கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஜோ பைடன் - வாழ்க்கை வரலாறு...

ஜோ பைடன் கடந்த 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் ஸ்கர்டன் நகரில் ஜோ பைடன் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் பைடன், பழைய கார்களை வாங்கி விற்று வந்தார். தாய் கேத்தரின் ஜுன், அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

குடும்பத்தின் மூத்த மகனான ஜோ பைடன், ஒரு தங்கை, 2 தம்பிகளுடன் நடுத்தர குடும்ப பின்னணியில் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் மிகவும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். கடந்த 1965-ல் வரலாறு, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். 1968-ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரின் சட்ட ஆலோ சகராக பணியைத் தொடங்கிய பைடன், 1970-ல் ஐனநாயக கட்சியில் இணைந்தார். முதலில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 1972-ம் ஆண்டில் டெலவர் செனட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 29 வயது. மிக இளம்வயதில் செனட் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 எம்.பி.க்களில் பைடனும் ஒருவர்.

கடந்த 1966-ம் ஆண்டில் நீலியா ஹண்டரை, ஜோ பைடன் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் பிறந்தனர். 1972 டிசம்பரில் நேரிட்ட விபத்தில் அவரது மனைவி நீலியா ஹண்டரும் மகள் நவோமியும் உயிரிழந்தனர். 2 மகன்கள் படுகாயங் களுடன் உயர் தப்பினர். மகன்களை கவனித்துக் கொள்வதற்காக செனட் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் ஆலோசனையால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். அதன்பின், 1977-ம் ஆண்டில் மருத்துவர் ஜில் ஜேக்கபை, பைடன் 2-வது திருமணம் செய்தார். அவருக்கு ஆஸ்லே என்ற மகள் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 6 முறை செனட் அவைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார்.

மூத்த மகன் மரணம்

ஜோ பைடனின் மூத்த மகன் பவ் பைடன், ராணுவத்தில் இணைந்து இராக் போரில் பங்கேற்றார். 2015-ம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக பவ் பைடன் உயிரிழந்தார். இதுவும் ஜோ பைடனின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மூத்த மகனின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த பைடன், தற்போதைய அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டினார்.

ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான அவர், அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது. இந்திய, ஆப்பிரிக்க வம்சாவளி யைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக பைடன் தேர்வு செய்தார். கமலா வின் பூர்வீகம் குறித்து பைடன் பலமுறை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

டெலவரில் உள்ள ஜோ பைடனின் அலுவலகம் மற்றும் துணை அதிபராக அவர் பதவி வகித்த போது இந்திய வம்சாவளி அதிகாரிகளே அவருடன் இணைந்து பணியாற்றினர். இதை அவரே பெருமையாக கூறியுள்ளார்.

‘‘அமெரிக்க அதிபராக பதவி யேற்ற பிறகு கரோனா வைரஸ், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன். அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவேன்" என்று பைடன் அறிவித்திருப்பது அமெரிக்கர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...