கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மோசடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோசடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23,158 bank frauds in 21 private banks in FY 2023-24 - Central Finance Department



Parliament Q/A


வங்கி மோசடி


 21 தனியார் வங்கிகளில் 23,158 வங்கி மோசடிகள்  2023-24 நிதியாண்டில் நடந்துள்ளது  - மத்திய நிதித்துறை


23,158 bank frauds in 21 private banks in FY 2023-24 - Central Finance Department


இந்திய வங்கிகள் 2023ல் 23,000 இணைய பாதுகாப்பு சம்பவங்களை பதிவு செய்துள்ளன: அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஃபிஷிங், ஹேக்கிங் மற்றும் மால்வேர் தாக்குதல்கள் உட்பட 2023ஆம் ஆண்டில் 23,158 வங்கி இணைய பாதுகாப்பு சம்பவங்களை இந்தியா கண்டுள்ளது. பங்கு வர்த்தக மோசடிகள் (₹4,636 கோடி) மற்றும் டிஜிட்டல் கைதுகள் (₹1,000 கோடி) போன்ற சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், மேம்படுத்தப்பட்ட அறிக்கையிடல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு வழிமுறைகளுக்கான அழைப்புகளைத் தூண்டுகின்றன. 



2023 ஆம் ஆண்டில் இந்திய வங்கி அமைப்பு 23,158 இணையப் பாதுகாப்புச் சம்பவங்களைச் சந்தித்ததாக அரசாங்கம் டிசம்பர் 18 புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இது 2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தின் போது பதிவான 1.22 லட்சம் சம்பவங்களை விட கணிசமாகக் குறைவாக இருந்தாலும், இது இன்னும் ஒரு காரணமாகும். 


 ஒரு வங்கியின் இணையதளத்தை ஹேக் செய்ய 39 முயற்சிகள் நடந்ததாகவும், கடந்த ஆண்டு 401 ஃபிஷிங் முயற்சிகள் நடந்ததாகவும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவிடம் (CERT-In) உள்ள தரவை மேற்கோள் காட்டி அரசாங்கம் கூறியது. இந்த சம்பவங்கள் வைரஸ்கள், ஃபிஷிங், நெட்வொர்க் ஸ்கேனிங் & ஆய்வு மற்றும் இணையதள ஹேக்கிங் உள்ளிட்ட பலவிதமான தாக்குதல் திசையன்களை உள்ளடக்கியது. 


பங்கு வர்த்தக மோசடிகள், டிஜிட்டல் கைதுகள், சுங்க மோசடி மற்றும் பல போன்ற புதிய இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், பங்குச் சந்தை வர்த்தக மோசடிகளில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ₹4,636 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் பரவலான சைபர் மோசடியாகும்.


இதற்கிடையில், டிஜிட்டல் கைதுகள், 2024 முதல் ஒன்பது மாதங்களில் இந்தியர்களிடம் ₹1,000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது. 


டிஜிட்டல் கைதுகள் என்றால் என்ன? 


போலிஸ் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள், அவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்டவர்களை அழைக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்பின் மூலம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர், பாதிக்கப்பட்டவரை பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தி கைது செய்வதைத் தவிர்க்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பவங்களைப் புகாரளிப்பதற்கும் இழப்பீடு பெறுவதற்கும் செயல்முறையை எளிதாக்குவதற்கு கணிசமான சீர்திருத்தங்கள் தேவை என்று பாராளுமன்றக் குழு அறிக்கை கூறியது. 59வது அறிக்கையில் (17வது லோக்சபா) 'சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர்/ ஒயிட் காலர் கிரைம் அதிகரித்து வரும் சம்பவங்கள்' என்ற தலைப்பில் உள்ள பரிந்துரைகள் மீது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற தலைப்பில், சைபர் குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் மறுசீரமைப்பு வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் விரிவான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க அறிக்கை முன்மொழிந்தது. .



