கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கம்யூட்டேசன் (Commutation) என்றால் என்ன?

 ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் , உள்ளாட்சி பணியாளர்கள் தாங்கள் பெற இருக்கும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை ஒப்புவிப்பு செய்து அதனைத் தொகுத்து ஒட்டுமொத்தத் தொகையாக பெற்றுக் கொள்வதே கம்யூட்டேசன் ஆகும். இவ்வாறு பெறும் கம்யூட்டேசன் தொகை வட்டியும் முதலுமாக 15 ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. 

கம்யூட்டேசனின் கடந்த கால கதை 

ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் 1925 ம் ஆண்டில் சிவில் ஓய்வூதியர்கள் (தொகுப்பு) விதிகளின்படியும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மெட்ராஸ் சிவில் ஓய்வூதியர்கள் (தொகுப்பு) விதிகளின் படியும், கம்யூட்டேசன் வழங்கப்பட்டது. அப்போது ஓய்வூதியத்தில் 50 சதவீதம் வரை ஒப்புவிப்பு செய்து ஒட்டுமொத்த தொகை பெறும் நிலை இருந்தது . அவ்வாறு 50 சதவீதம் ஒப்புவிப்பு செய்த பின்னர் எஞ்சியுள்ள 50 சதவீதம் மட்டுமே தமது வாழ்நாள் முழுவதும் பெறும் ஓய்வூதியமாக இருந்து . பின்னர் அரசாணை 242 நிதி (ஒய்வூதியம்), நாள்:01.04.1981ன் படி கம்யூட்டேசன் செய்த தொகை அசல் வட்டியுடன் 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் முடிவற்றதும் முழு ஓய்வூதியம் பெறும் ( Restoration ) முறை நடைமுறைக்கு வந்தது .

 1950 ம் வருடத்திய தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகளின்படி கம்யூட்டேசன் செய்யும் தொகை 50 சதவிதத்தில் இருந்து ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்றாயிற்று . 1998 ம் ஆண்டில் இது 40 சதவீதம் என்று அதிகரித்தாலும் கூட 2003 ல் மீண்டும் மூன்றில் ஒரு பகுதி என்ற முறை மீண்டும் அமுலுக்கு வந்தது . 01.12.1963 முதல் ஓய்வூதியர் கம்யூட்டேசன் செய்யும் தேதியில் உள்ள அவரது வயதின் அடிப்படையில் ஒப்படைப்பு செய்து பெறும் தொகையினை கணக்கிடக் காரணி ( Factor ) கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு அந்த அட்டவணையின்படி கம்யூட்டேசன் தொகை வழங்கும் முறை வந்தது . 01.12.1953 முதல் அமுல்படுத்தப்பட்ட அட்டவணை ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டு 01.5.2009 முதல் புதிய அட்டவணை அமலுக்கு வந்து, அதுவே தற்போது நடைமுறையில் உள்ளது .

 கம்யூட்டேசன் கணக்கிடும் முறையும் திருப்பி செலுத்தும் காலமும் 

1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் . 318 நிதித் (ஓய்வூதியம் ) துறை, நாள் . 23.7.2009 ன்படி தயாரிக்கப்பட்ட அட்டவணையின்படி வயது 20 முதல் வயது 81 வரையில் உள்ளவர்கள் ஓய்வூதியத்தினை கம்யூட்டேசன் செய்வதற்கான காரணிகள் உள்ள திருத்திய அட்டவணையினை வெளியிட்டுள்ளது . இதன்படி 58 வது வயதில் ஓய்வு பெறும் ஒருவர் கம்யூட்டேசன் பெறுவதற்கான காரணி 8.371 ஆகும். அதாவது கம்யூட்டேசன் பெறப்படும் அசல் தொகை சற்று ஏறக்குறைய 8 வருடம் 3 மாதத்தில் முடிவடையும் எனக் கொள்ளலாம் . ஓய்வூதியர் அவர் பெறுகின்ற ஓய்வூதியத்தில் அதிகபட்சமாக மூன்றில் ஒரு பகுதியினை மட்டுமே கம்யூட்டேசன் செய்ய முடியும் .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...