கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தில் பதிவு மேற்கொள்ள பணியாளர் நியமனம்

சென்னையில் உள்ள, "டேட்டா சென்டர்' அலுவலகத்தில், "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், 20 பேர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சென்னை, கோட்டூர்புரத்தில், அரசு தகவல் தொகுப்பு விவர மையம் - டேட்டா சென்டர், இயங்கி வருகிறது. நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இந்த மையம் இருந்தாலும், முழுக்க முழுக்க, கல்வித்துறை தொடர்பான பணிகள் தான் நடந்து வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் மதிப்பெண்களை, கம்ப்யூட்டரில் தொகுத்து, தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணி, இந்த மையத்தில் தான் நடக்கிறது. இந்தப் பணிகளுக்காக, 40, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பணியிடம் ஒதுக்கியும், தற்போது, ஐந்து பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மற்ற நிலைகளிலும், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. டேட்டா சென்டரின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக, துறை வட்டாரத்தினர், வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், 20 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை, தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்து கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பிளஸ் 2 தேர்ச்சியுடன், தட்டச்சு தகுதி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்கப்படும்; இவர்களுக்கு, மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-03-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை கு...