கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள கூடிய பொதுத்தேர்வை குறித்து முதல்வர் ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன்...

 அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஆய்வுசெய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 

மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 303 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறினார்.  

தமிழக அரசு ஆந்திராவையோ, கேரளாவையோ கவனிக்க வேண்டியது இல்லை எனவும், மாணவர்களையும், பெற்றோர்களையும் கவனிக்கின்ற அரசு என்ற முறையில் பள்ளிக்கள் திறப்பு குறித்து வரும் 9ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டம் நடத்த அரசு முடிவுசெய்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து, பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களின் நலன்கருதி பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பல்வேறு கருத்துக்கள் வந்ததன் அடிப்படையில் தான் முழுமையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகவும் கொடுக்கலாம் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவங்கிய நீட்தேர்வு பயிற்சியில் 15 ஆயிரத்து 492 மாணவர்கள் பயிற்சி பெற உள்ளதாகவும், இன்னும் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், அடுத்தாண்டு பொதுத் தேர்வுகளை ரத்துசெய்வது குறித்து, துறையின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுதேர்வுகள் எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஆய்வுசெய்வார் என்று தெரிவித்தார்..

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...