கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Commutation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Commutation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விருப்ப ஓய்வு (VRS) கொடுத்தால் ஓய்வூதியம் (Pension) மற்றும் Commutation எவ்வளவு கிடைக்கும்? - கணக்கீடு (Calculation)...


விருப்ப ஓய்வு (VRS) கொடுத்தால் ஓய்வூதியம் (Pension) மற்றும் Commutation எவ்வளவு கிடைக்கும்? - கணக்கீடு (Calculation)...


    

   30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் Full Pension கிடைக்கும். Full Pension என்பது கடைசி மாத ஊதியத்தில் Basic Pay, DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் Health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.


   உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் அடிப்படை ஊதியமும் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100 ஓய்வூதியம் (பென்ஷனாகக்) கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு அதை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100health allowanceஐக் கூட்ட வேண்டும். இது Commutation வேண்டாம் என்பவர்களுக்கு. Commutation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும். அதற்கான விவரம்:


முதலில் Commutation என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும். இது வட்டி இல்லாத கடனல்ல. வட்டி உண்டு.


    30ஆண்டுகளுக்கு  மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.


    அதாவது (30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் அடிப்படை ஊதியம் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய அடிப்படை ஊதியம் 20000ரூபாயாக ஆகிவிடும். இப்போது இவர் Commutation வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.


    அடிப்படை ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும் .பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.


  ஓய்வு பெற்றபின் இவருடைய அடிப்படை ஊதியம் 20000ரூபாய். இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 , இதை


6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040 (எட்டு லட்சத்து நாற்பது) ரூபாய் Commutation கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள். இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டு இதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள். அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும். பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.


   (பென்ஷன் வாங்குபவர் இறந்துவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)


  30 ஆண்டு முடித்த 40000ரூபாய் அடிப்படை ஊதியம் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு 22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம். இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.


   இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.


   ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும். இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33. இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க 


5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும். கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்


18100-5333=12767கிடைக்கும் (18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)


    நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.


   பணியில் உள்ளவர்களுக்குத் தற்போது 46%DA வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கூடிக்கொண்டே வரும்.


   ஆகவே இதை ஒரு உதாரணமாகக் கணக்கில் கொள்ளவும்.


🍁🍁🍁 ஓய்வுக்காலத்தில் பென்ஷனைக் குறைக்கும் கம்யூடேஷன்..! - அரசு ஊழியர்கள் உஷார்!

ஓய்வுக்காலத்தில் பென்ஷனைக் குறைக்கும் கம்யூடேஷன்..! - அரசு ஊழியர்கள் உஷார்!

முகைதீன் சேக் தாவூது . ப (நன்றி : விகடன்.com)


இன்றைக்கு குடும்பச் செலவுக்கு ரூ.20,000 தேவையெனில், 20 ஆண்டுகள் கழித்து ரூ.64,140 தேவை!

பத்து மாதங்களுக்கு முன் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், 10 வருடங்களுக்கு முன், அதே பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த தன் நண்பரிடம், தற்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறீர்கள் என்று கேட்டார்.

மூத்த ஓய்வூதியதாரர் தனது மாதாந்தர ஓய்வூதியத் தொகையைச் சொல்லக் கேட்டதும் சமீபத்தில் ஓய்வுபெற்றவர் மயங்கி விழாத குறை. காரணம், மூத்த ஓய்வூதியதாரர் வாங்கிய தொகை மிக மிக அதிகமாக இருந்தது.

“அதெப்படி? உங்களைவிட இரண்டரை மடங்கு சம்பளம் வாங்கியவன் நான். என்னைவிட 10 வருடத்துக்கு முன் ரிட்டையரான உங்களது மாதாந்தர பென்ஷன் ரூ.4,200 அதிகமாக இருக்கிறதே!’’ என வியப்புடன் கேட்டார். “நீங்கள் என்னைவிட அதிகமாக கம்யூடேசன் தொகை வாங்கியிருப்பீர்கள்… அதற்கான பிடித்தமும் அதிகமாக இருக்கும். எனவே, பிடித்தம் போக நிகர பென்ஷன் உங்களுக்குக் குறைவாக இருக்கும்’’ என்று சொல்ல, இளைய ஓய்வூதியதாரருக்கு தான் செய்த தவறு என்ன என்று புரிந்தது (பார்க்க, கீழே உள்ள அட்டவணை)

அவர் மட்டுமல்ல, ஓய்வுக்காலப் பலனாகக் கிடைக்கப்போகும் பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்ற எந்த நிதித்திட்டமும் வகுக்காமல், வந்த பணத்தை எல்லாம் இஷ்டத்துக்குச் செலவு செய்துவிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஓய்வுக்காலத்தை மன உளைச்சலுடன் நகர்த்திக்கொண்டிருப்போர் பலர். என்ன காரணம் என்று கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

ஓய்வு பலவகை

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறுவது பலவகைகளாக உள்ளன. வயது முதிர்வில் (Superannuation) ஓய்வு, விருப்ப ஓய்வு, உடல் இயலாமை காரணமாகப் பணியில் தொடர முடியாதவர்களுக்கு மருத்துவக்குழு பரிந்துரையின் பேரில் ‘இயலாமை’ ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு.