Indian banks reported over 23,000 cybersecurity incidents in 2023: Government to Parliament


India saw 23,158 banking cybersecurity incidents in 2023, including phishing, hacking, and malware attacks. Cyber frauds like stock trading scams (₹4,636 crore) and digital arrests (₹1,000 crore) are rising threats, prompting calls for improved reporting and victim support mechanisms.


The government told Parliament on Wednesday, December 18, that the Indian banking system experienced 23,158 cybersecurity incidents in 2023. While this is significantly lower than the 1.22 lakh incidents reported during the height of the COVID-19 pandemic in 2021, it's still a cause for concern.


The government, citing data available with the Indian Computer Emergency Response Team (CERT-In), said there were 39 attempts to hack a bank's website and 401 phishing attempts last year. 


The incidents reported cover a wide range of attack vectors, including viruses, phishing, network scanning & probing and website hacking. 


This year has seen the rise of new cybersecurity threats, such as stock trading scams, digital arrests, Customs fraud, and more.


According to data from the Indian Cybercrime Coordination Centre (I4C), in the first nine months of 2024, a whopping ₹4,636 crore was siphoned out of people's bank accounts in stock market trading scams, making it the most widespread type of cyber fraud.


Digital arrests, meanwhile, have defrauded Indians of over ₹1,000 crore in the first nine months of 2024. What are digital arrests? Scamsters posing as police or law enforcement officials call potential victims, alleging that they (the victims) have been implicated in a serious crime. The fraudsters then insist that they connect over a video call, forcing the victim to pay up and avoid arrest.


Earlier this month, a Parliamentary panel report called for substantive reforms to simplify the process for victims of cyber fraud to report incidents and seek compensation. Titled Action Taken by the Government on Recommendations Contained in 59th Report (17th Lok Sabha) on the Subject ‘Cyber Security and Rising Incidence of Cyber/White Collar Crime’, the report proposed establishing an overarching regulatory body to address cybercrime and improve victim recourse mechanisms.


Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' - தொழிலதிபரை மிரட்டி 7 கோடி பணம் பறித்த கும்பல்

 


Cyber Crime: 'போலியான சுப்ரீம் கோர்ட், நீதிபதி, போலீஸ்' - தொழிலதிபரை மிரட்டி 7 கோடி பணம் பறித்த கும்பல்


ஆன்லைன் மோசடி கும்பல்கள் புதிய புதிய வழிகளில் பொதுமக்களிடம் தங்களது வேலையைக் காட்டி வருகின்றன. சமீபகாலமாகப் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களை யாரிடமும் பேசவிடாமல் தடுத்து, அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாகப் பிடுங்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.


இம்மோசடி கும்பலிடம் நன்றாகப் படித்தவர்கள் கூட ஏமாந்து விடுகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, போலீஸார் எனப் பயமுறுத்தி பணத்தைப் பறித்து விடுகின்றனர். டெல்லியைச் சேர்ந்த எஸ்.பி. ஓஸ்வால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் வரதனுக்கு (82) நேற்று முன்தினம் ஒருவர் போன் செய்து பேசியிருக்கிறார். போனில் 9வது நம்பரை அழுத்தவில்லையெனில் உங்களது போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் வர்தன் தனது போனில் 9வது நம்பரை அழுத்தியிருக்கிறார்.


உடனே ஒருவர் வர்தனிடம், தான் மும்பை கொலாபாவில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு போன் இணைப்பு பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு உங்களது பெயரில் கனரா வங்கியில் ஒரு கணக்கு இருப்பதாகவும், அதனை பணமோசடிக்குப் பயன்படுத்தி இருப்பதாகவும் போனில் பேசிய நபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் வர்தன் தனக்கு கனரா வங்கியில் எந்த கணக்கும் கிடையாது என்று மறுக்க, உடனே போனில் பேசிய நபர் உங்களது பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கானது ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய நிதிமோசடிக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.


தொழிலதிபர் தனக்கு கனரா வங்கியில் கணக்கு இல்லை என்றும், நரேஷ் கோயலை தெரியாது என்றும், தான் இதற்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து இருப்பதால் அப்போது கொடுக்கப்பட்ட ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.


