கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அமெரிக்க அதிபர் தேர்வு நடக்கும் விதம்...

அமெரிக்காவில் மக்கள் அனைவரும் அதிபர் வேட்பாளருக்கே நேரடியாக வாக்களிக்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்தல் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும்.

ஒரு மாநிலத்தில் ஒரு அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அந்த மாநிலத்துக்குரிய தேர்தல் சபை உறுப்பினர் வாக்குகள் முழுவதும் அவருக்கு சென்றுவிடும்.

இப்படி தேர்வு செய்யப்படும் 538 தேர்தல் சபை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் மாநிலத் தலைமையகத்தில் டிசம்பர் 14ம் தேதி கூடி யார் அதிபர் ஆகவேண்டும் என்று வாக்களிப்பார்கள். எந்த கட்சிக்கு அதிக தேர்தல் சபை வாக்குகள் உள்ளனவோ அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இதன் மூலம் அதிபர் ஆவார்.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அதிகாரபூர்வ முடிவுகள் இந்த டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படவேண்டும்.

ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவேண்டும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு அமைச்சர்களை நியமித்துக்கொள்ளவும் திட்டங்களைத் தீட்டிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்படும்.

பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பதவியேற்பு விழாவில் இடம் பெறும். இந்த நிகழ்வு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் பில்டிங்கின் படிகளில் நடக்கும்.

இதற்குப் பிறகு பதவியேற்ற அதிபர் நேராக வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...