கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2023-2024 ஆம் கல்வியாண்டில் AIIMS மற்றும் JIPMER மற்றும் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் - மாநிலம் / யூனியன் பிரதேச வாரியான பட்டியல் (State / Union Territory wise list of Government and Private Medical Colleges including AIIMS and JIPMER & Seats in the Country for the Academic Year 2023-2024)...
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online application for Paramedical Degree Courses from 19.06.2023)...
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online application for Paramedical Degree Courses from 19.06.2023)...
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள் - படிப்புகளின் பெயர் - 2023-24ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை (TamilNadu Government Medical College Institutions - Name of Courses - Number of Colleges & Seats for Under Graduate & Diploma courses during the year 2023-24)...
2021-2022ஆம் ஆண்டுக்கான M.B.B.S., மற்றும் B.D.S., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (PROVISIONAL RANK LIST) வெளியீடு...
2021-2022ஆம் ஆண்டுக்கான M.B.B.S., மற்றும் B.D.S., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
>>> PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2021 2022 SESSION (GOVERNMENT QUOTA )...
>>> PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2021 2022 SESSION (MANAGEMENT QUOTA INCLUDING NRI)...
B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...
B.Sc., (Nursing), B.Pharm., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர 25-10-2021 முதல் 10-11-2021 வரை tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org ஆகிய வலைதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் - மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு...
இ.எஸ்.ஐ யில் மருத்துவ இடம் செப்டம்பர் 20க்குள் வாரிசு சான்று பெறலாம்(Medical place in ESI can get the certificate of succession by September 20)...
இ.எஸ்.ஐ யில் மருத்துவ இடம் செப்டம்பர் 20க்குள் வாரிசு சான்று பெறலாம்(Medical place in ESI can get the certificate of succession by September 20)...
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் EWS (OC) 10% இடஒதுக்கீடு...
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடப்பு ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த பிரச்சினைக்கு ஒரு பயனுள்ள தீர்வை அளிக்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த முடிவு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவப் படிப்பில் கிட்டத்தட்ட 1,500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பில் 2,500 இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 550 முன்னேறிய வகுப்பு மாணவர்களும், முதுகலைப் பட்டப்படிப்பில் சுமார் 1,000 பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு மாணவர்களும் பலன் பெற உள்ளனர்.
இதனால், மொத்தமாக கிட்டதட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் பின்தங்கிய பிரிவினருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, முன்னேறிய வகுப்பு பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா 3வது அலை - மருத்துவக் கல்வி இயக்குனர் புதிய உத்தரவு...
கொரோனா 3வது அலை - மருத்துவக் கல்வி இயக்குனர் புதிய உத்தரவு...
ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
குழந்தைகள் மருத்துவர், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
குழந்தைகள் பிரிவில் 4ல் 1பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திடவேண்டும்- தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர்.
கொரோனா 3-வது அலையில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் - அறிக்கை சமர்ப்பிக்க நீதியரசர் ஏ.கே இராஜன் தலைமையில் குழு - தமிழக அரசு உத்தரவு...
Committee for analysing the impact of the NEET
தமிழ்நாட்டில் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே இராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு...
>>> செய்தி வெளியீடு எண்: 256, நாள்: 10-06-2021...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயில 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் 10-06-2021 மாலை 4.30 மணிக்கு ஆலோசிக்க உள்ளதாக தகவல்...
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதி வழங்கி சுகாதாரத்துறை உத்தரவு...
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதி வழங்கி சுகாதாரத்துறை உத்தரவு...
>>> Click here to Download G.O.Ms.No.254, Dated: 24-05-2021...
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
உயர்கல்வித்துறையிலிருந்து, சுகாதாரத்துறைக்கு கல்லூரி நிர்வாகம் மாற்றப்பட்ட நிலையில், கல்விக் கட்டணம் அறிவிப்பு
எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.13,610ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு
பல்மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூ.11,610ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு
மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த கல்வி கட்டணத்தில், கற்பித்தல் கட்டணம் மட்டும் ரூ.30,000ஆக நிர்ணயம் செய்து அறிவிப்பு.
அரசாணை வெளியிட்ட அரசு - ஆனாலும் போராட்டத்தை தொடரும் மாணவர்கள் - என்ன நடக்கிறது சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில்?
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைப் போலவே, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி, தொடர்ந்து 51 நாட்களாக அறவழியிலும் நூதன முறையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுக்க மறுத்து பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
அதேவேளையில் மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து 51வது நாளான இன்று தமிழக அரசு சார்பில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மாறுவதாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதனை அறிந்த மாணவர்கள், 'இது எங்களின் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. இதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தெளிவான விளக்கம் அந்த அரசாணையில் இல்லை. இது என்றிலிருந்து அமலாக்கப்படுகிறது என்ற தெளிவும் இல்லை. எனவே இந்த ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெளிவான விளக்கத்தை அறிவிக்கும்வரை போராட்டம் தொடரும்' என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளதால், பல்கலைக்கழக வளாகத்தில் குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது...
