கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி- தமிழக முதல்வர் அறிவிப்பு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
🍁🍁🍁 TNPSC - குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர், மருத்துவ ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு...
குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர், மருத்துவ ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
''இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய 2018-19 ஆம் ஆண்டுக்கான சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் உள்ள உதவி இயக்குநர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அலுவலர் ஆகிய பதவிகளுக்கான முதல்கட்டச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய மருத்துவ ஆய்வாளர் மற்றும் மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலைப் பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகளுக்கான நான்காம் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களின் சான்றிதழ்களை அக்.28-ம் தேதி முதல் நவ.6-ம் தேதி மாலை 5.30 மணி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவ்விண்ணப்பதாரர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இ-சேவை மையங்களின் பட்டியல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
🍁🍁🍁 2 சுற்றுக் கலந்தாய்வு நிறைவு - ஒரு இடம் கூட நிரம்பாத 124 பொறியியல் கல்லூரிகள்...
பொறியியல் படிப்புகளுக்கான 2-வது சுற்றுக் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத சூழல் நிலவுகிறது.
தமிழகப் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்புக் கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகின.
விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு அக்.8-ம் தேதி தொடங்கியது. அதில், குறைவான மாணவர்களே கலந்து கொண்டனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர்.
இதேபோல், 2-வது சுற்றிலும் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கலந்து கொண்டனர். கலந்தாய்வில் கலந்துகொள்ள 22,903 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 13,415 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 461 கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
391 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பின. 30 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில், 20,925 இடங்கள் அதாவது 13 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
இரண்டு சுற்றுகளின் முடிவில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் மொத்தமாக 40 சதவீதம் (14,241 மாணவர்கள்) பேர் கலந்து கொள்ளவில்லை. இதுவே கடந்த ஆண்டில் கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 9,393 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...