பணப்பலன்கள் என்னென்ன?

மேற்கண்ட அனைத்து வகை ஓய்வினருக்கும், ஓய்வூதியம் பணிக்கொடை (graduity), பணிக்காலத்தில் சேர்த்து வைத்த விடுப்புக்கான சம்பளம் (leave encash) ஆகியவற்றுடன் ஊழியரின் சொந்த சேமிப்பான பிராவிடன்ட் ஃபண்ட் பணமும் தரப்படுகிறது.

இவை அல்லாமல் ‘வேண்டும்’ என்று விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும் ஓய்வூதிய கம்யூடேசன் தொகை தரப்படுகிறது. அப்படி என்றால் என்ன?

கம்யூடேசன் என்பது என்ன..?

ஓய்வுபெற்ற அரசுப் பணியாளருக்கு மாநிலக் கணக்காயரால் ஏற்பளிக்கப்படும் ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டு, ஒட்டுமொத்தமான (Lumpsum) தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்வதுதான் ஓய்வூதிய கம்யூடேசன். உதாரணமாக, தமிழக அரசில் ஓய்வு பெற்ற ஒருவருக்கு மாநிலக் கணக்காயர் ஏற்பளிப்பு செய்த ஓய்வூதியம் ரூ.30,000 என்றால், அந்த ஓய்வூதியதாரர் தனது ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையான 10,000 ரூபாயை ‘கம்யூட்’ செய்யலாம். அதாவது, முன்கூட்டியே பெறலாம். இது ஓய்வூதியத்தில் 33.33% (மத்திய அரசுப் பணியினருக்கு 40% ராணுவப் பணி ஓய்வினருக்கு 50% வரை கம்யூட் செய்யலாம்) ஆகும்.

ஓய்வு பெறும்போது ஒருவரது வயது 59 எனில், 10,000 ரூபாயை கம்யூடேசன் செய்து அவர் முன்கூட்டியே பெறக்கூடிய தொகை ரூ.10,04,520 ஆகும். அதாவது, ஒன்றுக்கு நூறாகத் தருகிறது அரசு. இது மிகப்பெரிய பரிசு என்றுகூட சொல்லலாம். ஆனால், இது என்றோ கிடைக்க வேண்டிய பணத்தை முன்கூட்டியே பெறுவதுதான்; ஒரு வகை முன்பணம்தான். எவ்வளவு ரூபாய் நாம் கம்யூடேசன் செய்கிறோமோ, அதைப்போல நூறு மடங்கு தொகை தரப்படுகிறது. 180 மடங்கு பிடித்தம் செய்யப்படுகிறது.

பென்ஷனை கம்யூட் செய்து முன்பணமாகப் பெற்று வீடு கட்டலாம் அல்லது நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வங்கி எஃப்.டி-யில் வைத்திருப்பதில் பயனில்லை!

உடனே தொடங்கும் பிடித்தம்

மொத்தத் தொகையான ரூ.10 லட்சத்தை என்றைக்கு பெறுகிறோமோ அன்று முதல் அந்தத் தொகைக்கான பிடித்தம் தொடங்கிவிடும். அதாவது, ரூ.30,000 என்றிருந்த அடிப்படை பென்ஷன் 20,000 ரூபாயாகக் குறைந்துவிடும். தொகை பெற்ற நாளிலிருந்து 180 மாதங்களுக்குப் பிடித்தம் தொடரும். எனவே, தேவை உணர்ந்து பெற வேண்டிய தொகை ‘ஓய்வூதிய கம்யூடேசன்’ ஆகும்.

ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

ஊழியர் ஓய்வுபெறும் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஓய்வூதியம், பணிக்கொடை, பிராவிடன்ட் ஃபண்ட் முதலானவற்றுக்கான விண்ணப்பம் மாநில கணக்காயரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது. எனவே, தனக்குக் கிடைக்கப்போகும் மாதாந்தர ஓய்வூதியம் எவ்வளவு, பணிக்கொடை எவ்வளவு என்பதெல்லாம் அப்போதே ஓய்வு பெறும் ஊழியருக்குத் தெரிந்துவிடும்.

