கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
School Safety & Security தொடர்பான பயிற்சியினை தற்போது DIKSHA App-ன் மூலமாகவும் மேற்கொள்ளலாம் - அதன் வழிமுறைகள்...
School Safety & Security தொடர்பான பயிற்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194
இந்த பயிற்ச்சியை DIKSHA -ன் மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம்.
Information from
State EMIS Team
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்கள் வழங்க முடிவு- ஓரிரு நாளில் அரசாணை வெளியாகிறது...
அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடியில் பணப்பலன்களை வழங்க அரசாணை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம்தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 2,500 பேர் உட்பட 4,000 பேர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுகிறார்கள். ஏற்கெனவே போடப்பட்ட 13-வது ஒப்பந்தத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு, ஓய்வுபெற்ற மற்றும்தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டுஏப்ரல் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஓய்வு காலபணப்பலன்களை இன்னும் வழங்கவில்லை.
வேலைநிறுத்த நோட்டீஸ்
இதேபோல், 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவது குறித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில்பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதேபோல், வேலைநிறுத்த நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மற்றொருபுறம் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில்பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருவதாக அரசுபோக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை வழங்க அடுத்த ஓரிரு நாளில் தமிழக அரசு அரசாணை வெளியிடவுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
5 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை வழங்க அடுத்த சில நாட்களில் ரூ.962 கோடிக்கான அரசாணையை வெளியிடவுள்ளது.
இதன்மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரைகிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல், 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்தும் அடுத்தடுத்து நடக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகத் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது:
முத்தரப்பு பேச்சுவார்த்தை
ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்றவர்களுக்கான பணப் பலன்கள் உள்ளிட்டவை வழங்காததைக் கண்டித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதற்கிடையே, சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.
மேலும், 14-வது புதிய ஊதியஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
TNPSC - தடய அறிவியல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு...
தமிழக மருத்துவ பணி ஆய்வாளர் - பகுப்பாய்வாளர் பணி மற்றும் தடய அறிவியல் இளநிலை அறிவியல் அலுவலர் பணிக்கும், 2019ல் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோரின் விபரங்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், வெளியிடப்பட்டன.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, வரும், 23ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முனைவர் பட்டப்படிப்புக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...
நடப்பு கல்வியாண்டில், முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழகத்தில் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், முழு நேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும், தமிழகத்தை சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன் பெற இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.இதை பெற, மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், முதுகலை பட்டப்படிப்பில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள், 1,200க்கு மேல் வந்தால், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.பல்கலையால் அனுமதிக்கப்பட்ட, படிப்பு கால அளவிற்கு மட்டும், ஊக்கத்தொகை அளிக்கப்படும். உதவித்தொகை பெற விரும்புவோர், 2021 பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மாணவர்கள், விண்ணப்பங்களை, 'ஆணையர், ஆதிதிராவிடர் நலத் துறை, சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கும், பழங்குடியின மாணவர்கள், 'இயக்குனர், பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை - 6' என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.இத்தகவலை, ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு டிகிரியில் பட்டம் பெற்றவரின் ஆசிரியர் பணி நியமனமத்துக்கு தடை...
2 ஆண்டுகள் பிஎஸ்சி கணிதம், 3ஆம் ஆண்டு பிஎ வரலாறு படித்தவருக்கு வழங்கிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பணி நியமனம் வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
பாபு என்பவருக்கு பணி வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விளக்கமளிக்க நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுபோல் பட்டம் பெற யூஜிசி அனுமதி உள்ளதா? வியாபார நோக்கில் பல்கலைக்கழகங்கள் செயல்படக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024
* KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 * Kalanjiam Mobile App New App New Update * Version 1.20.9 * Updated on 23/12/2024 * Whats ...