கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joe Biden லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Joe Biden லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

🍁🍁🍁 மக்களை ஒன்றிணைப்பேன்; பிளவுப்படுத்த மாட்டேன்: ஜோ பிடன் உறுதி...

 


மக்களை ஒன்றிணைப்பேன்; பிளவுப்படுத்த மாட்டேன் என்று உறுதியளிப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த 77 வயதாகும் ஜோ பிடன், அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக வரும் ஜனவரி மாதம் அவா் பொறுப்பேற்கிறார். ஜோ பிடன், பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தவர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர்  டொனால்ட் டிரம்பை கடுமையாகப் போராடி தோற்கடித்த ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய வெற்றி உரையில், அமெரிக்க மக்கள் தெளிவான மகத்தான வெற்றியை தந்துள்ளனர். 

"மக்களை பிளவுப்படுத்தாமல், ஒன்றிணைக்க முற்படும் அதிபராக நான் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்; சிவப்பு மாகாணங்கள், நீல மாகாணங்கள் என பிரித்துப் பார்க்கமாமல்,  ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் சேவை செய்வோம். இனி நிற பேதமில்லா அமெரிக்காவை மட்டுமே பார்க்கப்போகிறோம்" என்று உறுதியளிக்கிறேன்.

"அமெரிக்காவை குணப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது." அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது.  "நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால் நான் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றியின் மூலம் தங்களது குரலை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை பெறாத வெற்றியை பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே அதிக வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக பெருமைக்கொள்கிறோம். இதைவிட சிறந்நாள் வரும் என்று நம்பிக்கையுடன் தனக்கு வாக்கு அளித்திருக்கிறீர்கள்.

"" அமெரிக்காவின் ஆத்மாவை மீட்டெடுப்பதற்கும், இந்த தேசத்தின், நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், உலக அரங்கில் மீண்டும் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்துவதற்கும் உழைப்போம்".

அதிபர் டிரம்பிற்கு வாக்களித்த அனைவருக்கும், இன்றிரவு ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கிறேன். இப்போது நாம் அனைவரும் கடுமையான சொல்லாட்சியைத் தள்ளி வைத்துவிட்டு, நோய்த்தொற்றை விரட்டவும், தேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வெப்பநிலையைக் குறைக்கவும், மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடுவதற்கான இந்த தருணத்திற்காக ஒற்றுமையாக உழைப்போம் என்று ஜோ பிடன் கூறினார். 

🍁🍁🍁 ஜோ பைடன் - வாழ்க்கை வரலாறு...

ஜோ பைடன் கடந்த 1942-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் ஸ்கர்டன் நகரில் ஜோ பைடன் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் பைடன், பழைய கார்களை வாங்கி விற்று வந்தார். தாய் கேத்தரின் ஜுன், அயர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

குடும்பத்தின் மூத்த மகனான ஜோ பைடன், ஒரு தங்கை, 2 தம்பிகளுடன் நடுத்தர குடும்ப பின்னணியில் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் மிகவும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். கடந்த 1965-ல் வரலாறு, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். 1968-ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடித்தார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரின் சட்ட ஆலோ சகராக பணியைத் தொடங்கிய பைடன், 1970-ல் ஐனநாயக கட்சியில் இணைந்தார். முதலில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 1972-ம் ஆண்டில் டெலவர் செனட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 29 வயது. மிக இளம்வயதில் செனட் அவைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 எம்.பி.க்களில் பைடனும் ஒருவர்.

கடந்த 1966-ம் ஆண்டில் நீலியா ஹண்டரை, ஜோ பைடன் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் பிறந்தனர். 1972 டிசம்பரில் நேரிட்ட விபத்தில் அவரது மனைவி நீலியா ஹண்டரும் மகள் நவோமியும் உயிரிழந்தனர். 2 மகன்கள் படுகாயங் களுடன் உயர் தப்பினர். மகன்களை கவனித்துக் கொள்வதற்காக செனட் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் ஆலோசனையால் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். அதன்பின், 1977-ம் ஆண்டில் மருத்துவர் ஜில் ஜேக்கபை, பைடன் 2-வது திருமணம் செய்தார். அவருக்கு ஆஸ்லே என்ற மகள் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 6 முறை செனட் அவைக்கு ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகித்தார்.

மூத்த மகன் மரணம்

ஜோ பைடனின் மூத்த மகன் பவ் பைடன், ராணுவத்தில் இணைந்து இராக் போரில் பங்கேற்றார். 2015-ம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக பவ் பைடன் உயிரிழந்தார். இதுவும் ஜோ பைடனின் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மூத்த மகனின் மறைவுக்கு பிறகு அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த பைடன், தற்போதைய அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டினார்.

ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான அவர், அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு கிடைக்க உள்ளது. இந்திய, ஆப்பிரிக்க வம்சாவளி யைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக பைடன் தேர்வு செய்தார். கமலா வின் பூர்வீகம் குறித்து பைடன் பலமுறை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

டெலவரில் உள்ள ஜோ பைடனின் அலுவலகம் மற்றும் துணை அதிபராக அவர் பதவி வகித்த போது இந்திய வம்சாவளி அதிகாரிகளே அவருடன் இணைந்து பணியாற்றினர். இதை அவரே பெருமையாக கூறியுள்ளார்.

‘‘அமெரிக்க அதிபராக பதவி யேற்ற பிறகு கரோனா வைரஸ், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவேன். அமெரிக்கர்களை ஒன்றுபடுத்துவேன்" என்று பைடன் அறிவித்திருப்பது அமெரிக்கர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

🍁🍁🍁 அமெரிக்க அதிபர் தேர்வு நடக்கும் விதம்...

அமெரிக்காவில் மக்கள் அனைவரும் அதிபர் வேட்பாளருக்கே நேரடியாக வாக்களிக்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்தல் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும்.

ஒரு மாநிலத்தில் ஒரு அதிபர் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றால் அந்த மாநிலத்துக்குரிய தேர்தல் சபை உறுப்பினர் வாக்குகள் முழுவதும் அவருக்கு சென்றுவிடும்.

இப்படி தேர்வு செய்யப்படும் 538 தேர்தல் சபை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் மாநிலத் தலைமையகத்தில் டிசம்பர் 14ம் தேதி கூடி யார் அதிபர் ஆகவேண்டும் என்று வாக்களிப்பார்கள். எந்த கட்சிக்கு அதிக தேர்தல் சபை வாக்குகள் உள்ளனவோ அந்தக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இதன் மூலம் அதிபர் ஆவார்.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அதிகாரபூர்வ முடிவுகள் இந்த டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படவேண்டும்.

ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்கவேண்டும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு அமைச்சர்களை நியமித்துக்கொள்ளவும் திட்டங்களைத் தீட்டிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்படும்.

பொறுப்புகளை புதிய அதிபரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு பதவியேற்பு விழாவில் இடம் பெறும். இந்த நிகழ்வு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் பில்டிங்கின் படிகளில் நடக்கும்.

இதற்குப் பிறகு பதவியேற்ற அதிபர் நேராக வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

🍁🍁🍁 ஜோ பைடன்: சொந்த வாழ்வில் சோகங்களை சந்தித்த மனிதர் மூன்றாவது முயற்சியில் அமெரிக்க அதிபராகிறார்...



  •  1900ம் ஆண்டுக்குப் பிறகு அதிக சதவீத வாக்காளர்கள் இந்த முறை வாக்களித்துள்ளனர். இதுவரை பைடன் 74 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது வரலாற்றில் இதுவரை எந்த அதிபர் தேர்தல் வேட்பாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது.
  • 8 ஆண்டு காலம் அதிபர் பராக் ஒபாமாவின் துணை அதிபராக தாம் பணியாற்றிய வெள்ளை மாளிகைக்கு தற்போது அதிபராக திரும்பி வரவிருக்கிறார் பைடன்.
  • 78 வயதாகும் பைடன், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராகவும் இருப்பார்.
  • ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபரையும் (கமலா ஹாரிஸ்) தம்முடன் வெற்றிப்பாதையில் அழைத்து வந்திருக்கிறார்.

மூன்றாவது முயற்சியில் வெற்றி

இதற்கு முன்பாக இரண்டு முறை அதிபர் பதவிக்கு முயன்றிருக்கிறார் பைடன்.

1988ம் ஆண்டு பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் பேச்சை காப்பியடித்து பேசியதாக அவரே ஒப்புக்கொண்டு அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார்.

2008ல் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஆவதற்கு முயர்சி செய்தார். பிறகு அவரே அந்தப் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார்.

8 ஆண்டு காலம் ஒபாமாவோடு துணை அதிபராக இருந்தது ஒபாமா ஆட்சியின் பெருமைகளில், அதன் மரபில் உரிமை கோர பைடனுக்கு உதவியாக இருந்தது.

ஜோ பைடனின் வாழ்வு தனி மனித சோகங்கள் நிரம்பியது என்பது பல அமெரிக்கர்களுக்குத் தெரியும்.

1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தமது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த தமது இளம் மகன்கள் பியூ மற்றும் ஹன்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறையில் இருந்து அவர் தமது முதல் செனட்டர் பதவிக்காலத்துக்கான பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

2015ல் அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் தமது 46வது வயதில் இறந்தார். 2016ல் அதிபர் பதவிக்கான போட்டியில் ஈடுபடாததற்கு இது ஒரு காரணம் என்று பைடன் கூறியுள்ளார்.

