கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:155 மாவட்டங்களில் துவக்கம்

"கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது,'' என, மத்திய, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது:நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கே.வி., பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்; 60 இடங்களில், பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.கே.வி., பள்ளிகள் கட்டுவதில், தனியாருடன் இணைந்து செயல்படலாம் என, இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது.பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு, இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம்.இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Senthamil Nattu Thamizhachi naan - Jaikka pirantha Thamizhachi naan - TN Govt Women's Day Song

 செந்தமிழ் நாட்டுத் தமிழச்சி நான்... ஜெயிக்கப் பிறந்த தமிழச்சி நான் - தமிழ்நாடு அரசின் மகளிர் தின பாடல் Senthamil Nattu Thamizhachi naan - J...