"வங்கிக் கணக்குத் திறக்க உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளதால் உங்கள் மீது சந்தேகப்படுகிறோம். எனவே விசாரணை முடியும் வரை நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள். யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது. இது தேசியப் பாதுகாப்போடு தொடர்புடைய விவகாரம் என்பதால் இது குறித்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது" என்று பயமுறுத்தியிருக்கின்றனர்.



வரதன்



அதோடு யாரிடமாவது பேசினால் 3 முதல் 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் மிரட்டியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, ராகுல் குப்தா என்பவர் வீடியோ காலில் வந்து, தான் தலைமை விசாரணை அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியிருக்கிறார். அத்தொழிலதிபரிடம் அவரது இளமைக் காலம், சொத்து போன்ற விபரங்களைக் கேட்டிருக்கிறார். உடனே தனது மேலாளரிடம் கேட்டால்தான் சொத்து மதிப்பு தெரியும் என்று தொழிலதிபர் தெரிவித்திருக்கிறார். விசாரணை அதிகாரிகள் அனைவரும் சிவில் டிரஸில் இருந்தனர். ஆனால் கழுத்தில் அடையாள அட்டைகளைத் தொங்க விட்டிருந்தனர். அதில் மும்பை காவல்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அடையாள அட்டைகள் இருந்தன. அவர்கள் நீதிமன்றம் அறை ஒன்றைக் காட்டியிருக்கின்றனர்.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் போன்ற ஒருவரைக் காட்டி விசாரணை என்ற ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்தவர் தொழிலதிபருக்குக் கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறார். அதோடு 7 கோடியை உடனே செலுத்தும்படி கூறி கைது வாரண்ட் மற்றும் பணத்தைச் செலுத்துவதற்கான உத்தரவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் அனுப்பிய ஆவணங்களில் உச்ச நீதிமன்றம் முத்திரை இருந்திருக்கிறது. இதையடுத்து வர்தன் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.


அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே இது குறித்து தொழிலதிபர் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை, உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு ரூ.5.25 கோடியை முடக்கினர். இம்மோசடி தொடர்பாக செளதரி மற்றும் ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாமைச் சேர்ந்த ஆனந்த் குமார் தனது வங்கிக் கணக்கை மோசடி கும்பல் பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இம்மோசடியில் தொடர்புடைய எஞ்சியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Creating awareness among parents about money fraudsters through whatsapp number - DSE Proceedings, Dated : 07-10-2024...


பெற்றோர்களின் whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபடுவோர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 07-10-2024...



To create awareness about fraudsters who are involved in extorting money by contacting parents on whatsapp number - Proceedings of the Joint Director of School Education, Dated : 07-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Fraudulent calls to offer education scholarships - Parents beware...

 


கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள் - பெற்றோர்களே கவனம்...


Fraudulent calls to offer education scholarships - Parents beware...


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவியின் தந்தையை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

அவர் தான், கல்வித்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகளுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் நிதியாக 28 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதற்காக ஜி-பே, ஃபோன் பே விவரங்களையும் கேட்டுள்ளார். எனினும், அந்த நபரிடம் பிடிகொடுக்காமல் பேசிய மாணவியின் தந்தை, அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

29.09.2024


12 கோடி பண மோசடி வழக்கில் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் கைது...



 12 கோடி பண மோசடி வழக்கில் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் கைது...


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சித்ரா 12 கோடி  பண மோசடி வழக்கில் தர்மபுரி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவருடைய கணவர் செல்வம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேர் கைது.


சி.சித்ரா, BEO வருகிற July-2025-ல் ஓய்வு பெறவுள்ள நிலையில்...


தனியார் பள்ளி ஆரம்பிக்க பல ஆசிரியர்களிடம் கோடிக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி, அது தொடர்பான நிதி மோசடி வழக்கில் தர்மபுரி Economic Wing காவல்துறையினரால் நேற்று இரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்...


New type of scam using Google Pay app - Police advise to be careful...

