கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.11.2020 (வெள்ளி)...

 

🌹வேதனை படுத்தியவர்களை 

வேறு வழி இன்றி மறந்து விடலாம்.

ஆனால் அனுபவித்த வேதனையை ஒருபோதும் மறந்து விட முடியாது.!

🌹🌹யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது

என்று நினைப்பவன் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறான்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈7.5% உள் ஒதுக்கீட்டால் நிறைவேறியது

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்

கனவு; முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி

தெரிவித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்!

🌈🌈இருப்பிட சான்றிதழ் விவகாரத்தில் சிறு தவறு இருந்தாலும், சட்ட ரீதியாக நடவடிக்கை; வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.

🌈🌈கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் திட்டமிட்டப்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்.

🌈🌈வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசின் ஒப்புதல் அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

🌈🌈புதிய கண்டுபிடிப்புகளை வழங்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

🌈🌈பிராந்திய நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் - அமைச்சர் ஜெய்சங்கர்.

🌈🌈பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.

🌈🌈டெல்லியில் நேற்று  பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்.

🌈🌈பெரும் விபத்துக்களைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் இயக்க அமெரிக்கா அனுமதி.

🌈🌈அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு இடையே, கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

🌈🌈கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கனடா நாட்டினை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

🌈🌈கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் பயிற்றுவிக்க வேண்டும்&தமிழாசிரியர்களை நியமிக்க  வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையீடு

🌈🌈பல தனியாா் பள்ளி, கல்லூரி௧ளில் அதிக கட்டணத்தை வசூல் செய்வதால்

கல்விக் கட்டணத்தை அரசு கருவூலத்தின் மூலம் வசூலிக்க வேண்டும்

-உயர் நீதிமன்றத்தில் வழக்கு

🌈🌈இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் வினியோகத்திற்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

🌈🌈குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

👉குழந்தைகள் கடத்தல் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி

👉சிறார் நீதி சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

👉மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் ஒருவர் கூட பதவியில் இல்லாதது ஏன்?

👉டிராபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை? என கேள்வி

🌈🌈அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். மேலும், மழையால் மின்தேவை குறைவாக இருந்தாலும் பற்றாக்குறை ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

🌈🌈G.O 712-புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு

🌈🌈தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி தொடக்கம்

🌈🌈மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின.

🌈🌈உதகை, கொடைக்கானல் பகுதிகளில் அவசர மருத்துவ வான்வழி ஆம்புலன்ஸ் வசதி தற்போது உள்ளதா?" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

🌈🌈தமிழக காவல்துறையினருக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை - டி.ஜி.பி உத்தரவு

🌈🌈சர்வதேச அளவில் அதிக வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் உயர்கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா

🌈🌈வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை பார்வையிட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமனம்

🌈🌈இந்தாண்டு நீட் பயிற்சி பெற 18,000 மாணவர்கள் விண்ணப்பிப்பு

அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

🌈🌈கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறதா?: இன்று அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை

🌈🌈நவம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையைத் திரும்பப் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது

🌈🌈அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை.

🌈🌈உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: பல்கலைக்கழக ஆய்வில் முடிவு 

🌈🌈ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈சட்டப்படிப்பு -  விண்ணப்பங்களை அனுப்ப காலக்கெடு டிசம்பர் -5 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

🌈🌈புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 23.11.2020 க்கு பதிலாக வரும் 30.11.2020 முதல் தொடங்கப்படுதல் குறித்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் கடிதம் வெளியிட்டுள்ளார்.

🌈🌈கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி உயிர்நீத்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களில் உள்ளோருக்கு மருத்துவ படிப்பிற்கு உள்ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது  

🌈🌈கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாணவி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

🌈🌈10, 11, 12க்கு பொதுத்தேர்வு உண்டா? டிசம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர்  தகவல்.

🌈🌈சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியா்கள் பட்டியலைத் தயாரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🌈🌈தமிழக அரசு துறைகளில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி உதவி பொறியாளர்கள் உட்பட சிலபதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பளம் குறைக்கப்படுகிறது.

🌈🌈போலியான வெற்று பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங்கில் கண்டறியப்பட்ட 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.

ஆயிரத்து 276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

🌈🌈லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்தது உள்ளனர். 

- கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி 

🌈🌈ஏற்கனவே ஒப்பந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என மத்தியவர்த்தகத் துறை அமைச்சகம் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில் பாரத்நெட் திட்டத்திற்கு 2,222கோடியாக உயர்த்தி  அரசாணை வெளியீடு

🌈🌈அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாற்றுத் திறன் மாணவர்களின் வசதிக்காக சாய்தளம், கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதா?

அறிக்கை தாக்கல் செய்ய, CEO-க்களுக்கு கல்வித்துறை உத்தரவு.

🌈🌈மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழை சரிப்பார்க்க 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது 

- மருத்துவ கல்வி இயக்ககம் 

🌈🌈யாரும் கோரிக்கை வைக்காமலேயே மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எனது எண்ணத்தில் உதித்தது

- முதல்வர் பழனிசாமி  

🌈🌈தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்ய பிரதா சாஹூ, வாக்காளர் பட்டியல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 10 பார்வையாளர்களுடன் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

🌈🌈விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் 13 நபர்கள் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது. 

- உயர்நீதிமன்ற மதுரை கிளை

🌈🌈தருமபுரியில் 50அடி ஆழ கிணற்றில் விழுந்த யானை 17 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...