கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொருளாதாரத்தில் பிந்தங்கிய இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழில் குறித்த திறன் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெற உள்ளன.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு இந்த இலவச  பயிற்சி வழங்கப்படுகிறது. மொபைல் சர்வீசிங், வெப் டிசைனிங், நெட்வொர்க் & செக்யூரிட்டி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 55 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 735  எம்.எல்.ஏ கட்டடம், 3வது தளம், அண்ணா சாலை, சென்னை எனும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
முதல்வர், ராஜீவ் காந்தி நினைவு தொலைத் தொடர்பு பயிற்சி நிலையம் , ஜி.எஸ்.டி. சாலை, மீனம்பாக்கம், சென்னை - 16 எனும் முகவரியில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்ற முகவரிக்கு கொண்டு சேர்க்க வேண்டும். www.rgmttc.bsnl.co.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 2524 1002 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...