் ஸ்ரீஜன் கூறியதாவது: வெள்ளக்கோவில் எனது சொந்த ஊர். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மீண்டும் எழுதுவதற்கு முயற்சித்து நாமக்கல்லில் பயிற்சி பெற்றேன். அதனால் இந்த ஆண்டு 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் என்றார்.

🍁🍁🍁 சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் ஒதுக்கீடு தொடர்பாக - CM CELL Reply...

 


🍁🍁🍁 மீண்டும் வெளியிடப்பட்டது நீட் தேர்வு முடிவுகள் - NEET(UG) – 2020 Results - Press Release 2...

 


>>> Click here to Download NEET(UG)-2020 Results - Press Release 2...


🍁🍁🍁 முதுநிலை மருத்துவ படிப்பு - அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்குவதில் உடன்பாடு இல்லை - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

 


🍁🍁🍁 நீட் தேர்வு முடிவு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி...

 



தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்ச்சி பெற்றது 88,889 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வெழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37,301 பேர் என தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 50,392 பேர் தேர்வெழுதிய நிலையில், 1,738 பேர் மட்டும் பாஸ் ஆன நிலையில், தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்வெழுதிய 1.56 லட்சம் பேரில் 7,323 பேர் மட்டும் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79 என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>> Click here to Download NTA - PRESS RELEASE(NEET 2020)...

🍁🍁🍁 கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி...

 


🍁🍁🍁 மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என உத்தரவு...

 ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையாலும், ஆண்கள் பெயர்களை ஊதா மையாலும் எழுதும் வழக்கமாக உள்ளது. அதேபோல் வருகை பதிவேட்டில் மாணவ, மாணவியரின் பெயர்களுடன் ஜாதி மற்றும் மதத்தை எழுதும் வழக்கமும் உள்ளது. இது குறித்து ஆந்திர மாநில அரசு,  பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் ஜாதி, மதம் குறித்த தகவல்களை பதிவிடக் கூடாது என்றும், வருகை பதிவேட்டில் பெண்கள் பெயர்களை சிவப்பு மையால் எழுதக்கூடாது என்றும் அனைவரும் சமமே என்ற கோட்பாடு இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகி தெரிவித்துள்ளார். ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 - Answer Key - Part B & Part C

        TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...