கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார் - அமைச்சர்...

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வியாழக்கிழமை (நவம்பர் 12) தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கோபிசெட்டிபாளையம் அருகே அமைச்சர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 தமிழகத்தில் 16 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

 நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.

 பள்ளிகளில் சீருடைகள், ஷூ,சாக்ஸ்  விரைவில் வழங்கப்படும்.

 முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிவிப்பார் என்றார்.

🍁🍁🍁 851 மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்...

 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மேலாக விண்ணப்பித்து உள்ளனர். 

இந்த வருடம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். 

இடையில் சேர்ந்து படித்தாலோ, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தாலோ கிடைக்காது. இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் 747 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 

இது தவிர கடந்த வருடம் படித்த மாணவர்கள் 113 பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளனர்.

🍁🍁🍁 தனியார் பள்ளியில் RTI சேர்க்கை தேர்வு பெற்ற மாணவர்கள் பட்டியல் பள்ளிகளில் இன்று வெளியீடு...

 தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இரண்டாம் சுற்றில் தேர்வான மாணவர்கள் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன.

இதற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12இல் தொடங்கி நவ.7-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 16,500 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தேர்வான மாணவர்களின் பட்டியல் புதன்கிழமை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படவுள்ளன. ஒருபள்ளியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

RTI Reply - தற்செயல் விடுப்பு(CL), ஈட்டிய விடுப்பு (EL) எந்தெந்த சூழ்நிலையில் எடுக்கலாம்? தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள்...

 


🍁🍁🍁 DEE PROCEEDINGS: தேசிய கல்வி நாள் (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்) கொண்டாடுதல் சார்ந்து- தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

 




🍁🍁🍁 🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.- முதல்வர் அறிவிப்பு...

  பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு அறிக்கை அடிப்படையில் வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு...

🍁🍁🍁 G.O. 37, Dated: 30.04.2019 - ஈட்டிய விடுப்பு விதி மாற்றம் - மாறுதல், பதவிஉயர்வு - பயன்படுத்தாத பணியேற்பிடைக் கால நாட்களை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்து கொள்ள 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது...

 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...