கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 2 தனித்தேர்வு: 32.10 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 தனித்தேர்வில், 32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 17, 18 மற்றும் 19ம் தேதிகளில், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெறலாம்.
அக்டோபரில் நடந்த தனித்தேர்வை, 47,387 பேர் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இணையதளத்தில், நேற்று வெளியானது. துறை வட்டாரத்தினர் கூறுகையில், "32.10 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றனர். அதாவது, 15,212 பேர், தேர்ச்சி பெற்றனர்" என, தெரிவித்தனர்.
"தத்கல்" திட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியருக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் செய்ய, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோருவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Controversial comment on girl sexual abuse - District Collector change

சிறுமி பாலியல் வன்புணர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம் Controversial comment on girl rape - Mayilad...