கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சீர்காழி அருகே 3 மாதம் சம்பளம் வழங்காததால் அரசு பள்ளி ஆசிரியர் தர்ணா...

 

சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தைரியநாதன் (48). இவருக்கு அரசு வழங்கக்கூடியது பணப் பயன்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களாக வழங்கக்கூடிய மாத சம்பளம் ஆகியவற்றை வழங்காமல் பள்ளி தலைமையாசிரியர் பழிவாங்குவதாக ஆசிரியர் தைரியநாதன் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தைரியநாதன் நேற்று பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்பொழுது கொரோனா காலத்தில் தனக்கு சம்பளம் வழங்காததால் தன் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமல் பள்ளி பூட்டியே கிடப்பதால் தான் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பள்ளி வாசலில் உட்கார்ந்து செல்வதாகவும் ஆசிரியர் தைரியநாதன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தலைமையாசிரியர் மீதுள்ள புகார் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆசிரியருக்கு அவருக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...