கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அக்.15 முதல் பள்ளிகள் திறக்கலாம்; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்...

 கரோனா காரணமாகக் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் மூடப்பட்ட பள்ளிகளைத் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வைக் கடந்த செப்.30-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதில் அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியப் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமுடியும்.

* மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* பாடம் கற்க ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

* பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், கழிப்பறைகள், பிற அறைகள், வளாகம் மற்றும் உபகரணங்களை முறையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

* எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

* என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.

* அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உள்ளிட்ட செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.

* வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டு வருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

* பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.

* பள்ளியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Indian Coast Guard Recruitment 2025

Indian Coast Guard Recruitment 2025 வேலைவாய்ப்புகள் - Job Notification  ✅ Official Notification வெளியானது    ✅ காலி இடங்கள்: 300 Navik (GD ...