வனச்சரகர் பணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண்களை வெளியிட,
அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஐகோர்ட், நீதிபதி
நாகமுத்து பிறப்பித்த இடைக்கால உத்தரவு: அரசின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து
கொள்ள, மக்களுக்கு உரிமையுள்ளது. நாட்டின் பாதுகாப்பு பற்றிய தகவல்
மற்றும் தடை செய்யப்பட்ட தகவல் தவிர, மற்றபடி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
வெளிப்படையாக தகவல்கள் அளிப்பதன் மூலம், ஊழல், முறைகேடு, சாதகமாகச் செயல்படுவது போன்றவை தடுக்கப்படும்.
தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் உரிமை, அடிப்படை உரிமை.
சில உரிமைகள், நியாயமான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எனவே, எழுத்துத்
தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட வேண்டும்.
கட்-ஆப் மதிப்பெண்களையும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களையும்
வெளியிட வேண்டும். வரும், 17ம் தேதிக்குள் இந்த நடவடிக்கைகளை பூர்த்தி
செய்ய வேண்டும்.
மறுஉத்தரவு வரும் வரை, இறுதி பட்டியலை வெளியிடக் கூடாது. இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்