பொதுவான கணக்கு என்னவென்றால், 33 வருடப் பணியை முழுமையாக நிறைவு செய்த ஒருவருக்குப் பணிக்கொடையாக 16.5 மாத சம்பளம் விடுப்புக்கான 11 மாத சம்பளம், பிராவிடன்ட் ஃபண்ட் இருப்பு (சுமார்) 16 மாத சம்பளம் என மொத்தம் 43.5 மாத சம்பளம் கிடைக்கும்.

தற்போதைய நிலையில், நடுத்தரமான ஒரு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஒருவர் ரூ.70,000 அளவில் கடைசிச் சம்பளம் பெறக்கூடும். இந்த சம்பளத்துக்குரிய அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியுடன் சுமார் ரூ.32 லட்சத்தை ஓய்வுக்கால ரொக்கப் பலனாக பெறக்கூடும். இத்துடன் அவரது மாதாந்தர ஓய்வூதியம் 35,000 ரூபாயாக இருக்கும். இந்த ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி, மருத்துவப் படி சேரும்.

நிதி ஆலோசனை கட்டாயம் தேவை

இந்த ரூ.32 லட்சத்துடன் முன்னதாக உள்ள கையிருப்பு, கொடுக்கல் வாங்கல் முதலான விவரங்களை விவரித்து, ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஓய்வுக்கால நிதித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு, நிச்சயமாகப் பணம் தேவைப்பட்டால் மட்டுமே ஓய்வூதிய கம்யூடேசன் பெற விண்ணப்பிக்க வேண்டும். காரணம், இன்றைக்கு குடும்பச் செலவுக்கு ரூ.20,000 தேவை எனில் 10 ஆண்டுகள் கழித்து 35,817 ரூபாயும், 20 ஆண்டுகள் கழித்து 64,140 ரூபாயும் இருந்தால்தான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும். (பணவீக்கம் 6% என்ற கணக்கில்)

ஏனென்றால், முழுமையான பணிக்காலத்தை நிறைவு செய்து முறையாக பிராவிடன்ட் ஃபண்ட் கணக்கைப் பராமரித்துவரும் ஒருவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் தீர்மானிக்கப் படுகிறதோ, அதைப்போல் 100 மடங்கு தொகை பணிக்கொடை, விடுப்பு சம்பளம் மற்றும் பி.எஃப் ஆகியவற்றின் மூலம் ரொக்கமாகத் தரப்படும். இதைவிடவும் கூடுதலாக நிதி தேவைப்படுமேயானால் ஓய்வு பெற்ற ஒருவர் வேறு எவரையும் நாடக்கூடாது என்ற தாராள மனதுடன் தரப்படுவதுதான் ‘கம்யூடேசன்’ என்னும் முன்பணம். அதை அதிக பலன் தரக்கூடிய ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்து தானும் பலன் பெற்று, பிந்தைய தலைமுறைக்கும் விட்டுச் செல்லலாம். உதாரணமாக, இந்தப் பணத்துடன் கொஞ்சம் சொந்தப் பணம், கொஞ்சம் வீட்டுக் கடன் என ஒரு வீடு கட்டி விட்டால், காலத்துக்கும் நாம் அதில் இருந்து கொள்ளலாம். அல்லது சராசரியாக 10 சதவிகி தத்துக்குமேல் வருமானம் தரக்கூடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் (உதாரணம் மியூச்சுவல் ஃபண்ட்) முதலீடு செய்யலாம். மாறாக, ‘கிடைக்கிறதே’ என்பதற்காகப் பணத்தை வாங்கி, வங்கி எஃப்.டி-யில் வைத் திருப்பதாலோ, செலவு செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை. பிற்பாடு மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்படுவது நல்லது.

ஓய்வுக்காலத்தில் வங்கிக் கடன் சரியா?

ஓய்வுக்கால வாழ்வில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், வங்கிக் கடன். ஓய்வூதியம் தரும் வங்கிகள் தனது ஓய்வூதியர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது. இது நல்ல விஷயம்தான். ஆனால், ஓய்வூதியத்தை ஏற்கெனவே கம்யூட் செய்து முன்பணமாகப் பெற்றவர்கள், குறைவான பென்ஷன் தொகையே பெறுவார்கள். இந்த நிலையில், மேலும் கடன் வாங்கினால், அந்தக் கடனைத் திரும்பச் செலுத்த பென்ஷனிலிருந்து இன்னொரு பகுதியைத் தர வேண்டியிருக்கும். ஆக, பென்ஷனாகக் கிடைக்க வேண்டிய பணத்தில் மூன்றில் ஒருபங்குதான் கிடைக்கும். அதாவது, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் ஆறில் ஒரு பங்குதான் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லையெனில், பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே, பென்ஷன் காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டுமா என்பதை நன்கு யோசித்து வாங்குவது அவசியத்திலும் அவசியம்!

