கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிகளில் அட்சய பாத்திரம்: மாணவர்கள் பங்களிப்புடன் வைக்க உத்தரவு

மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், பள்ளிக்கூட சத்துணவு மையங்களில், அட்சய பாத்திரம் வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் தினமும், ஒரு காய் வீதம் அதில் போடவும், மறுநாள் அதை சமையலுக்கு பயன்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களிடம், சமுதாய ஏற்றத் தாழ்வு நிலவுவதாக, புகார் எழுந்தது. இதை களையும் வகையில், மாணவர்களின் பங்களிப்போடு, சமையல் மேற்கொள்ளும் நோக்கில், கடந்தாண்டு, "அட்சய பாத்திரம்" திட்டத்தை, முதல்வர் அறிவித்தார்.
ஒரு சில பள்ளிகள் மட்டும், சில நாட்களுக்கு இதை செயல்படுத்தின. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், சத்துணவில் புதிய உணவு வகை அமல்படுத்தப்பட உள்ளது. இதில், வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத் உட்பட, 13 வகையான கலவை சாதம் மற்றும் ஐந்து வகை சுவையில், முட்டை இடம் பெறுகிறது.
சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால், அரசு ஒதுக்கும் நிதிக்குள், தரமான உணவு வழங்குவதில் சிரமம் இருப்பதாக, பணியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசு சார்பில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் இடையே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், சத்துணவு மையங்களில், "அட்சய பாத்திரம்" திட்டம் அமல்படுத்த வேண்டும்; அந்தந்த பள்ளிகளின் சத்துணவு மையங்களில், இதற்காக பாத்திரம் வைக்க வேண்டும்.
மாணவர்கள், தினமும் வீட்டில் இருந்து, ஏதேனும், ஒரு காய் கொண்டு வந்து, இதில் போட வேண்டும். மறுநாள் சத்துணவு சமையலுக்கு, அதிலுள்ள காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில், எந்த மாணவர், என்ன காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல், ரகசியமாக வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "அடுத்த வாரம் முதல், அனைத்து பள்ளிகளிலும், "அட்சய பாத்திரம்" கட்டாயம் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, அறிமுகப்படுத்தும் புதிய உணவு வகைக்கு, இத்திட்டம் ஏற்றதாக இருக்குமா என்பது தெரியவில்லை"என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Ramadan Fasting Commencement Date - Chief Haji Notification of Tamilnadu Govt

ரமலான் நோன்பு தொடங்கும் நாள் - தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு Ramjan Fasting Commencement Date - Chief Haji Notification of Tamilnadu...