ஒடிசா: நீட் தேர்வில் தேர்ச்சி - மருத்துவம் படிக்கும் 64 வயது மாணவர் - ஜெய கிஷோர் பிரதான்...
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 64 வயது முதியவருக்கு ஒடிசாவின் விம்சார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை தங்கள் வாழ்க்கை லட்சியமாக கொண்டிருப்பர். ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணாமாக அவர்களால் அந்த கனவை எட்ட முடியாமல் போயிருக்கும். ஒரு கட்டத்தில் லட்சியத்தை ஒதுக்கி வைத்து விட்டு வேறு வேலையை பார்க்க தொடங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ கனவை அடைய முடியாத விரக்தியில், தங்களை தாங்களே அழித்துக் கொள்ளக் கூட துணிவார்கள்.
ஆனால் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இளைஞர் ஒருவர், தன் குடும்ப வறுமை காரணமாக லட்சியத்தை தொலைத்து விட்டார். பின்னர், வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி தற்போது பணியில் இருந்தும் கூட ஓய்வு பெற்று விட்டார். ஓய்வு பெற்ற பிறகுதான், தான் இளமையில் கண்ட கனவை நிறைவேற்றி இப்போது மருத்துவராகியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
ஒடிசாவில் உள்ள பார்கர் மாவட்டத்தில் அட்டபிரா என்ற ஊரை சேர்ந்தவர் 64 வயதாகும் முதியவர் ஜெய கிஷோர் பிரதான். சிறு வயதில் இருந்தே இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. தனது பள்ளி படிப்பை முடித்த இவர், மருத்துவ நுழைவு தேர்வை எழுதியுள்ளார். அப்போது அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்ட இவர், பி.எஸ்.சி படிப்பை முடித்தார். பின்னர் வங்கி ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது வருமானத்தை சிறிது சிறிதாக சேமித்து, குடும்பத்தை கரைசேர்த்துள்ளார் ஜெய கிஷோர். கடந்த 1989 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவருக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். காலங்கள் உருண்டோடியதே தவிர மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் ஜெய கிஷோரை விட்டு துளி அளவு கூட அகலவில்லை.
தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை. தனது 3 குழந்தைகளையும் எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது ஜெய கிஷோரின் கனவாக இருந்துள்ளது. இதற்கிடையே மூத்த மகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இரண்டாவது மகள் தற்போது சட்டீஸ்கர் மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் தற்போது 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார் ஜெய கிஷோர்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயகிஷோர், வீட்டில் சும்மா இருக்கவில்லை. சிறு வயது லட்சியமாக மருத்துவராகும் கனவை நிறைவேற்ற முடிவு செய்தார். தற்போது மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. இதில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் நீட் தேர்வை எழுதலாம். வயது வரம்பு விதிமுறைகள் இல்லை. இதனை கருத்தில் கொண்ட ஜெயகிஷோர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் உதவியுடன் நீட் நுழைவு தேர்வுக்கு தன்னை தயார் படுத்தினார்.
நீட் தேர்வை எழுதிய ஜெயகிஷோர் முதல் அட்டெமிட்டிலேயே தேர்ச்சியும் பெற்றார். தற்போது ஜெயகிஷோருக்கு ஒடிசாவின் விம்சார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 64 வயதில் கல்லூரிக்கு செல்லும் இந்த இளைஞர் தற்போது தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளார்.
மருத்துவரானவுடன் ஏழை, எளியோருக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என்று இந்த மாண்புமிகு மாணவர் ஜெயகிஷோர் தெரிவித்துள்ளார்.
7.5% இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் M.B.B.S., / B.D.S., படிப்புகளில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அத்தியாவசியக் கட்டணங்கள், விடுதிக் கட்டணங்கள் செலுத்த ரூ.16 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு - அரசாணை எண்: 496, நாள்: 30-11-2020 வெளியீடு...
7.5% இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் M.B.B.S., / B.D.S., படிப்புகளில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அத்தியாவசியக் கட்டணங்கள், விடுதிக் கட்டணங்கள் செலுத்த ரூ.16 கோடி சுழல் நிதி ஒதுக்கீடு - அரசாணை எண்: 496, நாள்: 30-11-2020 வெளியீடு...
G.O.Ms.No.496, Dated: 30-11-2020...
>>> Click here to Download G.O.Ms.No.496, Dated: 30-11-2020...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் - தமிழ்...