🍁🍁🍁 கம்யூட்டேசன் (Commutation) என்றால் என்ன?

 ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் , உள்ளாட்சி பணியாளர்கள் தாங்கள் பெற இருக்கும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை ஒப்புவிப்பு செய்து அதனைத் தொகுத்து ஒட்டுமொத்தத் தொகையாக பெற்றுக் கொள்வதே கம்யூட்டேசன் ஆகும். இவ்வாறு பெறும் கம்யூட்டேசன் தொகை வட்டியும் முதலுமாக 15 ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. 

கம்யூட்டேசனின் கடந்த கால கதை 

ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் 1925 ம் ஆண்டில் சிவில் ஓய்வூதியர்கள் (தொகுப்பு) விதிகளின்படியும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மெட்ராஸ் சிவில் ஓய்வூதியர்கள் (தொகுப்பு) விதிகளின் படியும், கம்யூட்டேசன் வழங்கப்பட்டது. அப்போது ஓய்வூதியத்தில் 50 சதவீதம் வரை ஒப்புவிப்பு செய்து ஒட்டுமொத்த தொகை பெறும் நிலை இருந்தது . அவ்வாறு 50 சதவீதம் ஒப்புவிப்பு செய்த பின்னர் எஞ்சியுள்ள 50 சதவீதம் மட்டுமே தமது வாழ்நாள் முழுவதும் பெறும் ஓய்வூதியமாக இருந்து . பின்னர் அரசாணை 242 நிதி (ஒய்வூதியம்), நாள்:01.04.1981ன் படி கம்யூட்டேசன் செய்த தொகை அசல் வட்டியுடன் 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் முடிவற்றதும் முழு ஓய்வூதியம் பெறும் ( Restoration ) முறை நடைமுறைக்கு வந்தது .

 1950 ம் வருடத்திய தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகளின்படி கம்யூட்டேசன் செய்யும் தொகை 50 சதவிதத்தில் இருந்து ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்றாயிற்று . 1998 ம் ஆண்டில் இது 40 சதவீதம் என்று அதிகரித்தாலும் கூட 2003 ல் மீண்டும் மூன்றில் ஒரு பகுதி என்ற முறை மீண்டும் அமுலுக்கு வந்தது . 01.12.1963 முதல் ஓய்வூதியர் கம்யூட்டேசன் செய்யும் தேதியில் உள்ள அவரது வயதின் அடிப்படையில் ஒப்படைப்பு செய்து பெறும் தொகையினை கணக்கிடக் காரணி ( Factor ) கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு அந்த அட்டவணையின்படி கம்யூட்டேசன் தொகை வழங்கும் முறை வந்தது . 01.12.1953 முதல் அமுல்படுத்தப்பட்ட அட்டவணை ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டு 01.5.2009 முதல் புதிய அட்டவணை அமலுக்கு வந்து, அதுவே தற்போது நடைமுறையில் உள்ளது .

 கம்யூட்டேசன் கணக்கிடும் முறையும் திருப்பி செலுத்தும் காலமும் 

1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் . 318 நிதித் (ஓய்வூதியம் ) துறை, நாள் . 23.7.2009 ன்படி தயாரிக்கப்பட்ட அட்டவணையின்படி வயது 20 முதல் வயது 81 வரையில் உள்ளவர்கள் ஓய்வூதியத்தினை கம்யூட்டேசன் செய்வதற்கான காரணிகள் உள்ள திருத்திய அட்டவணையினை வெளியிட்டுள்ளது . இதன்படி 58 வது வயதில் ஓய்வு பெறும் ஒருவர் கம்யூட்டேசன் பெறுவதற்கான காரணி 8.371 ஆகும். அதாவது கம்யூட்டேசன் பெறப்படும் அசல் தொகை சற்று ஏறக்குறைய 8 வருடம் 3 மாதத்தில் முடிவடையும் எனக் கொள்ளலாம் . ஓய்வூதியர் அவர் பெறுகின்ற ஓய்வூதியத்தில் அதிகபட்சமாக மூன்றில் ஒரு பகுதியினை மட்டுமே கம்யூட்டேசன் செய்ய முடியும் .

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...