கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.10.2020 (வியாழக்கிழமை)...

🌹தேவை இல்லாமல் பேசுவதை விட

அமைதியாகவே இருந்து விடலாம்

நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.!

🌹🌹கடந்து வந்த பாதையை திரும்பி ஒருமுறை பார்த்தேன் 

அதில் வலிகளை தந்தவர்களை விட 

வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர்களே அதிகம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌹வாழ்த்துக்கள்🌹

திரைப்பட இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு " படத்திற்கு மத்திய அரசின்  தேசிய விருது கிடைத்துள்ளது.

இதன் மூலம் தேசிய விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது !எங்கள் இயக்குனர், நன்பர், பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்                      📕📘பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம் 

👉ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன் , பாடநூல் கழக செயலராக மாற்றம்.

👉பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனராக நியமனம்

👉திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக பதவி உயர்வு.

📕📘 5-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்து தமிழ் திசை நாளிதழ் "விழிப்பான இந்தியா, வளமான இந்தியா" என்னும் தலைப்பில் நடத்தும் நிகழ்நிலை வினாடி வினா(Online Quiz). பதிவு செய்து கொள்ள கடைசி தேதி: 23-10-2020

📕📘கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி., படிப்புகளுக்கு இணையவழி நுழைவுத்தேர்வு 27-10-2020 அன்று நடைபெறுகிறது.

📕📘 DSE Proceedings - 10.03.2020 க்கு முன்னர் அதாவது 09.03.2020 வரை உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

📕📘பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற மானிய உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசின் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துதல் - பல்கலைக்கழக மானியக் குழு கடிதம் வெளியீடு.

📕📘பள்ளிக் கல்வி - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (Special Incentive) - 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

📕📘பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 2020ஆம் ஆண்டு பொதுப்பேரவை கூட்டம் நடத்த நிபந்தனைகளோடு அனுமதி & உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகையினை ECS மூலமாகவே வழங்க வேண்டும் - பதிவாளர் சுற்றறிக்கை வெளியீடு.

📕📘 மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வில் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டில் நெல்லை ஆசிரியை மாநில அளவில் முதலிடம்.

📕📘NEET தேர்வு முடிவுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை: தேசியத் தேர்வுகள் முகமை விளக்கம்

📕📘DSE - பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத் தொகை திட்டம் (Special Incentive) - 2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள், சமூகநலத்துறை மற்றும் கள்ளர்(ம) சீர்மரபினர் நலத்தறை பள்ளிகள் - 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு | பயிலும் மாணவ/மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் - சிறப்பு ஊக்கத் தொகை தொகை வழங்குதல் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்-தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘பள்ளிக்கல்வி - அரசு, நகராட்சிமற்றும் அரசுஉதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - அனைத்துவகை ஆசிரியர்கள் - 09.03.2020-க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள் - ஊக்கஊதிய உயர்வுபெறாதவர்கள் - விவரங்கள்கோருதல்-சார்ந்து - தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. நாள்:21.10.2020

📕📘பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கு முழு அதிகாரம் - சென்னை உயர் நீதிமன்றம்.                                   

📕📘ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு:-

👉ஒற்றைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும், இரட்டை படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும். அதுவும் காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்பிறகு சூழலை மதிப்பிட்டு டிசம்பரில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அந்த நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

📕📘சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற பார்வையற்ற மதுரைப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் மறுப்பு: மத்திய அரசுக்கு நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ்:-

👉சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பணி ஒதுக்கீட்டுப் பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் எம்.பூரணசுந்தரி (25). இவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. 2019-ல் 4-வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இவருக்கு ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி- வருமான வரி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரண சுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ''ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னை விடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது'' எனப் பூரணசுந்தரி கூறியிருந்தார்.

இந்த மனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டனர்.

பின்னர், 2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து 25.09.2020-ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்குத் தீர்ப்பாயம் ஒத்தி வைத்தது.              

 📕📘அரசுபள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்டநிபுணர்-களிடம்  ஆலோசனை கேட்டுள்ளார் ஆளுநர்.

📕📘தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த முடிவெடுக்க வரும் 28 ஆம் தேதி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளோடு முதல்வர் ஆலோசனை

📕📘மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வடகிழக்கு மாநிலங்களை நோக்கி நகரும்

📕📘அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் திரு ஜோ பிடன் ஆகியோருடைய இறுதி கட்ட விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

📕📘இனி TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்.. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு:

👉தேசிய ஆசிரியர் கல்விக் குழும பொதுக்குழு அதிகாரிகளின் (General body of NCTE) கூட்டம், டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

👉இக்கூட்டத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் திருத்தம் செய்து, ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அதற்கான சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

👉இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் டெட் தேர்வை எழுதுவோருக்கு மட்டுமே ஆயுள் சான்றிதழ் என்றும், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி, பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

👉தமிழ்நாட்டில் 80,000 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வரும்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📕📘ஒத்த செருப்பு சைஸ்-7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

📕📘நீட்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வெழுதி மருத்துவராகலாம்; தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது

- அமைச்சர் செங்கோட்டையன்

📕📘கொரோனா தடுப்பு மருந்து பெறுவதற்கு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை கட்டாயமல்ல

 - சுகாதாரத்துறை அமைச்சகம்

📕📘மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்

👉மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஸ்டாலின் கடிதம்

👉7.5% உள் ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் - ஸ்டாலின்

📕📘30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஓப்புதல்.

📕📘நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏதுவாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள UGC உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். 

📕📘நடிகர் விஜய்சேதுபதி இன் மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது. இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு.

📕📘மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம்  மாநிலங்களில் பெய்த மழையே வெங்காயத்தின் விலை உயர்விற்கு காரணம்  

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இறக்குமதியை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.        -மத்திய அரசு                                                                                                     📕📘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. 

சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறையை மாற்றப்பட்டுள்ளது. 

📕📘தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இரண்டு ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இது 3 ஆண்டாகவோ, அல்லது நிரந்தரமாகவோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . 

📕📘இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. 

📕📘மாற்றுப்  பணியில் பணி புரியும் அனைத்துவகை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க கன்னியாகுமரி மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

📕📘ஆந்திராவில் (Andhra Pradesh) பள்ளிகள் நவம்பர் 2 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

📕📘பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் 2020 ஆம் ஆண்டு பொதுத் பேரவை கூட்டம் நடத்த நிபந்தனைகளோடு அனுமதி - & உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகையினை ECS மூலமாகவே வழங்க வேண்டும் சென்னை  துணைப்பதிவாளர் சுற்றறிக்கை

📕📘வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

👉வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

👉 வேளாண் சட்டங்கள் அமலானால், பதுக்கல் அதிகரித்து விலை எவ்வளவு வேண்டுமானாலும் உயரும். வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்துள்ளார்.                  

 📕📘தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம்.

விதிமுறைகளை மீறும் வேட்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை - தேர்தல் ஆணையம் கடிதம்.

📕📘2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளியில் முதலிடம் பிடித்த சென்னை மாணவர் சாய் அக்ஷய், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றது எப்படி?, ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் மருத்துவக்கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கை என்று தெரிவித்துள்ளார்.                                                                             

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine

புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 இதழ் - Puthu Oonjal - 01-15 November 2024 Magazine   புது ஊஞ்சல் - புது ஊஞ்சல் - 01-15 நவம்பர் 2024 மாதமிரு...