கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>1869 பள்ளிகளில் சுற்று சூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46. 72 லட்சம்

தமிழகத்தில் 1869 பள்ளிகளின், சுற்றுச்சூழல் மன்றத்தை பராமரிக்க, தலா 2500 ரூபாய் வீதம், 46 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைப்படை இல்லாத பள்ளிகளில் மட்டுமே சுற்றுச்சூழல் மன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பராமரிப்பிற்காக 1250 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், கூடுதலாக தலா 140 பள்ளிகளில், சுற்றுச் சூழல் மன்றம் அமைக்கவும், அதன் பராமரிப்பு செலவை 2500 ரூபாயாக உயர்த்தி, சுற்றுச் சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 59 பள்ளிகளின் பராமரிப்பிற்காக, ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, உலக வெப்பமய மாக்கலை தடுக்க,மரக்கன்று, மூலிகை தோட்டங்களை உருவாக்கவும், இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சருடன் TETOJAC பேச்சுவார்த்தை தகவல்

அமைச்சருடன் டிட்டோஜாக் பேச்சுவார்த்தை தகவல் டிட்டோஜாக் பேரமைப்பின் பேச்சு  வார்த்தையின் இறுதியில் கல்வி அமைச்சர் நமது கோரிக்கைகளை சார்ந்து உ...