 



கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி புதிய வகை மோசடி - கவனமாக இருக்க காவல்துறை அறிவுரை...


New type of scam using G Pay app - Police advise to be careful...




கல்வி உதவித் தொகை மோசடி - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...


  கல்வி உதவித் தொகை மோசடி - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...


திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை...




நிதி மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


நிதி மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...



 ராமநாதபுரத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்...



சென்னையைச் சேர்ந்த நீதிமணி, அவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் `புல்லியன் பின்டெக்' என்ற நிதி நிறுவனம் நடத்தினர். இவர்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடம் 9 சதவீத வட்டி தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெற்றனர்.



இந்நிலையில், 2020 மார்ச் முதல் முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகைக்கு வட்டித் தொகை வழங்கவில்லையாம். இதையடுத்து, ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன், காரைக்குடி ஆசிரியை கற்பகலில்லி ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.



அதன்பேரில், ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, நீதிமணி, ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த வழக்கில் தலைமை முகவர்களாகச் செயல்பட்டு, பணமோசடியில் ஈடுபட்டதாக கும்பரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.ஆரோக்கிய ராஜ்குமார் (45), ராமநாதபுரம் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் சி.முருகவேல் (42) ஆகியோரை கடந்த 17-ம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.



மேலும், மதுரை தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, கடந்த 2 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டு கைதான ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார், ஆசிரியப் பயிற்றுநர் முருகவேல் ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...

 


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...


அதன்படி நாங்கள் மாணவர்கள் கொடுக்கும் ஸ்டாம்புகளை விண்ணப்பத்துடன் இணைத்து, சாதாரண தபாலில் அனுப்புகிறோம். மேலும் விவரங்களுக்கு 93194 85303 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘sub code M2A5R004’ என்று குறிப்பிட்டு தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு www.pcoi.org.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் அந்த விண்ணப்பத்தில், மாணவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தந்தையின் தொழில் உள்ளிட்டவைகளுடன் 10 ஐந்து ரூபாய் அஞ்சல் தலைகளை இணைக்கச் சொல்லி குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் குறிப்பிடும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டால், தொடர்பு செல்லவில்லை. அவர்கள் குறிப்பிடும் இணையதள முகவரியும் தவறாகவே இருந்தது. மாணவர்களிடையே தேவையற்ற ஒரு ஆசையைத் தூண்டி, அவர்களை அலைக்கழிப்பதாகவே இதை உணர முடிந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் இதுபற்றி கேட்ட போது, “தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலரை விட்டு உடனே விசாரிக்க சொல்கிறேன்’‘ என்று தெரிவித்தார்.


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே இந்த 5 ரூபாய் அஞ்சல் தலை மோகம் இருந்து வரும் நிலையில், இவர்கள் குறிப்பிடுவது போல் எந்த ஒரு மாணவரும் ‘டேப்லெட் பிசி’ பெற்றதாக இதுவரையில் தகவல் இல்லை. 



மொத்தத்தில், ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடையே ஆசை காட்டி, அவர்கள் சார்ந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை ஏதோ ஓரு அமைப்பு திரட்டி வருவது உறுதியாகிறது. இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு, குறிப்பிட்ட இணையவழி கல்வியில் சேர ஆசை காட்டலாம். அடுத்த உயர்கல்விக்கு அணுகும் ஏஜென்சிகள் மாணவர்களின் இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.



தனியார் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பப்படிவ மாதிரி.



கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில், பொதுமக்களின் முழு விவரங்கள் திரட்டப்பட்டு, எப்படி வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு பணமாக்கப்படுகிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கும். அதுபோலவே மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “எல்லாம் சரி.. தரமான தனியார் பள்ளிகள் இதற்கு ஏன் உடன்பட வேண்டும்? இதுபோல மாணவர்கள் தன்னிச்சையாக செய்வதை அறிந்தால், பள்ளிகளே ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டி மாணவர்களை நல்ல முறையில வழி நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களே இதை ஏன் ஊக்குவிக்குகின்றனர்?” என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.


தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.99,999 மோசடி (Fraud of Rs.99,999 from the joint account of Dayanidhi Maran and his wife)...

தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.99,999 மோசடி (Fraud of Rs.99,999 from the joint account of Dayanidhi Maran and his wife)...


தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து மோசடி என புகார்


தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார்


ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல்




OUR PRIVATE DATA IS NOT SAFE IN Digital India!

On Sunday, ₹99,999 was stolen from my AxisBank personal savings account through a net banking transfer via IDFCFIRSTBank-@BillDesk, bypassing all normal safety protocols.

An OTP, the standard protocol for such transactions, was neither generated nor received by my linked mobile number. Instead, a call was made to the account's joint holder - my wife's number and the fraudsters had the gall to ask if the transaction had taken place. They pretended to be from the bank but had cbic_india on their display picture. This confirmed my suspicions and I immediately proceeded to block all activities on my account.

What puzzles me is how they accessed personal information and breached security protocols with such ease. This wasn't a phishing attack nor were any sensitive details divulged. @AxisBank was clueless as to how the attack had happened nor could they give any solid explanation for why the OTP was not required from my number for the transaction to take place.

If this can happen to someone who is aware of tech and cautious with private data, what about first-time digital users and senior citizens? Is anyone's data safe?

In the past, I've written to Hon’ble FM Tmt.nsitharaman and FinMinIndia seeking help for cybercrime victims in my capacity as an MP. Today, as a victim, I demand accountability & justice.

Financial fraud accounted for 75% of cybercrimes in India from Jan 2020 to June 2023 says Hindustantimes. Reports of sensitive Aadhaar data being sold emerged as early as 2018. Banks’ data breaches & ransomware attacks have become regular news.

For India to excel in the digital world or to emerge as a FinTech hub, we need robust security and government action. What action is the government taking to protect our private data?
Will FinMinIndia & FM release a white paper on this? We need answers and we need them now.






🍁🍁🍁 நீட் ஆள்மாறாட்டம் - 10 மாணவ மாணவியரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - கைவிரித்த ஆதார்...

 


கடந்த பிப்ரவரி மாதம், நீட் தேர்வில் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்து பல்வேறு மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தனர்

தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா, தனது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் மூலமாக இந்த முறைகேடு விவகாரம் அம்பலமானது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் சிக்கிய உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியானது./ மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஆள்மாறாட்டம் - 10 பேர் யார் யார்?

இதனைத் தொடர்ந்து சென்னை மாணவர்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இர்பான், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தேர்வு எழுதாமல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்காக தேர்வு எழுதிய மாணவர்கள் யார்-யார்? என்பது தெரியவில்லை.

நெருங்க முடியவில்லை 

நீட் தேர்வு நுழைவு சீட்டில் ஒட்டப்பட்டிருந்த போட்டோக்களை கைப்பற்றிய போலீசார் அந்த போட்டோக்களை வெளியிடாமலேயே அவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் ஆனால் மோசடியாக தேர்வு எழுதியவர்களை நெருங்க முடியவில்லை.

10 மாணவர்கள் புகைப்படம் வெளியீடு

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி மாலையில் நீட் தேர்வை முறைகேடாக ஆள் மாறாட்டம் மூலம் எழுதியவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். 2 மாணவிகள் மற்றும் 8 மாணவர்களின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டதுடன் அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர். இதற்காக 9443884395 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர். போட்டோவில் இருப்பவர்களை தேடி கண்டு பிடிக்க வெளி மாநிலங்களிலும் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

பல்வேறு மாநிலங்கள் - ஆதாருக்கு அனுப்பி வைப்பு

டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சில நீட் தேர்வு மையங்களிலேயே ஆள் மாறாட்டம் செய்து 10 பேரும் தேர்வு எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டை முடுக்கி விட்டுள்ளனர். ஆதார் மையங்களில் இவர்களின் புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

கைவிரித்த ஆதார் - விவரங்கள் இல்லை

இந்நிலையில் நீட் தேர்வில் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை வைத்து அவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...