கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி - விரைவில் அரசாணை வெளியீடு...
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு உயர்கல்விக்கு பின்னேற்பு வேண்டி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் 17 (a) -ன் கீழ் "கண்டனம்" என்ற தண்டனையும் வழங்கப்பட்டு விட்டதால் தற்பொழுது இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. மேலும், அரசாணை 116ன் படி 10.3.2020-க்குள் உயர்கல்வி முடித்தவர்களுக்கு மார்ச் 2021-க்குள் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடியும் என்ற காரணத்தினாலும் சங்கங்கள் தொடர் கோரிக்கை வைத்து வருவதாலும் பரிசீலனை செய்து விரைவில் பின்னேற்பு வழங்க தயார்செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அரசாணை சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🍁🍁🍁 போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் 20 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்...
போலிச் சான்றிதழ் மூலம் அரசுப்பள்ளியில் இருபது ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த பெண் ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகரைச் சேர்ந்தவர் குமணன். இவருடைய மனைவி கண்ணம்மாள் (52). இவர், பாலக்கோடு அருகே உள்ள திம்மராயனஅள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office
ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை - பாம்பனில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம் ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை கா...