🍁🍁🍁 ஜோ பிடன் அமெரிக்க அதிபரானது - இந்தியாவுக்கு கெட்டது, பாகிஸ்தானுக்கு நல்லது; இது கட்டுக்கதையா... உண்மையா...?

 


ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய அதிபராக வருவதை விட டொனால்டு டிரம்ப் வந்தால் இந்தியாவுக்கு சிறந்ததாக இருந்திருக்கும் என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள், அவரைப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பராக பலர் பார்க்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி இந்தியர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதுஇல்லை. ஏனெனில் அவர் டிரம்ப்பைப் போலவே இந்தியாவுக்கு நல்லவராக இருப்பார், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையிலான வலுவான உறவுகளை பாதிக்காது. எவ்வாறாயினும், பிடனின் நியமனம் இந்தியாவுக்கு சில விஷயங்களை மாற்றக்கூடும் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சீனாவுடனான தற்போதைய எல்லை பதற்றத்தின் போது டிரம்ப் இந்தியாவை ஆதரித்தார் என்ற உண்மையை  மறுக்கவில்லை, ஆனால் 77 வயதான பிடன் இந்தியா மற்றும் சீனாவை  பேச்சுவார்த்தை அட்டவணையில் கொண்டுவர முயற்சிக்கக்கூடும்.டிரம்ப்பை போலவே இந்தியாவை நேரடியாக  ஆதரிக்கமாட்டார்.

ஒரு விஷயம் என்னவென்றால், டிரம்ப்பைப் போலவே, பிடனும் சீனாவுக்கு அண்டை நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை நிறுத்த நேரடியாக அழுத்தம் கொடுக்க மாட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை பிடன் மறுத்துவிட்டார் என்பதையும், 370 வது பிரிவை ரத்து செய்வது குறித்து துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸின் வார்த்தைகளும் இந்தியா மறக்க முடியாத ஒன்று என்பதை நினைவு கூரவேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றை பிடென் மறுத்துவிட்டார் 

காஷ்மீரிகள் உலகில் தனியாக இல்லை என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். கோரிக்கை வைத்தால் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது, ”என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், பிடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு இந்த பிரச்சினைகளை எழுப்ப விரும்ப மாட்டார் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், அமெரிக்காவின் புதிய அதிபராக பிடன் உறுதிமொழி எடுக்கிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் மகிழ்ச்சியடைகிறது என்று பரவலாக கூறப்படுகிறது. பிடன் ஒரு முன்னாள் தூதர் மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார், அதுதான் பாகிஸ்தான் அவருக்காக பிரார்த்தனை செய்கிறது.

2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கவுரவ 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' விருது வழங்கியது. ஜோ பிடன் மற்றும் செனட்டர் ரிச்சர்ட் லுகர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு 1.5 பில்லியன் டாலர் இராணுவமற்ற உதவிகளைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை முன்வைத்தனர்.

ஜனாதிபதியாக பிடென் இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய தூதரக சகாப்தத்தை திருப்பித் தருவார் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2011 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் உலகின் மிகவும் தேடப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் கொன்றபோது, பிடன் பாகிஸ்தான் பிரதேசத்தில் அமெரிக்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை விமர்சித்து இருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

இந்தியாவுடன் மிக நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அடுத்து அதிபராக உள்ள ஜோ பிடன் எந்த வகையில் இந்தியாவுடன் உறவைக் கையாள்வார் என அமெரிக்கத் தேர்தலில் இல்லினோய் மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி பதில் அளிக்கும் போது

ஜோ பிடனும் இந்தியாவின் நெருங்கிய நண்பர்தான். அவர் செனட் உறுப்பினராக இருக்கும்போதுதான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள கமலா ஹாரீஸ் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். இவரும் இந்தியாவுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். ஆகையால் ஜோ பிடன் அதிபராகும்போது இந்தியாவுடனான நட்பு மிகவும் நெருக்கமாகவே இருக்கும் என கூறினார்.

மேலும் அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தகத்தை இன்னும் அதிகப்படுத்தலாம். இரண்டு நாடுகளிடையே முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிலும், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிலும் தொழில் தொடங்க முன்வர வேண்டும். ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிகம். இவர்களுக்கு கிரீன்கார்டு கொடுத்து அமெரிக்காவில் தொழில் தொடங்க அனுமதிக்கலாம் எனதெரிவித்து உள்ளார்.

🍁🍁🍁 அமெரிக்காவின் 46-ஆவது அதிபர் ஆகிறார் ஜோ பைடன்...

 






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...