கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 15.11.2020(ஞாயிறு)...

🌹யார் ஒருவர் நம் கஷ்டமான நேரங்களில் கூட இருக்கிறார்களோ அவர்களே நம் சந்தோஷமான நேரங்களிலும் கூட இருக்க தகுதியானவர்கள்.!

🌹🌹என்ன தான் உரிமையுடன் நினைத்துப் பழகினாலும்

சில நேரங்களில் நீ யாரோ நான் யாரோ என்று உணர வைத்து விடுகிறார்கள் சில உறவுகள்.!!

🌹🌹🌹சிறிய குறைகள் பெரிதாகி விடுகிறது    அன்பில்லாத இடத்தில்...

பெரிய குறைகள் மன்னிக்கப்படுகிறது அன்பானவர்கள் இதயத்தில் 

புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑கல்வித்துறை மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அலுவலகப் பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி சிஇஓக்களுக்கு இயக்குநர் உத்தரவு

⛑⛑ஒரு பைசா கூட லஞ்சமாக நான் பெற்றது இல்லை: விசாரணையை சந்திக்க தயார் - சூரப்பா பேட்டி

⛑⛑சிறுபான்மையினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்    

⛑⛑அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை திங்கள் கிழமை முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரப்பா மீதான விசாரணையை கலையரசன் மேற்கொள்ள உள்ளார். துணைவேந்தர் சூரப்பா, பல்கலை. பதிவாளர், உயர் அதிகாரிகள் மற்றும் புகார்தாரர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது

⛑⛑அரசு உதவி பெறும் பள்ளியில் படிப்போருக்கும் மருத்துவ சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு கோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

⛑⛑நவோதயா பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; டிச.15 கடைசித் தேதி

⛑⛑வருமான வரி சட்ட திருத்தம் - வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் வருமான வரி சலுகை

⛑⛑12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என  சி.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 

⛑⛑தமிழகத்திலுள்ள கேந்திரிய  வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்துதான் தமிழ் கற்றுகொடுக்கப்படும். அதுவும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்றுக்கொடுக்கப்படும் என்ற உத்தரவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் 

⛑⛑தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 17-ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

⛑⛑சிஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட தேதியில் தேர்வு தொடங்கும் என்று ஐசிஏஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

⛑⛑மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி இடம் ஒதுக்க கோரிய, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவனின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 

⛑⛑தமிழக அரசு இந்த ஆண்டும் 10 , 12 ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

⛑⛑ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் - Staff Fixation - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு - செயல்முறைகள் வெளியீடு.

⛑⛑நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு - கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு.

⛑⛑’அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும்’.. கல்வியாளர்கள் வலியுறுத்தல்

⛑⛑சென்னை கத்திப்பாரா சந்திப்பில் உள்ள ஜவஹர்லால் நேரு திருவுருவ சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மாநில அமைச்சர்கள் திரு. டி. ஜெயக்குமார், திரு. பா. பெஞ்சமின், திரு. க. பாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

⛑⛑மன உறுதியுடன் நாட்டை பாதுகாக்கும், நமது வீரர்களை எண்ணி, இந்தியா பெருமைக் கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் jaisalmer -இல் உள்ள லாங்வாலாவில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

⛑⛑புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு நிதி கிடையாது.

⛑⛑நாட்டில் கோவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 93.5 %-மாக அதிகரித்துள்ளது.

⛑⛑திறமை அடிப்படையில் விரிவாக்கத்திற்கு ஐபிஎல் தயாராகி வருகிறது என நான் உணர்கிறேன். 

இதனால் ஐபிஎல் போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

நிறைய திறமையான வீரர்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். 

நிறைய அணிகள் இருக்கும்போது அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள் என, இந்திய அணி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்

⛑⛑ராகுல் காந்தி குறித்து கருத்து தெரிவித்த ஒபாமாவுக்கு சிவசேனா கண்டனம்.

⛑⛑இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆனந்த், இந்தியாவில் 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்க உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் தமிழகம் 7வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

⛑⛑பாஜகவின் தமிழக பொறுப்பாளராக சி.டி.ரவி நியமனம், கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings

  2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை  பயிலும்‌ மாணவ...