2020 - 2021ஆம் நிதியாண்டில் நாம் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும், வருமானவரி கணக்கீடு செய்ய பழைய முறையை தேர்ந்தெடுப்பதா அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் வருமான வரித்துறை இணையதளத்தில் புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் வருமான வரியை செலுத்துபவரது வயது, அவரது ஆண்டு வருமானம், சேமிப்பு ஆகியவற்றை உள்ளீடு செய்தால் பழைய முறையின்படி அவர் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், புதிய முறையின்படி அவர் எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நொடிப்பொழுதில் கணக்கீடு செய்து காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் பழைய முறையை தேர்ந்தெடுப்பது அல்லது புதிய முறையை தேர்ந்தெடுப்பது - எது சிறந்தது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சுருக்கமாக கூறினால் வீட்டுக் கடன், ஆயுள் காப்பீடு, சேமநல நிதி, பங்கேற்பு ஓய்வூதிய திட்ட நிதி சேமிப்பு கொண்டவர்களுக்கு பழைய முறையும், எவ்வித சேமிப்பும் இல்லாதவர்களுக்கு புதிய முறையில் பலனளிக்கும்.
வருமானவரித் துறையின் இணையதளம் முகவரி...